Blog Page 43

முடி கொட்டுவதை தடுக்கும் – முட்டை கடலை

அன்றாட வாழ்வில் வேலைப்பளு நிமித்தம் நாம் உண்ணும் உணவு நமக்கே விஷமாகின்றது.நம் உடலை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்வதில் உணவே அதிக செல்வாக்கு செலுத்துகிறது .
நம் உடல் பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகளை குறித்து நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். தலை முடி பிரச்சனைக்கு உதவுகின்ற உணவு தயாரித்தல் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

  • கொண்டைக்கடலை – ஒரு கப்
  • முட்டை – 1
  • தண்ணீர் – 3 கப்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
  • சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு தேக்கரண்டி
  • கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஊற வைத்த கொண்டை கடலையை 3 கப் தண்ணீர் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பின் வேறொரு கடாயில் எண்ணெய்விட்டு அதில் முட்டை, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் பொரிந்து லைட் பிரவுன் நிறத்துக்கு வந்ததும் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் பெருங்காயத்தூள், சாம்பார் பொடி போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்தால் சுவையான முட்டை கொண்டை கடலை ரெடி ..

கிழமையில் 3 நாட்கள் வீதம் காலை உணவாக உட்கொள்ளும் போது சுண்டலில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் முடிவளரச் செய்யும், முடிகொட்டுவதை நிறுத்தும். சருமத்துக்கும் நல்லது.

நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!

நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே! - உன்
கொண்டை அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு..

இப் பாடலை எங்கோ கேட்டது போல உள்ளதா?
இதுவே நாம் மறந்த நாட்டார் பாடல்களில் ஒன்று…

நாட்டார் பாடல்கள் என்பது நாட்டு புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடவாழ்விலும் தொழில் செய்யும் இடங்களிலும் பணி நேரங்களிலும் தங்கள் களைப்பை குறைக்கும் வகையில் பாடப்படும் பாடல்களே நாட்டார் பாடல்கள் எனப்படும்.

வாய் மொழி இலக்கியம், நாடோடி பாடல்கள், நாட்டு பாடல்கள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபு வழி பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரை பாடல்கள் என நாட்டார் பாடல்கள் பல் வகை பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சின்ன சுவாமி சுப்புரமணி பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் நாட்டார் பாடலில் ஈடுபாடு காட்டியதுடன் தமது பல்வேறு பாடல்களில் நாட்டார் பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்தியுள்ளார்கள். பிற இலக்கியங்களை போலவே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்.

1876-1878 ஆம், ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னையில் கடும் பஞ்சம் நிலவியது. அக்காலகட்டத்தில் ஏற்ப்பட்ட தமிழர் திருமணம், தமிழர் கலாசார சடங்குகள் முதலிய அனைத்தையும் பற்றிய தகவல்கள் உள்ளடக்கியதாக அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட நாட்டார் பாடல்கள் அமைகிறது .

கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய “மலையருவி” என்ற நூலில் இருந்து……

தாது வருஷப் பஞ்சத்திலே – ஓ சாமியே
    தாய்வேறே பிள்ளைவேறே – ஓ சாமியே
    அறுபது வருசம் போயி – ஓ சாமியே
    அடுத்தாப் போலே தாதுதானே – ஓ சாமியே
    தைப் பொங்கல் காலத்திலே – ஓ சாமியே
    தயிருக்கும் பஞ்சம் வந்ததே – ஓ சாமியே
    மாசி மாதத் துவக்கத்திலே – ஓ சாமியே
    மாடுகளும் பட்டினியே – ஓ சாமியே
    பங்குனிக் கடைசியிலே – ஓ சாமியே
    பால் மாடெல்லாம் செத்துப் போச்சே – ஓ சாமியே

 

சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை

தாலாட்டுப்பாட்டு ,முளைப்பாரிப்பாட்டு அல்லது கும்மிப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு,
நடைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிப்பாட்டு, நடவுப்பாட்டு, நெற்குத்திப்பாட்டு என வகைப்படுத்தலாம்.

மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையிலும் ஏதோ ஒரு வகை ஓசை முறையை பயன்படுத்தி தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து பாடப்பட்ட நம் தமிழர் நாட்டார் பாடல்களை நாம் மறக்காமல் நம் எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்ப்போம்.

இலங்கையில் பிரதானமான பொது சந்தை பெட்டா!

இலங்கையின் தலைநகரமான கொழும்பில் உள்ள பிரபல்யமான சந்தை பெட்டா சந்தை ஆகும். உள்நாட்டு வாடிக்கையாளர்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஈர்த்த பெட்டா சந்தையானது ஒரு புரியாத புதிராகவே காட்சியளிக்கிறது. பரபரப்பான வணிக பகுதியான பெட்டா  சந்தை ஓர் திறந்தவெளி சந்தை தொடராகும். இங்கு ஏராளமான மொத்த மற்றும் சில்லறை கடைகள், கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன.

மலிபன் தெரு

இந்த பகுதியில் எழுது கருவிகள் , பாடசாலை உபகரணங்கள் மற்றும் திருமண அழைப்பிதழ்கள் பிரபல்யமானதாகும் .

 

கபோஸ் லைன்  வெல்ஸ் தெரு 

இங்கே நீங்கள் பேக்கிங் பொருட்கள் மற்றும் கேக் பான்கள் செய்ய தேவைப்படும் அச்சுகள்  போன்ற உபகரணங்களையும்  கொள்வனவு செய்யலாம்.

பிரின்ஸ்  தெரு

கண்ணாடியிலிருந்து தயாரிக்கப்பட்ட  கைவண்ண பொருட்களையும் , இலத்திரனியல் உபகரணங்கள்  மற்றும் விளையாட்டு பொருட்களையும் இங்கே காணலாம்.

பங்க்ஷன்ல் தெரு 

இந்த தெரு வழக்கமான பாவனைக்கான பலவிதமான பொருட்களைக் கொண்டிருப்பதால் மிகவும் பிஸியாக இருக்கும். இங்கு  கைவினைப் பொருட்களை விற்கும் கடைகள் மற்றும்  வீட்டு அலங்கார பொருட்கள்  மற்றும் ரசாயன பொருட்களையும் காணலாம்.

 

மெயின் வீதி ஒழ்க்கோட் தெரு இரண்டாம் குறுக்கு சந்தி கயஸிர் தெரு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோரை பிரதான வீதியில் காணலாம். தயார் செய்யப்பட்ட ஆடைகள் , அணிகலன்கள் மற்றும்   ஜவுளி சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும்  பிரதான வீதியில் உள்ள  கடைகளில் மலிவான விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இரண்டாவது குறுக்கு தெருவில் வாடிக்கையாளரை கவரும் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

3வது குறுக்குதெரு

இங்கே  நீங்கள் பழுது பார்க்கும் உபகரணங்கள் ,வீட்டு உபகரணங்கள் ,மற்றும் அழகுசாதன பொருட்களையும் காணலாம்.

 

                                       சீனா தெரு

சீனா தெருவில்  கண்ணாடிப் பொருட்களுடன் வைபவ அலங்கார பொருட்களை  நீங்கள் காணலாம்.

 

                                   4வது குறுக்குதெரு

காலை வேளைகளில் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கும். உணவு பண்டங்களை மையமாக கொண்டு மொத்த வியாபாரங்கள் இங்கு அதிகளவில் நடைபெறுகிறது.

 

                                  1வது குறுக்குதெரு

அனைத்து விதமான கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் கையடக்கத்தொலைபேசிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம். நவீன தொழிநுட்ப கருவிகளின்  அணிகலன்களும் மலிவான விலையில் இங்கு கிடைக்கும்.

 

                                   மல்வத்த தெரு

காலணிகள், தோல் பைகள், பயணப் பைகள் போன்றவை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

 

சிறந்த பொருட்களை மிகவும் மலிவான விலையில் பெற கொழும்பு பெட்டா சந்தை உங்களுக்கு உதவும்.

 

 

 

 

index.php