கலை கலாசாரத்தை நாடி தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்

தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்

2020 Jun 9

 

நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களது உணவு பழக்கவழக்கமும் முக்கிய காரணமாக திகழ்கிறது.
அவர்கள் உணவாக உட்கொண்ட அனைத்து உணவுகளுமே மருத்துவத்தை கொண்டிருந்தமையால் அவ்வளவு எளிதில் நோய்கள் அவர்களை தொற்றிக்கொள்ளவில்லை . சிறுதானியங்கள் அதிகம் உட்கொண்ட அவர்கள் சிறுதானியங்களின் நன்மைகளை நமக்கு அனுபவம் ரீதியாக சொல்லி தந்துள்ளார்கள்.
தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள் அதிகம் செல்லவாக்கு செலுத்துகிறது.
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரகு

இது பண்டைய தமிழர்கள் பொதுவாக உட்கொண்ட தானியமாகும்.
தங்களது நாளாந்த உணவில் வரகை பயன்படுத்தி அதிக உணவு பண்டங்களை செய்து உண்டு மகிழ்ந்தனர் .
வரகு தானியம் அதிகளவில் சேமிக்கப்பட்டதன் காரணம் இதை பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வரகு 7 அடுக்கு தோல்களை கொண்டது .
வரகில் புரதம், கல்சியம், விட்டமின் B ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்பியுள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகின் பயன்பாடு தற்காலத்தில் குறைந்து வருவது வருத்தத்திற்குரிய விடயமே !

சாமை
பண்டைய காலத்தில் பயிரிடப்பட்ட சிறு தானியங்களில் சாமையும் ஒன்றாகும் அதிகம் பூச்சி இனங்கள் தாக்காத இச்சிறுதானியம் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
உடல் வலி , ஆண்மை குறைவு , உடற்சோர்வு போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டது.
அதிக மருத்துவ குணம் கொண்ட சாமையை பயன்படுத்தி சத்துமிக்க ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.

தினை

இறடி, ஏளல், கங்கு போன்ற பெயர்களில் தினை அழைக்கப்படும்.
10000 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்யப்படும் இத்தானியத்தை விலங்குகளுக்கும் உணவாக பயன்படுத்தினர் பண்டைய தமிழர்கள்.
புலவர் பெருங்கெளசிகனார் , குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினையின் பயன்பாடு மக்களோடு மக்கள் கலந்து இருந்ததை உறுதி செய்கிறது.

குதிரைவாலி
தமிழர்களின் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தானியமாக குதிரைவாலி காணப்படுகிறது. இது ஒரு புன் பயிர் வகையை சார்ந்தது
நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாக பயிரிடப்படுகிறது.
இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள்

கம்பு

தமிழர்கள் உடல் உஷ்ணத்தை குறைத்து கொள்ளுவதற்கு கம்பை பயன்படுத்தினர்
கம்பிலிருந்து அடை ,கூல், காமக்கலி என்பன தயாரிக்கப்பட்டது.
தமிழர் பண்பாட்டில் விருந்தினரை கம்பங்கூழ் கொடுத்தே வரவேற்றனர் .
தற்காலத்தில் கம்பின் பயன்பாடு குறைந்ததற்கு காரணம் கம்பை உற்பத்தி செய்ய அதிக வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்.

கேழ்வரகு

குரக்கன் என்று அழைக்கப்படும் கேழ்வரகு தற்காலத்தில் சக்கரை நோயாளிகள் சாப்பிடும் தானியம் என்று அறியப்படுவது கவலைக்குரிய விடயமே . பண்டைய தமிழர்கள் தங்களது உடல் நிலையை நோயில்லாமல் பேணுவதற்கு கேழ்வரகு அதிகம் உதவி செய்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
அனைத்து விதமான வயதினருக்கும் நன்மையை மட்டுமே செய்ய கூடிய குரக்கனை அன்றாட உணவில் நாமும் பயன்படுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php