கொரோனாவின் கோரம்!
உலக நாடுகளை தன் பிடியால் உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பலவித அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்தான சரியான விளக்கம் மக்கள் மத்தியில் அதிகம் அறியப் படாத ஒன்றாகவே காணப்படுகிறது.
கொரோனா பற்றிய ஒரு சிறு விளக்கம்:
இந்த வைரஸானது மிருகங்கள் மூலம் பரவியது எனவும் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளால் தவறுதலாக பரவப்பட்டிருக்கலாம் எனவும் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலைமையின் படி நாம் பாதுகாப்பான வழிகளை தேட வேண்டிய கட்டத்தில் உள்ளோம் என்பதே உண்மை. இந்த வைரஸ் காரணமாக சுமார் லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூச்சடைப்பு போன்றவை உருவாகும். சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நோய் தீவிரமாகும் பட்சத்தில் சிறுநீரகம் செயலிழப்பு, நியூமோனியா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகளின் நலனுக்காக பாடசாலைகளில் சுகாதார செயற்திட்டங்களை கொண்டு வருவது மிக சிறந்த முன்னெடுப்பாக அமையும் எனவும் அன்றாட வாழ்க்கையில் சுகாதார பழக்கங்களை கையாள வேண்டும் எனவும் உலக நாடுகளின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் வல்லரசு நாடுகளின் அரசியல் நோக்கம் காரணமாகவும் பரவவிடப்பட்டிருக்கலாம் என தகவல்கள் உலாவி வருகிறது. பயோ வார் எனப்படும் உயிரியலை தாக்கும் போர் முறையை சீனா பயன்படுத்திருக்கலாம். நுண்ணங்கிகள் மூலம் மனித இனத்தை பெருவாரியாக அழிக்கும் முறையே பயோ வார். இதை முதன் முதலாக ஜேர்மன் ராணுவம் முதலாவது உலக போரில் ஆந்த்ராக்ஸ், கிலாண்டேர்ஸ், காலரா போன்ற வைரஸ்களை பரவவிட்டு மனிதர்களை அழித்தது.
மேலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா சம்மந்தமான நிறைய வதந்திகளும் பரவி மக்களை வேறு வழிகளில் திசை திருப்பி வருகிறது. வேறெந்த தவறான வழிகளையும் தொடராமல் உடல்நலத்தை கருத்தில் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம்.