அழகை நாடி முடி கொட்டுவதை தடுக்கும் – முட்டை கடலை

முடி கொட்டுவதை தடுக்கும் – முட்டை கடலை

2020 Feb 28

அன்றாட வாழ்வில் வேலைப்பளு நிமித்தம் நாம் உண்ணும் உணவு நமக்கே விஷமாகின்றது.நம் உடலை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்வதில் உணவே அதிக செல்வாக்கு செலுத்துகிறது .
நம் உடல் பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகளை குறித்து நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். தலை முடி பிரச்சனைக்கு உதவுகின்ற உணவு தயாரித்தல் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

  • கொண்டைக்கடலை – ஒரு கப்
  • முட்டை – 1
  • தண்ணீர் – 3 கப்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
  • சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு தேக்கரண்டி
  • கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஊற வைத்த கொண்டை கடலையை 3 கப் தண்ணீர் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.

பின் வேறொரு கடாயில் எண்ணெய்விட்டு அதில் முட்டை, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் பொரிந்து லைட் பிரவுன் நிறத்துக்கு வந்ததும் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் பெருங்காயத்தூள், சாம்பார் பொடி போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்தால் சுவையான முட்டை கொண்டை கடலை ரெடி ..

கிழமையில் 3 நாட்கள் வீதம் காலை உணவாக உட்கொள்ளும் போது சுண்டலில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் முடிவளரச் செய்யும், முடிகொட்டுவதை நிறுத்தும். சருமத்துக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php