அனைத்தையும் நாடி  அமெரிக்கர்களால் அதிகம் திருடப்படும் 10 பொருட்கள்

அமெரிக்கர்களால் அதிகம் திருடப்படும் 10 பொருட்கள்

2021 Jul 16

அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 பில்லியன் டாலர் பெருமதியான பொருட்களை கடைகளிலிருந்து திருடுகிறார்கள்.

இந்நாட்களில் அமெரிக்கர்கள் சில பொருட்களை பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கடை திருட்டு அதிகரித்து வருகிறது –

உலகளாவிய சில்லறை வியாபாரத்தில் திருடும் பொருட்கள்  பற்றிய அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 13 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை அமெரிக்க வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து கொள்ளையடித்துக் கொள்கின்றனர்.  கடந்த வருடம்,பாதிக்கப்பட்ட விற்பனைவர்களின் 36% சதவீதமான சரிவிற்கு வாடிக்கையாளர்களே காரணமாக இருந்தனர். கடைகளிலிருந்து திருடுதல், கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் திருடுதல், நிர்வாக மற்றும் வாடிக்கையாளர் அல்லது பொருட்களை வழங்கும் வழங்குனர்கள் மேற்கொள்ளும் மோசடிகள் போன்ற காரணிகளை சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
ஆன்லைன் தளங்கள் மூலம் திருடப்பட்ட பொருட்களை எளிதில் விற்பனை செய்தல், விற்பனை தளங்களில் குறைப்புக்களை மேற்கொள்ளுதல், மற்றும் கடை திருட்டு போன்றன ஒழுங்கமைக்கப்படாத சில்லறை குற்றங்களினால் அதிகரித்துவரும் பிரச்சினைகளாகும். குறைந்த ஆபத்து/ தாக்குதல் அல்லாத குற்றம் என பொதுக் கருத்து காரணமாக கடை திருட்டு தொடர்ந்து சில்லறைத் தொழிலை பாதிக்கிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விடுமுறை காலத்தில் கடை திருட்டு தொடர்பான பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித அறிக்கைகளும் இவ்விடுமுறை காலத்தில் எவ்வளவு தொகையான பொருட்கள் கடைகளிலிருந்து திருடப்பட்டுள்ளது என குறிப்பிடவில்லை. சில்லறை வியாபாரிகள் இவவிடுமுறை காலத்தில் தமது வியாபாரத்தில் நான்கில் மூன்று பங்கு மட்டுமே அனுபவிக்கின்றனர். (பெருமளவான பகுதி கடைகளிலிருந்து பொருட்கள் திருடடப்படுவதினால் இல்லாமற் செய்யப்படுகிறது)

இவ் விடுமுறை காலகட்டத்தில்  சில்லறை வியாபாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வு இணை ஆசிரியர் மற்றும் தொழில் ஆலோசகரான எமில் டைல் கூறுகிறார். கடந்த வருடத்தின் கால்  பகுதியில், வருடாந்த வருமானத்தில் 40 வீதத்திற்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக சியர்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் நெருக்கடி மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிறுவன மீள்நிலைக்கு தலைமை வகிப்பவர் தெரிவிக்கிறார்.

நீங்கள் நேர்மையாக இருந்தாலும் கூட திருட்டு மற்றும் மோசடி போன்றவற்றில் ஈடுபட்டால் அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அதிக செலவினத்தை ஏற்படுத்தும். சில்லறை விற்பனையாளர்கள் சுருக்கமான செலவுகளுடன் செல்கின்றனர்.

கீழே தரப்பட்டுள்ள 10 பொருட்களும் அமெரிக்கர்களால் அதிகளவில் களஞ்சியங்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் ஆகும். இவை உலக சில்லறை வியாபாரிகளுடன் தொடர்புடைய திருடர்களைப் பற்றி சந்தைகளில் அவதானிக்கப்பட்ட தரவுகளாகும்.

01. வைன் மற்றும் ஸ்பிரிட்கள்

அமெரிக்கர்கள் கடைகளில் இருந்து திருடும் நம்பர் 1 பொருளாக ஒயின்கள் மற்றும் ஸ்பிரிட்டுக்கள் திருடப்படுகின்றன. சுவாரஸ்யமாக, உலகளவில் வைன் மற்றும் ஸ்பிரிட்கள் திருடப்படும் பொருட்களில் 3 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கர்கள், நாங்கள் எங்கள் வைன்களை விரும்புகிறோம் அதனால் நாங்கள் அதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என திருடுகின்றனர்.

02. அழகுசாதன பொருட்கள்

உலகளவில் அமெரிக்காவில், அழகு சாதன பொருட்கள் பெருமளவில் திருடப்படும் இரண்டாவது பொருளாகும். அழகுசாதனப் பொருட்கள் அளவில் சிறியதாகவும் பாக்கெட்டில் இலகுவாக வைத்துக்கொள்ள முடியும் என்பதனால் அழகு சாதன பொருட்கள் உயர் விகிதங்களில் திருடப்படுகிறது.

03. ஃபேஷன் அணிகலன்கள் மற்றும் கிரீம்கள்

ஃபேஷன் அணிகலன்கள் அமெரிக்காவில் திருடும் பொருட்கள் பட்டியலில் 3வது இடத்தையும், உலக பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. அழகியல் சார்ந்த பொருட்கள் அளவில் சிறியதாகவும் திருடுவதற்கு எளிதாகவும் உள்ளதால் இது திருடும் பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கலாம் ஆய்வு எழுத்தாளரான டீல் குறிப்பிடுகிறார். (இது உலகளவில் 10 வது இடத்தில் உள்ளது)

04. நீச்சல் உடை மற்றும் விளையாட்டு உடுப்பு

அமெரிக்க பட்டியலில் நீச்சல் உடை மற்றும் விளையாட்டு உடல் உறுப்பும் நான்காம் இடத்தை பெறுகின்றது. மேலும் உலகில் அதிக அளவில் திருடப்பட்ட பொருட்கள் என எவ்வித பட்டியலும் காணப்படுவதில்லை. அமெரிக்காவை தவிர்ந்த ஏனைய நாடுகளில் நீச்சல் உடைகள் சிறிய கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் மட்டுமே விற்கப்படுகின்றது. வாடிக்கையாளருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் உடைகளை எடுத்துச் சென்று அணிந்து பார்த்து விட்டு அப்படியே எடுத்து சென்று விடுகின்றனர் என டிலே தெரிவிக்கின்றார். மேலும் இதன் அளவு மற்றும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள துணி என்பவற்றினால் அமெரிக்க வியாபாரிகளின்  இவற்றை இன்வெண்டரி கருவிகள் மூலம் அடையாளம் காண முடியாதுள்ளது.

05. சன் கிளாசஸ்

அமெரிக்காவில் சன் கிளாஸ்களை திருடுவது அமெரிக்காவில் 5ஆம் இடம் வகிக்கின்றது எங்கேனும் ஓர் கடைக்குச் சென்று பார்த்து அப்படியே எடுத்துச் சென்று விடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

06.தொலைபேசியுடன் தொடர்புடைய கருவிகள்

மிகவும் இலகுவான வடிவில்  திருடர்களால் திருடக்கூடிய பொருட்களே தொலைபேசியுடன் தொடர்புடைய சார்ஜர்கள் தொலைபேசி அட்டைகள் மற்றும் அதன் தொடர்புடைய ஏனைய உபகரணங்கள் ஆகும்.

07. ரேஸர் பிளேட்டுகள்

அமெரிக்காவின் ட்ரக் ஸ்டோர் வழியே நடந்து செல்லும்பொழுது ரேசர் பிளேடுகள் கேஸில் வைத்து பூட்டப்பட்டுள்ளதை உள்ளதை அவதானிக்க முடியும். அமெரிக்காவில் அதிகளவில் திருடப்படும் பொருட்களில் ரேசர் பிளேட்டுக்கள் ஏழாம் இடத்திலும் இது உலகளவில் 9வது இடத்திலும் திருடப்படும் பொருளாக கணிக்கப்படுகிறது.

08. Lingerie அல்லது இன்டிமேட் உபகரணங்கள்

அதிக அதிக அளவில் திருடப்படும் பொருட்களில் இவைகளும் உள்ளடங்கும். அமெரிக்காவில் திருடப்படும் பொருட்களில் 8-ஆம் இடத்தையும் உலகளவில் ஏழாம் இடத்திலும் திருடப்படுகிறது.

09. பவர் டூல்ஸ்

விலை உயர்ந்த பொருள் என்பதால் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவதில்லை. இப்பொருட்கள் அமெரிக்காவில் அதிகளவில் திருடப்படும் பொருட்பட்டியலில் பத்தாம் இடத்தை வகிக்கின்றது.

10. வீடியோ கேம்ஸ்

எங்கள் பொழுதுபோக்கை நாங்கள் விரும்புகிறோம் – அதை இலவசமாக விரும்புகிறோம். டிவிடிகள் மற்றும் வீடியோ கேம்கள் மற்றும் மிகக் குறைந்த அளவிலான குறுந்தகடுகள் ஆகியவை அமெரிக்காவில் அதிகம் திருடப்பட்ட ஒன்பதாவது பொருட்களாகும், இருப்பினும் அவை உலகளவில் முதல் 10 இடங்களைப் பிடிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php