அறிவியலை நாடி இலங்கையின் உள்நாட்டுப் பறவையினங்கள்

இலங்கையின் உள்நாட்டுப் பறவையினங்கள்

2021 May 3

பெரிய மற்றும் சிறிய என பல் வகையான உயிரினங்கள் வாழ்கின்ற சரணாலயமாக இலங்கை தீவு விளங்குகின்றது. இங்கு காணப்படும் 492 பல் வகை உயிரினங்களில், 34 இனங்கள் உள்நாட்டு வகைகளாகும். இந்த பதிவின் ஊடாக நம் நாட்டிற்கு உரிய அரிதான மற்றும் உங்களில் பலர் அறிந்திராத சில பறவை இனங்கள் பற்றி அறிவோம்.

செரண்டிப் ஸ்காப்ஸ் ஆந்தை (Serendib Scops Owl)

சமீபத்தில், அதாவது 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிதுல்கல காட்டிலிருந்து வந்த பூ-ஓ (poo-oo) என ஒலித்த ஓசையினை கொண்டு ஓர் பிரபலமான பறவைகள் சரணாலயத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையான ஆந்தைகள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் சிறிய ஆந்தை இனமாகும். இதனை பெரும்பாலும் ஈர மண்டல பகுதிகளில் காணலாம்.

இலங்கை ஜங்கிள்ஃபோல் (Sri Lankan junglefowl)

இலங்கை ஜங்கிள்ஃபோலின் ஆண் இனமானது இலங்கையின் தேசிய அடையாளமாக திகழ்கின்றது. இந்த பறவை இனத்தினை ஈர மற்றும் வெப்பமான இரு மண்டலங்களிலும் காண முடியும். உதாரணமாக யால, கித்துல்கல மற்றும் சிங்கராஜ போன்ற பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கும். இதன் பெண் இனமானது நிறத்தில் மங்கலானதாகவும் குறிப்பிட்ட ஓர் வளர்ச்சியுடையதாகவும் இருக்கும்.

இலங்கை பச்சை புறா (Sri Lankan green pigeon)

பிரகாசமான கண்களின் கவனத்தை ஈர்க்க கூடிய மஞ்சள் மற்றும் ஆலிவ் பச்சை நிறமும், இருண்ட நிறங்களாலான இறக்கைகளும், நீலநிற கண்களும் கொண்ட ஓர் அழகிய புறா இதுவாகும். இது புத்திசாலித்தனமாக செயற்படக் கூடிய பறவையாகும். இதனை வனப்பகுதிகளில் ஈரமான சூழலில் காணலாம்.

இலங்கை தொங்கும் கிளி (Sri Lankan hanging parrot)

இதனை இலங்கை லோரிகீட் எனவும் அழைக்கின்றனர். இந்த கிளியானது, தனது வலுவான கால்களை பயன்படுத்தி மரக்கிளைகளில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். இது 13 சென்றிமீற்றர் நீளமும், பிரகாசமான பச்சை நிற உடலும் தலையில் சிறிய சிவப்பு நிற இணைப்பும் கொண்டிருப்பதனால் ஈரமண்டல காட்டு பகுதிகளில் இலகுவாக மறைந்து வாழ்கின்றது. இது நம் நாட்டிலுள்ள சாதாரண கிளிகளை விடவும் தனித்துவமானதாக விளங்குகின்றது.

இலங்கை நீல மாக்பி (Sri Lankan blue magpie)

ஈரமண்டல மலைப் பிரதேசங்களில் கட்டுப்படுத்தப்பட்ட அதே சமயம், இலங்கையில் மட்டும் காணக்கூடியதாக உள்ள அரிதான பறவை இனமாகும். இது காக்கை குடும்பத்தினை சேர்ந்ததாகும். நாம் எமது தோட்டப்பகுதியில் காணக்கூடியதாக உள்ள “மாக்பி” வகையானது உண்மையான மாக்பி வகையை சேர்ந்தவையல்ல. இது ராபின் மற்றும் ஓரியண்டல் ஃப்ளைகாட்சரின் இனத்தை சேர்ந்ததாகும். இது அரிதாகவே பறக்கின்றது. இதன் தோற்றமானது நல்ல நீல நிறம், பழுப்பு தலை மற்றும் சிவப்பு நிற கண்கள் என மிகவும் அழகானதாக இருக்கும். இது ஏனைய பறவைகளின் ஒலியினை கொண்டு அவற்றை பின்பற்றி செல்லும் திறன் உடையது. 1980 மற்றும் 1990களில் வெளியான 10 சென்ட் முத்திரையில் இந்த மாக்பியின் உருவம் இடம்பெற்றது.

இலங்கை சாம்பல் ஹார்ன்பில் (Sri Lankan grey hornbill)

இது வறண்ட மண்டல பிரதேசங்களில் வாழ்கின்றது. இது மரங்களின் துளைகளில் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது. ஆண் பறவையானது கூட்டின் வாயிலில் பெண்ணிற்கு உணவு வழங்கவும் சுவாசிக்கவும் சிறு பகுதியை விட்டு விட்டு, பிற பகுதிகளை மண் மற்றும் பிற பொருட்களால் அடைத்து கதவிடுகிறது. இது மலபார் பைட் ஹார்ன்பில்லினை விடவும் உருவத்தில் சிறியதாகவும் மெலிந்தும் காணப்படும். இதன் சொண்டில் தனித்துவமாக எலும்புகள் போன்ற தன்மை காணப்படும்.

சிவப்பு முகம் கொண்ட மல்கோஹா (Red-faced malkoha)

இது ஈர மற்றும் வெப்ப மண்டல பிரதேசங்களில் காணக்கூடிய ஓர் பறவையாகும். கொக்கு இனத்தின் ஓர் பிரிவாக இருந்த போதும் இதனை எளிதில் கண்டறிய முடிவதில்லை. இதன் பெயர் இதன் முகத்திலுள்ள சிவப்பு நிறத்தினால் வந்தது தான்.

சிவப்பு நிறமுள்ள ப்ளேம்பக் (Red-rumped flameback)

பிரகாசமான சிவப்பு நிற இறக்கைகள், கருப்பு நிற தலை மற்றும் சிவப்பு நிற சொண்டு என தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் பெரிய பறவையாகும். இந்த பறவை புத்திசாலித்தனமாக செயற்படக் கூடியது. இதனை ஈர மண்டல பிரதேசங்களில் காணலாம். கொழும்பு நகரில் உள்ள சிலரது வீட்டுத் தோட்டங்களுக்குக் கூட இவை அவ்வப்போது வந்து செல்வதுண்டு.

மங்கலான நீல ஃப்ளைகாட்சர் (Dull-blue flycatcher)

இந்த சிறிய மங்கலான நீலப்பறவை, இலங்கையில் 2010 இல் வெளியான 50 ரூபாய் தாளில் இடம்பெற்றது. இதனை பெரும்பாலும் ஈர மண்டல பிரதேசமான மத்திய மாகாணத்தில் காண முடியும். இதன் முட்டைகள் இளஞ் சிவப்பானதாகவும் பழுப்பு நிற புள்ளிகளுடனும் தோற்றமளிக்கும்.

இலங்கை மரப்புறா (Sri Lankan wood pigeon)

பெரிய மற்றும் திடகாத்திரமான உடற்கட்டமைப்பைக் கொண்ட அழகான ரெகல் தோற்றமுடைய புறா இதுவாகும். இது இலங்கையின் 25 சென்ட் தபால் முத்திரையில் இடம்பெற்றுள்ளது. இதனை பெரும்பாலும் தாவரங்கள் அதிகமுள்ள நிலப்பரப்பு அல்லது காடுகளில் காண முடியும். ஈர மண்டல பிரதேசத்தில் வாழும் இப்பறவையினை ஹார்டன் சமவெளியில் அதிகமாக காண முடியும். இதில் ஆண், பெண் என இரண்டுமே அழகாக தோற்றமளிக்கும்.

இலங்கையின் ஈர மண்டலத்திலிருந்து, மேற்கு பகுதி சுற்றி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வரை பல இடங்கள் உள்ளன. சிங்கராஜ வனத்தில் மட்டும் ஏறத்தாழ பத்தொன்பது உள்நாட்டு உயிரினங்கள் வாழ்கின்றன. இங்குள்ள புவியியல் தனித்துவமானது. மேலும் அடர்த்தியான, ஈரப்பதமான வெப்பமண்டல காடுகள் என பல பிரதேச பகுதிகளை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு உயிரினங்கள் பல இவற்றுள் மறைந்து தம்மை பாதுகாத்தபடி தமது வாழ்க்கையினை தொடர்கின்றன. இலங்கையில் காணப்படும் அரிதான உள்நாட்டு உயிரினங்கள் அனைத்துமே, அழிவு நிலையினை நோக்கிச் செல்லவில்லை. உதாரணமாக இலங்கையில் அவிஃபாவுனாக்கள் மிகவும் நலமாக தமது வாழ்வினை தடையின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இவ்வினத்தின் மீதான ஐ.யூ.சி இனது கவனயீர்ப்புக்கு அவசியமில்லை, எனக் கூறுமளவிற்கு நலமுடன் உள்ளன. இது இவ்வாறிருக்க மனிதர்களின் ஆக்கிரமிப்பினால் தமது இரவு நேர வாழ்வினை நிம்மதியாக தொடர முடியாத நிலைக்கு செரண்டிப் ஸ்காப்ஸ் ஆந்தை இனம் தள்ளப்பட்டுள்ளது. அதே போல் இலங்கை நீல மாக்பி மற்றும் இலங்கை மரப்புறா ஆகிய இனங்களும் தமது வாழ்வினை தொடர முடியாது தவிக்கின்றன.

இலங்கையில் புறாக்கள், கிளிகள் முதல் மாக்பீஸ் மற்றும் அரிதான இரவு நேர பறவைகளான ஜங்கிள்ஃபோல் மற்றும் ஆந்தைகள் என பல்லுயிரினங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள முப்பத்து நான்கு பறவையினங்களும் தமது உடல், அளவு மற்றும் வாழ்க்கை முறை என வெவ்வேறு விதத்தில் தனித்துவமானதாக திகழ்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php