அனைத்தையும் நாடி  கொழும்பில் இஃப்தார் சிறப்பு மெனு கிடைக்கும் உணவகங்கள்

கொழும்பில் இஃப்தார் சிறப்பு மெனு கிடைக்கும் உணவகங்கள்

2021 May 1

நாம் அனைவரும் புனித ரமழான் மாதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ரமழான் மாதமானது பிராத்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளை எம்முள் அதிகரிக்கக் கூடிய ஓர் புனித மாதமாகும். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் தண்ணீர் இரண்டையும் தவிர்ப்பது வழக்கம். பொதுவாக முஸ்லிம் சகோதரர்கள் தமது ரமழான் விரதத்தினை சூரிய அஸ்தமனத்தின் போது முடிப்பர் (இஃப்தார்). நீங்கள் விரதத்தினை முடிக்கும் நேரத்தில் சிறப்பான உணவினை அதற்கேற்ற விலையில் சுவைத்திடக் கூடிய சில உணவகங்களின் பட்டியலினை இப்பதிவில் காணலாம்.

முஸ்லிம் சகோதரர்கள் தமது விரத்தினை முடிக்கும் போது பேரிச்சம் பழம் சாப்பிட்டு முடிப்பது வழக்கம். “என்ன? அவ்வளவு நேரம் எதுவுமே உண்ணாமல் பேரிச்சம் பழத்தினை உண்டு விரத்தினை முடிப்பார்களா?” என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம், இருப்பினும் விரதம் முடிப்பதற்காக பேரிச்சம் பழத்தினை உண்பதில் பல நன்மைகள் உண்டு என உங்களுக்கு தெரியுமா? பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான சர்க்கரை, நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் விற்றமின்கள் காணப்படுகிறது. இதனால் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு மற்றும் உடலின் பலத்தினை மீள நிரப்பி பழைய நிலைக்கு திருப்ப உதவுகிறது. இது இவ்வாறிருக்க நம் இலங்கை மற்றும் சகோதர நாடான தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் பேரிச்சம் பழத்திற்கு பதிலாக வேறொரு உணவை கொண்டு விரதம் முடிப்பதுண்டு. இது நம்மில் பலருக்கு பிடித்த உணவு எனவும் கூறலாம். அது தான் கஞ்சி. அனைவருக்கும் விளங்கும் படி கூற வேண்டுமேயானால் ‘நோன்புக் கஞ்சி’. இது அரிசி, பயறு மற்றும் இறைச்சி துண்டுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் லேசான மசாலத் தன்மையினை உணர முடியும். இந்த கஞ்சி உடலுக்கு சக்தியை மீட்டு தருவதோடு எளிதில் ஜீரணமாகிறது. இந்த இரண்டு உணவுகளுமே இஃப்தாருக்கான உணவுகள் தான்.

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதத்தின் பின் நீங்கள் உங்களுக்கான உணவினை தெரிவு செய்து விரதத்தினை முடிக்க சிறந்த சில உணவகங்களை நாங்கள் தேடி தெரிந்து பட்டியலிட்டுள்ளோம். இந்த உணவக பட்டியலை தயாரிக்கும் போது தற்போதுள்ள கோவிட்-19 நோய் பரவல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு உங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். நீங்கள் அனைவரும் வீட்டிலிருந்த படி பாதுகாப்பாக உணவினை உண்ணக் கூடிய வகையில் டெலிவரி மற்றும் டேக்-ஹவே உள்ள உணவகங்களை தெரிந்து பட்டியலிட்டுள்ளோம்.

கொழும்பு ரமதா ஹொட்டல் (Ramada Hotel Colombo)

இந்த ஆண்டு ரமழானை முன்னிட்டு ரமதா ஹொட்டலில் இஃப்தார் உணவுப் பொதிகள் அவர்களது மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இஃப்தார் பொதியில், பேரிச்சம் பழங்கள், கஞ்சி மற்றும் சிறறுண்டிகள் (சமோசா, ரோல்ஸ், சாக்லேட் எக்லர் போன்றவை) காணப்படும். இந்த பெக்கில் மேலதிகமாக அரபு உணவு வகைகளான அடுக்கு ரொட்டி மற்றும் பக்லாவா என்ற உணவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பொதி இருவருக்கு போதுமானது. நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது வாழ்க்கை துணை என, யாருடன் வேண்டுமென்றாலும் இந்த பொதியினை பகிர்ந்து கொள்ளலாம். இந்த பொதிகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

விலை: இப்தார் பொதிகள் – இருவருக்கு ரூபாய் 2,550
பிற பகுதிகள்: ரூபாய்500 – ரூபாய் 3,950
தொலைபேசி: 0766 645 507/0114 794 399
Instagram: https://www.instagram.com/ramadacolombo/
முகவரி: 30, சர் மொஹமட் மக்கன் மார்க்கர் மாவத்தை, கொழும்பு 03.

மிட்ஸிஸ் டெலிகேசிஸ் (Mitsi’s Delicacies)

2021 இற்கான மிட்ஸியின் இஃப்தார் மெனுவில் சிறப்பான இஃப்தார் பொதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இஃப்தார் பெக்குகளில் சாதாரண இஃப்தார் பெக், சேவரி இஃப்தார் பெக், லக்சரி இஃப்தார் பெக் மற்றும் BBQ இஃப்தார் பெக் என நான்கு வகைகள் காணப்படுகின்றது. இத்துடன் நீங்கள் வீட்டுச் சுவையில் செய்யப்பட்ட சொசேஜஸ், கோஃப்டாஸ் மற்றும் கெபாப் ஆகிவற்றையும் பெவரேஜஸ் மெனுவிலிருந்து ஃபலூடா, ஸ்ப்ரைட் அல்லது ஏதாவது ஒரு மொஜிட்டோவினை தேர்ந்து, உங்கள் நாவிற்கு விருந்தளியுங்கள். உங்களது எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறாதிருக்க மாலை 4 மணிக்கு முதல் ஓர்டர் செய்யுங்கள்.

விலை: இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 600
சேவரி இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 1,200
லக்சரி இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 2,000
BBQ இஃப்தார் பெக் – ஒருவருக்கு ரூபாய் 2,500
தொலைபேசி : 0777 163 090
Instagram: https://www.instagram.com/mitsisdelicacies/
முகவரி: 34 ஏ, பாகடல்லே ஆர்.டி, கொழும்பு 03.

அரேபியன் க்நைட்ஸ் (Arabian Knights)

மத்திய கிழக்கு உணவு வகைகளுக்கு பெயர் போன அரேபிய நைட்ஸ்யின் 2021 இற்கான இஃப்தார் மெனுவில் வியப்பூட்டும் அளவிலான உணவுகள் என ஏதுமில்லை. இங்கு மாட்டிறைச்சி சம்போசெக், ஃபாலாஃபெல்ஸ், ஹம்முஸ், மினி ஷவர்மாக்கள், கிரில்ஸ் மற்றும் இனிப்பு சுவையிலான முஹலபியா எனப்படும் டெசர்ட் (பொதுவாக ரோஜா அல்லது ஆரஞ்சு நீரினால் தயாரிக்கப்படும் ஒரு மில்க் புடிங்) போன்ற பாரம்பரிய மத்திய கிழக்கு உணவுகள் இவர்களது மெனுவில் காணப்படுகின்றன. இவற்றை தினசரி மாலை 6 மணி வரை நாம் டேக் ஹவே அல்லது டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,590
தொலைபேசி: 0112 301 031
Instagram: https://www.instagram.com/arabianknights_lk/
முகவரி: 377, காலி வீதி, கொழும்பு 03.

சேம்பர்ஸ் கொழும்பு – அட் பார்க் ஸ்ட்ரீட் மீயூ (Chambers Colombo – at Park Street Mews)

சேம்பர்ஸ் பலராலும் நன்கு அறியப்பட்ட மற்றுமொரு அரபு உணவகமாகும். இவர்கள் சிறப்பான மத்திய கிழக்கு உணவு வகைகளுடன் இந்த இஃப்தாரினை நிரப்ப தயாராக உள்ளனர். ஹரிசா ஹம்முஸ் முதல் சீஸ் சம்போசெக் மற்றும் மட்டன் முசாகன் ரோல்ஸ் வரையும் அரபு ரொட்டி மற்றும் தபூலே (சாலட்) போன்றவற்றுடனும் இந்த இஃப்தாரில் பரிமாற தயாராக உள்ளனர்.

இவற்றை இருவர் மற்றும் நால்வர் உண்ணக் கூடிய வகையில் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களது மெனு பற்றிய போதுமான தகவல்களை உங்களுக்கு அளித்துள்ளோம் என நம்புகிறோம். இன்றே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இணைந்து இந்த மெனுவினை அனுபத்திடுங்கள். ஊபர் ஈட்ஸ் மற்றும் பிக் மீ மூலமாகவும் அல்லது டேக்-ஹவே மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மாலை 5.30 மணிக்குள் உங்களது ஓர்டர்களை பதிவு செய்ய மறவாதீர்கள்.

விலை: இருவருக்கு ரூபாய் 2,600
நால்வருக்கு ரூபாய் 4,900
தொலைபேசி: 0772 100 009
Instagram: https://www.instagram.com/chamberscolombo/
முகவரி: 48 டி, பார்க் ஸ்ட்ரீட், கொழும்பு 02.

கஃபே நுகா (Café Nuga)

கஃபே நுகா பல புதிய உணவு வகைகளுடன் இந்த இஃப்தாரை மேலும் சிறப்பானதாக மாற்ற தயாராக உள்ளது. ஒரு குறிப்பிட்டளவு பிறீமியம் டேட்ஸ், ஃபெட்டவுஷ் சாலட், பிட்டர் ப்ரெட், ஹம்முஸ் ஹரிரா (பயறு, தக்காளி, சிக் பீஸ் மற்றும் வெர்மிசில்லி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான சூப்) மற்றும் குனாஃபா போன்ற மத்திய கிழக்கு உணவு வகைகள் சில சேர்த்து பரிமாறப்படுகின்றன. தாவரங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாக இருப்பினும் சரி மாமிசத்தினை கொண்டு தயாரிக்கப்படுவதாக இருப்பினும் சரி, உணவின் freshness மாறாத விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு பின் இவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒரு போர்ஷன் ரூபாய் 980
தொலைபேசி: 077 344 5377
Instagram: https://www.instagram.com/cafe_nuga/
முகவரி: 69 ஏ, கிறீன் பாத், கொழும்பு.

பெப்பர்மின்ட் கஃபே (Peppermint Café)

இந்த இஃப்தாருக்கு பெப்பர்மின்ட் கஃபேயில் நான்கு விதமான சன்ட்விச்கள் (மாட்டிறைச்சி, கிறிஸ்பி சிக்கன், முட்டை மற்றும் மயோ, கறி சிக்கன்), ஐஸ்கிறீமுடனான வஃபல், ஐஸ்கிறீமுடனான ஃபலூடா, பாரம்பரிய நோன்பு கஞ்சி மற்றும் பேரீச்சம் பழங்கள் போன்றவை உள்ளடங்கலாக பரிமாறப்படுகின்றது. இது ஒரு முழுமையான ஆரோக்கியமான இஃப்தார் உணவாக விளங்குகிறது. இவை முழு நேரமும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் உள்ளன.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,200
தொலைபேசி: 0756 320 420
Instagram: https://www.instagram.com/peppermintcafe_srilanka/
முகவரி: 76, விஜேரமா மாவத்தை, கொழும்பு 07.

ஸ்ட்ரீட் பர்கர் (Street Burger)

ஸ்ட்ரீட் பர்கரின் மூன்று பேரீச்சம் பழங்கள், மாட்டிறைச்சி அல்லது சிக்கன் கூப்பர்ஸ் பர்கர், 2 கிறிஸ்பி சிக்கன் ரிப்பல் ஸ்ட்ரைப்ஸ், ஃப்ரைட் பூண்டு ரொட்டி, ஃப்ரைஸ், இரண்டு சொசேஜஸ், பெவரேஜ் மற்றும் தண்ணீர் ஆகியன உண்மையில் அந்த விலைக்கு ஏற்ற மதிப்பினை கொண்டுள்ளன. துரித உணவில் அதிக நாட்டம் உள்ளவர்களுக்கு இந்த பெக் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

குறிப்பு: பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே.

விலை: டேக்-ஹவேக்கு ஒருவருக்கு ரூபாய் 990
Ubereats இல் ஒருவருக்கு 1,290
தொலைபேசி: 0112 595 559/0777 887 777/0777 179 179
Instagram: https://www.instagram.com/streetburgersl/
முகவரி: 34, ரம்யா வீதி, கொழும்பு 04.

இன்டல்ஜ் டெசர்ட் கோ (Indulge Desserts Co)

கொழும்பில் பெல்ஜியம் சாக்லேட்டில் நிபுணத்துவம் பெற்ற உணவகமொன்று இஃப்தார் பெக்கினை வழங்கினால்? உங்களில் யாராவது வேண்டாமென சொல்வீர்களா என்ன?. அவ்வாறாக இன்டல்ஜ் டெசர்ட் கோ உணவகத்திலிருந்து இந்த ரமழானிற்கான ‘இஃப்தர் இன்டல்ஜென்ஸ்’ என இரண்டு பெக்குகளை கொண்ட செட்டினை மெனுவில் சேர்த்துள்ளனர். ஒவ்வொரு பெக்கிலும் பேரிச்சம் பழங்கள், தண்ணீர், கஞ்சி, சமோசாக்கள் மற்றும் தாகத்தை தணிக்க கூடிய ரெட் சில்லர் மற்றும் மின்ட் லெமனேட் ஆகியவை அடங்குகின்றன. அத்துடன் சாக்லெட் ப்ரௌனி டிப் ட்ரீட்டும் அடங்கும். உங்கள் இஃப்தாரினை இனிமையானதாகவும் எளிமையானதாகவும் மாற்ற விரும்பினால், இந்த பெக்குகள் உங்களின் சிறந்த தேர்வாக அமையும்.

விலை: பெக்கேஜ் 01 – ஒருவருக்கு ரூபாய் 850
பெக்கேஜ் 02 – ஒருவருக்கு ரூபாய் 1,800
தொலைபேசி: 0117 682 314/0117 460 008
Instagram: https://www.instagram.com/indulgedessertslk/
முகவரி;
29/5, ஸ்ட்ராட்போர்டு அவென்யூ, கொழும்பு 06.
14, மரைன் டிரைவ், கொழும்பு 03.

ப்ளெட்டர் மீ (Platter Me)

இந்த இஃப்தாரிற்கென நால்வர் உண்ணக் கூடிய நான்கு பெக்குகளில் ஒவ்வொன்றிலும் பழங்கள், நட்ஸ் மற்றும் ஃப்பின்கர் ஃப்புட்ஸ் உள்ளடங்கலான பெக்குகளை மெனுவில் சேர்த்துள்ளனர். இந்த பெக்கில் ஸ்ட்ரோபரி, திராட்சை, பாதாம், முந்திரி, பேரிச்சம் பழங்கள், பீட்டா ப்ரெட் ஸ்ட்ரைப்ஸ், ஹம்முஸ், சீஸ் மற்றும் ஒலிவ், ஒரு சில்லி கார்லிக் டிப், ஐந்து முட்டை போட்ஸ், மினி சன்ட்விச்கள் மற்றும் டோஸ்ட்டுகள் ஆகியன உள்ளடங்கும். இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இஃப்தார் பெக்காகும். எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் ஒரு நாளிற்கு முன் ஓர்டர்களை பதிவு செய்ய வேண்டும்.

விலை: நால்வருக்கு ரூபாய் 3,950
தொலைபேசி: 0759 304 812
Instagram: https://www.instagram.com/platterme23/
முகவரி: பால்மைரா அவென்யூ, கொழும்பு 03.

ISSO

ISSO இல் உள்ள இஃப்தார் மெனுவில் இரண்டு மீன் பெட்டிஸ், இவர்களது சிக்னேச்சர் உணவான ‘பிஸ்ஸோ’ வடை, ஸ்பிரிங் ரோல்ஸ் மற்றும் ISSO டோஸ்ட் ஸ்நெக்ஸ் ஆகியவை உள்ளடங்குகின்றன. அவர்கள் எதைச் செய்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர்கள் என்பது நாம் அறிந்ததே. கடலுணவு மற்றும் இறால் பிரியர்களுக்கு இந்த இஃப்தார் மென சிறப்பான ஓர் தேர்வாக அமையும். அதுமட்டுமன்றி ரமழான் மாதத்தை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக கஞ்சி வழங்குகின்றனர்.

விலை: ஒரு தட்டுக்கு ரூபாய் 1,000
தொலைபேசி: 0117 770 300
Instagram: https://www.instagram.com/prawncrazy/
முகவரி: 53, ஆனந்த குமாரசாமி மாவத்தை, கிறீன் பாத், கொழும்பு 07.

டொனர் என்ட் ட்ரம் (Doner and Durum)

பெரிய, வலுவான, சுவை நிறைந்த இறைச்சி மற்றும் சாஸ்கள், மத்திய தரைக் கடல் உணவகங்களுக்கே உரிய தனித்துவமான காரணிகளாகும். இவர்களது இஃப்தார் மெனுவானது மாலை 4.30 மணிக்கு பின் பெறக் கூடியதாக உள்ளது. இந்த மெனுவில் பேரிச்சம் பழங்கள், கஞ்சி, ஹம்முஸ், ரொட்டி ஆகியவற்றுடன் சிக்னேச்சர் உணவான சிக்கன் கெபாப் மற்றும் சிக்கன் போரேக் ஆகியவையும் உள்ளடங்கும். இந்த மெனு உங்கள் நாவிற்கு விருந்தளித்து புதியதொரு அனுபவத்தை பெற்றுத் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இங்கு நீங்கள் முன் கூட்டியே ஓர்டர்களை பதிவு செய்துக் கொள்ள முடியும்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,200
தொலைபேசி: 0779 977 993
Instagram: https://www.instagram.com/whatisdoner/
முகவரி: 128, திம்பிரிகஸாய வீதி, ஆஃப் ஜவட்டா வீதி, கொழும்பு 05.

இந்தியன் சம்மர் (Indian Summer)

இந்தியன் சம்மர் இந்திய கருப்பொருளுடன் கூடிய இஃப்தார் மெனுவினை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை நீங்கள் வீட்டிலோ, வேலைத் தளத்திலோ அல்லது பயணிக்கும் தருவாயிலும் கூட அனுபவிக்க முடியும். இந்த மெனுவானது அவர்களது கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இரு கிளைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இவர்களது இஃப்தார் மெனுவில் இரண்டு மட்டன் சமோசாக்கள், சிக்கன் லோலிபப்ஸ், கஞ்சி மற்றும் பேரிச்சம் பழங்களுடன் போடடொ வடை (potato dumplings) மற்றும் குலாப் ஜாமுன் ஆகிய ஸ்ட்ரீட் ஃப்புட்ஸ் வகைகளும் உள்ளடங்குகின்றன.

விலை: டேக்-ஹவேயில் ஒருவருக்கு ரூபாய் 700
UberEats இல் ஒருவருக்கு ரூபாய் 800
தொலைபேசி: 0112 662 112
Instagram: https://www.instagram.com/indiansummerlk/
முகவரி: 42, ஹார்டன் பிளேஸ், கொழும்பு 07.

பேக்ட் கொழும்பு (BAKED Colombo)

இந்த சிறிய உணகத்தில் இஃப்தாரினை முன்னிட்டு, ஏதாவது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சேவரி, இனிப்பு வகை மற்றும் பானங்கள் அடங்கலாக ஐந்து வகையான பெக்குகள் காணப்படுகின்றது. அதனடிப்படையில் சேவரிகளில் பர்க்கர், சப் மெரின், பானினிஸ் ஆகியவையும் இனிப்பு வகைகளில் சாக்லெட் ப்ரொஃப்பிட்ரோல்ஸ், எக்லயர்ஸ், டோனட்ஸ் மற்றும் குக்கீஸ் ஆகியவையும் பானங்களில் லைம், அன்னாசி மற்றும் பெஷன் ஆகியவையும் அடங்குகின்றன. முன் கூட்டியே ஓர்டர் செய்யும் முறையும் காணப்படுகின்றது.

விலை: ஒருவருக்கு ரூபாய் 890 முதல் ரூபாய் 990 வரை.
தொலைபேசி: 0777 154 454/0112 582 030
Instagram: https://www.instagram.com/bakedcolombo/
முகவரி: 37 ஏ, எலிபங்க் வீதி, கொழும்பு 05.

டீ அவென்யூ (Tea Avenue)

டீ அவென்யூ ஒரு சிங்கிள் ஒப்ஷனாகும். இங்கு மூன்று விதமான இஃப்தார் மெனுக்கள் காணப்படுகின்றன. அவையாவன சிக்கன் கஞ்சி, தேனினால் சுவையூட்டப்பட்ட கோழி மற்றும் மாஷ்ட் உருளைக்கிழங்கு, பேரிச்சம் பழங்கள் மற்றும் சாக்லேட் சிப் குக்கீ ஆகியனவாகும். இவை மிகவும் எளிமையான மெனுக்களாகும். மாலை 4 மணி முதல் டீ அவென்யூவின் எந்தவொரு கிளையிலும் இவற்றை டேக்-ஹவே அல்லது டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 1,490
தொலைபேசி: 0773 367 879
Instagram: https://www.instagram.com/teaavenue1936/
முகவரி: 4, ஜாவத்த வீதி, கொழும்பு 05.

பாண் பாண் (Paan Paan)

இந்த 2021 இஃப்தாரை சிறப்பாக மாற்றுவதாக பாண் பாண் உணவகத்தின் மூன்று காலையுணவு பொதிகள் விளங்குகின்றன. இவை A, B மற்றும் C என அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த பெக்குகள் ஒவ்வொன்றிலும் மூன்று செட் சேவரிகள், ஒரு இனிப்பு வகை, ஒரு பகுதி கஞ்சி மற்றும் பேரிச்சம் பழங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. சைவ மற்றும் அசைவ சைனிஸ் ரோல்ஸ், பஃப்ஸ், பெட்டிஸ், பைஸ், சமோசா, எக்லயர்ஸ் மற்றும் ப்ரொபிட்டரோல்ஸ் ஆகிய உணவுகள் பெக்குகளுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி இடம் பிடிக்கின்றன. ஒவ்வொரு நாளிற்கும் ஏற்றவாறு பெக்குகளில் மாற்றம் நிகழும். தினமும் மாலை 4 மணிக்கு பின் எந்தவொரு பாண் பாண் கிளைகளிலும் நீங்கள் இந்த பெக்குகளை டேக்-ஹவே மற்றும் டெலிவரி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விலை: ஒரு பொக்ஸுக்கு ரூபாய் 450 (ஊபர் ஈட்ஸ் மற்றும் பிக் மீ ஆகியவற்றில் உணவின் விலை வேறுபடுகின்றது)
தொலைபேசி: 0117 500 226/0770 500 020
Instagram: https://www.instagram.com/paanpaanlk/
முகவரி: 84, லோரென்ஸ் வீதி, கொழும்பு 04.

கொழும்பு சாய்வாலா (Colombo Chaiwala)

கொழும்பில் உள்ள ஹொட் சில் ஸ்பொட் இது தான். இந்த ரமழானை முன்னிட்டு டேக்-ஹவே மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய இஃப்தார் உணவுகள் காணப்படுகின்றது. உதாரணமாக மாட்டிறைச்சி மற்றும் பஞ்சாபி சமோசாக்கள் உடன் இன்னுமொரு புதிய உணவொன்று இஃப்தாரினை சிறப்பிப்பதற்காக மெனுவில் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரு கப் சூடான சாய்யுடன் உண்ணும் போது அது ஓர் புது விதமான அனுபவத்தினை பெற்றுத் தருகிறது.

விலை: ஒரு Item ரூபாய் 100 முதல் ரூபாய் 250
தொலைபேசி: 0769 665 638
Instagram: https://www.instagram.com/colombochaiwala/
முகவரி: 12, லில்லி அவென்யூ, வெள்ளவத்தை.

டைனெர்ஸ் லோன்ச் (Diner’s Lounge)

எளிமையான மற்றும் நம்மில் பலரது பட்ஜெட்க்கு ஏற்ற வகையிலான இஃப்தார் பெக்குகள் இவர்களது மெனுக்களில் காணப்படுகின்றன. இதில் கஞ்சி, சில சேவரி வகைகள் மற்றும் பானங்கள் ஆகியன உள்ளடங்கும். இங்கு இந்திய, அரபு மற்றும் இன்டர்கான்டினென்டல் போன்ற குஸின்களுக்கு உரிய சுவையில் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை டேக்-ஹவே மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாலை 5 மணிக்கு முதல் உங்களது ஓர்டர்களை பதிவு செய்யுங்கள்.

விலை: ஒருவருக்கு ரூபாய் 425
தொலைபேசி: 011 255 9344
Instagram: https://www.instagram.com/dinerslounge.lk/
முகவரி: 18 ஏ, பல்மைரா அவென்யூ, கொழும்பு 03.

சனாஸ் (Chana’s)

சனாஸ் ஒரு புகழ்பெற்ற வட இந்திய உணவகம். இவர்கள் தங்களது மெனுக்களில் ஷவர்மாஸ், டிக்காஸ், கெபாப்ஸ், சமோசாக்கள் மற்றும் ஸ்பிரிங் ரோல்ஸ் போன்ற பல வகையான உணவுகளை பரிமாறி, உங்கள் இஃப்தாரை முழுமை செய்வதற்கு தயாராக உள்ளனர். இந்த உணவுகள் அனைத்துமே இந்திய பாரம்பரிய சுவையால் முழுமை பெற்றிருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

விலை: ஒரு Item ரூபாய் 45 முதல் ரூபாய் 480 வரை.
தொலைபேசி: 0117 939 788/0775 133 655
Instagram: https://www.instagram.com/chanas.lk/
முகவரி: 54, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு 06.

பின்க் ப்ளெட்டர் (Pink Platter)

இந்த ரமழான் காலத்திற்கென மூன்று இஃப்தார் மெனுக்களை அறிமுகம் செய்துள்ளனர். அவையாவன கஞ்சி மற்றும் பேரிச்சம் பழம் கொண்ட ஓர் மெனு, சமோசா, பிட்சா, பெட்டிஸ், ரோல்ஸ் மற்றும் பேஸ்ட்ரிகள் கொண்ட ஓர் மெனு, ப்ரௌனி, கப் கேக்ஸ் மற்றும் பால் டொபி போன்ற இனிப்பு வகைகளை கொண்ட மெனு என்பனவாகும். உங்களுக்கு வேண்டுமென்றால் குளிரூட்டப்பட்ட சோர்ட் ஈட்ஸ்களையும் தெரிவு செய்யலாம். இவையனைத்துமே டெலிவரி செய்வதற்கு தயாராக உள்ளன. நண்பகல் 12 மணிக்கு முதல் உங்களது ஓர்டர்களை பதிவு செய்ய தவறாதீர்கள்.

விலை: ஒரு பெக் ரூபாய் 550
தொலைபேசி: 0778 755 455
Instagram: https://www.instagram.com/pinkplatter.sl/
முகவரி: கோயில் வீதி, கலுபோவில, தெஹிவளை.

க்ரேவ்ஸ் கஃபே (CRAVES Café)

பைஸ் முதல் பேஸ்ட்ரிகள் வரை, ஸ்டஃப்ட் பன்கள் முதல் பிட்சாக்கள் வரை, எக்லயர்ஸ் முதல் சீஸ் கேக்ஸ் வரையான சுவையான இனிப்பு பண்டங்களை கொண்டு உங்கள் இஃப்தாருக்கு இனிமை சேர்க்கவுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய உணவொன்றை அறிமுகம் செய்வதோடு அடுத்த நாளிற்கான உணவை முதல் நாளே ஓர்டர் செய்யும் முறையினையும் கையாள்கின்றனர்.

விலை: ஒரு Item ரூபாய் 100 முதல் ரூபாய் 200 வரை.
தொலைபேசி: 0777 116 651
Instagram: https://www.instagram.com/craves.cafe/
முகவரி: 38, க்ளென் அபர் பிளேஸ், கொழும்பு 04.

இந்த 2021ஆம் ஆண்டின் ரமழானிற்கான சிறப்பான இஃப்தார் மெனுக்களை உங்களுக்கு கையளித்து விட்டதாக நம்புகின்றோம். நம்மால் முடிந்தவரை சமூக இடைவெளியை பின்பற்றி இந்த ரமழானை சிறப்பான முறையில் கொண்டாடுவோம். இந்த பட்டியலில் உள்ள உணவக மெனுக்கள் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறோம். நீங்கள் இந்த உணவகங்களுக்கு சென்று சுவைத்த அனுபவங்களையும் நாங்கள் பதிவிட தவறியவற்றையும் கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php