அனைத்தையும் நாடி  ஏறுமுக இலக்கங்கள் | தமிழ் மொழியில் !

ஏறுமுக இலக்கங்கள் | தமிழ் மொழியில் !

2020 Aug 14

செம்மொழியாம் தமிழ்மொழியில் காணப்படும் பல சொற்கள் நாம் இன்னும் அறிந்திராதவைகளாகவே உள்ளன. இன்று வரை நமக்கு கோடிக்கு மேல் தமிழில் இலக்கங்களை குறிப்பிடும் சரியான சொற்கள் தெரியாது. கால், முக்கால், அரைக்கு கீழ் உள்ள பின்னங்களை குறிப்பிடும் சரியான தமிழ் சொற்கள் தெரியாது. இவ்வாறாக நாம் அறியாத பல சொற்கள் தமிழில் உள்ளன. அவ்வாறான சொற்களின் தொகுப்பு தான் இந்தப் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளோம்.

ஏறுமுக இலக்கங்கள் (ஒன்றிலும் கூடிய பெறுமானம் உடைய இலக்கங்கள்)

1 = ஒன்று (one)
10 = பத்து (ten)
100 = நூறு (hundred)
1000 = ஆயிரம் (thousand)
10000 = பத்தாயிரம் ten thousand)
100000 = நூறாயிரம் (hundred thousand)
1000000 = பத்து நூறாயிரம் (one million)
10000000 = கோடி (ten million)
100000000 = அற்புதம் (hundred million)
1000000000 = நிகர்புதம் (one billion)
10000000000 = கும்பம் (ten billion)
100000000000 = கணம் (hundred billion)
1000000000000 = கற்பம் (one trillion)
10000000000000 = நிகற்பம் (ten trillion)
100000000000000 =பதுமம் (hundred trillion)
1000000000000000 = சங்கம் (one quadrillion)
10000000000000000 = வெல்லம் (ten quadrillion)
100000000000000000 = அன்னியம் (hundred quadrillion)
1000000000000000000 =அர்த்தம் (one Quintilian)
10000000000000000000 = பரார்த்தம் (ten Quintilian)
100000000000000000000 = பூரியம் (hundred Quintilian)
1000000000000000000000 = முக்கோடி (one sextillion)
10000000000000000000000 = மஹாயுகம் (ten sextillion)

  • இறங்குமுக எண்கள் (ஒன்றிற்கும் குறைவான பெறுமானம் உடைய இலக்கங்கள்)
    1 = ஒன்று
    3/4 = முக்கால்
    1/2 = அரை
    1/4 = கால்
    1/5 = நாலுமா
    3/16 = மூன்று வீசம்
    3/20 = மூன்றுமா
    1/8 = அரைக்கால்
    1/10 = இருமா
    1/16 = மாகாணி (வீசம்)
    1/20 = ஒருமா
    3/64 = முக்கால் வீசம்
    3/80 = முக்காணி
    1/32 = அரை வீசம்
    1/40 = அரைமா
    1/64 = கால் வீசம்
    1/80 = காணி
    3/320 = அரைக்காணி முந்திரி
    1/160 = அரைக்காணி
    1/320 = முந்திரி
    1/102400 = கீழ் முந்திரி
    1/2150400 = இம்மி
    1/23654400 = மும்மி
    1/165580800 = அணு
    1/ 1490227200 = குணம்
    1/7451136000 = பந்தம்
    1/44706816000 = பாகம்
    1/312947712000 = விந்தம்
    1/5320111104000 = நாகவிந்தம்
    1/74481555456000 = சிந்தை
    1/489631109120000 = கதிர்முனை
    1/9585244364800000 = குரல்வளைப்படி
    1/575114661888000000 = வெள்ளம்
    1/57511466188800000000 = நுண்மணல்
    1/2323824530227200000000 = தேர்த்துகள்

இவ்வாறாக இலக்கங்களுக்கு இருப்பது போன்றே நாம் அன்றாடம் உபயோகிக்கும் அளவுகளுக்கும் நாம் அறிந்திராத சொற்கள் தமிழில் உள்ளன. அவ்வாறான சொற்கள் இதோ! உங்களுக்காக,

  • நீட்டலளவு
    10கோன் = 1நுண்ணணு
    10நுண்ணணு = 1அணு
    8அணு = 1கதிர்த்துகள்
    8கதிர்த்துகள் = 1துசும்பு
    8துசும்பு = 1மயிர்நுணி
    8மயிர்நுணி = 1நுண்மணல்
    8நுண்மணல் = 1சிறுகுடுகு
    8சிறுகுடுகு = 1எள்
    8எள் = 1நெல்
    8நெல் = 1விரல்
    12விரல் = 1சாண்
    2சாண் = 1முழம்
    4முழம் = 1பாகம்
    6000பாகம் = 1காதம்
    4காதம் = 1யோசணை
  • பொன் நிறுப்பதற்கு பயன்படுத்தப்படும் அளவு
    4நெல்எடை = 1குன்றிமணி
    2குன்றிமணி = 1மஞ்சாடி
    2மஞ்சாடி = 1பணவெடை
    5பணவெடை = 1கழஞ்சு
    8பணவெடை = 1வராகவெடை
    4கழஞ்சு = 1கஃசு
    4கஃசு = 1பலம்
  • பண்டங்கள் நிறுப்பதற்கு பயன்படுத்தப்படும் அளவு
    32குன்றிமணி = 1வராகனெடை
    10வராகனெடை = 1பலம்
    40பலம் = 1வீசை
    6வீசை = 1துலாம்
    8வீசை = 1மணங்கு
    20மணங்கு = 1பாரம்
  • முகத்தல் அளவு
    5செவிடு = 1ஆழாக்கு
    2ஆழாக்கு = 1உழக்கு
    2உழக்கு = 1உரி
    2உரி = 1படி
    8படி = 1மரக்கால்
    2குறுணி = 1பதக்கு
    2பதக்கு = 1தூணி
  • பெய்தல் அளவு
    300நெல் = 1செவிடு
    5செவிடு = 1ஆழாக்கு
    2 ஆழாக்கு = 1உழக்கு
    2உழக்கு = 1உரி
    2உரி = 1படி
    8படி = 1மரக்கால்
    2குறுணி = 1பதக்கு
    2பதக்கு = 1தூணி
    5மரக்கால் = 1பறை
    80பறை = 1கரிசை
    120 படி = 1பொதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php