அனைத்தையும் நாடி  பாரம்பரிய விளையாட்டு | கபடி

பாரம்பரிய விளையாட்டு | கபடி

2020 Aug 11

புழுதி பறந்திட மண் தரையில் விளையாடப்படும் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் கபடியும் ஒன்று. கிராம மக்களிடையே கபடி விளையாட்டு மிகவும் பிரபல்யமானது. இந்த கபடி விளையாட்டு ஆண்களால் மட்டுமன்றி பெண்களாலும் விளையாடப்படுகிறது இருப்பினும் பெண்களுக்கான கபடி விளையாட்டிற்கான ஆடுகளம் சற்று வித்தியாசமானது. வேறு வேறு கிராமங்களில் வாழ்கின்ற கபடி வீரர்களுக்கான வருடாந்த கபடி போட்டிகள் சிலகிராமங்களில் நடைப்பெறுவது உண்டு. ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் முன் வீரர்கள் எடுக்கும் பயிற்சியாகவும் கபடி விளையாட்டு திகழ்கிறது. அதாவது எதிரணியிலிருந்து வரும் வீரர் ஜல்லிக்கட்டு மாடு என கருதப்படுவார். அந்த வீரர் தன்னை தொட்டு விடாதபடி அவதானத்துடன் இருந்து அவரை மடக்கி பிடிப்பதை ஜல்லிக்கட்டு மாடு தன்னை முட்டாத படி காத்து அதனை அடக்குவதற்கு சமமாக கொள்ளுவர். கை+பிடி என்பது தான் கபடி என்ற சொல்லாக மாறுகிறது. இந்த விளையாட்டு தெற்காசிய நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. கபடி விளையாட்டினை சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு எனவும் அழைப்பர்.

கபடி விளையாட்டினை விளையாடுவதற்கான களம் எவ்வாறு அமைப்பது?
மேடுபள்ளம் இல்லாமல் சமதரையாகவும், மணல், மரத்தூள் அல்லது மண் பரப்பியதாக ஆடுகளம் அமைய வேண்டும். தரையில் மண், மரத்தூள் அல்லது மணல் பரப்ப காரணம் இவ் விளையாட்டில் கீழே விழுதல், எதிரணியினரால் இழுக்கப்படுதல் போன்றவை இடம் பெறுகையில் உடலில் கீறல்கள் ஏற்படக் கூடாதிருக்க வேண்டும் என்பதற்காகும். ஆடுகளத்தினை நீள் சதுரமாக அமைத்து நடுவில் ஒரு கோடிட்டு இரண்டாக பிரித்தல் வேண்டும். ஆடுகளத்தின் எல்லைகள் மற்றும் களத்ததைப் பிரிக்கும் கோடுகள் இரண்டு அங்குல அகலமானதாக இருக்க வேண்டும்.

  • கபடி விளையாட்டினை எத்தனை வீரர்கள் விளையாடலாம்?
    இந்த விளையாட்டில் இரு அணியினர் பங்கேற்பர். ஓர் அணியில் ஏழு பேர் வீதம் விளையாடுவர்.
  • கபடி விளையாட்டிற்கான நேர எல்லை என்ன?
    கபடி விளையாட்டிற்கான மொத்த நேரளவு 40 நிமிடங்கள் ஆகும்.
  • கபடி விளையாட்டினை எப்படி விளையாடுவது?ஓர் அணியிலிருந்து ஓர் வீரர் நடு கோட்டை தொட்டு ஒரே மூச்சில் “கபடி கபடி” என சொல்லிக் கொண்டு எதிர் அணயினர் இருக்கும் இடத்திற்கு செல்வார். அவ்வாறு சென்று எதிர் அணியிலிருக்கும் வீரர்களை தனது கை அல்லது காலால் தொட்டு விட்டு அவர்களிடம் பிடிபடாமல் மீண்டும் நடுகோட்டை தொட்டு தன் அணிக்கே திரும்புவது தான் கபடி விளையாட்டு.

  • கபடி விளையாட்டிலுள்ள விதி முறைகள் என்ன?
    விளையாட்டின் போது புற எல்லைக் கோடுகளை தாண்டி செல்லக் கூடாது.

எதிரணிக்கு சென்று எவரையும் தொட்டு விட்டு தன் அணிக்கே திரும்பி விட்டால் தொடுபட்டவர் ஆட்டமிழப்பார். அவ்வாறு தன் அணிக்கு திரும்பாது எதிரணியினரிடம் அகப்பட்டு விட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். “கபடி கபடி” என பாடுவதை நிறுத்தினாலும் சென்றவர் ஆட்டமிழப்பார்.

  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடுகளம் எவ்வாறு அமைய வேண்டும்?
    கபடி விளையாட்டில் ஆண்களுக்கான ஆடுகளம் 13மீற்றர்✖️10மீற்றர் பரப்பினை உடையதாகவும், பெண்களுக்கான ஆடுகளம் 11மீற்றர்✖️8மீற்றர் பரப்பினை உடையதாகவும் அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php