அனைத்தையும் நாடி  குடும்பத்தோடு உங்கள் விடுமுறையை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றும் இடங்கள் சில உங்களுக்காக…!

குடும்பத்தோடு உங்கள் விடுமுறையை மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றும் இடங்கள் சில உங்களுக்காக…!

2021 Nov 29

நீங்கள் பெற்றோருக்குரிய வழக்கத்தை மாற்றி தனித்துவமான வழிகளைத் தேடும் அனுபவமுள்ள பெற்றோரா? அல்லது குழந்தைகளைப் பெற்ற நீங்கள் இவ் அனுபவத்திற்கு புதியவரா? உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களோடு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய குடும்ப உல்லாசப் பயணத்தைத் திட்டமிட முயற்சிக்கும் ஒரு இளைஞரா? எதுவாக இருந்தாலும் இனி கவலை வேண்டாம் – நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் அனுபவிக்க வேண்டியதொன்று எத்தனையோ விடயங்கள் கொழும்பில் ஒவ்வொரு மூலையிலும் இருக்கின்றன. அவற்றை தேடியறியவேண்டும். குடும்பத்தோடு உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகளாக மாற்ற பெரியளவில் உல்லாசப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஒரு குடும்பமாக அனுபவிக்கும் மகிழ்ச்சியானது எளிமையான விடயங்களிலும் அடங்கியிருக்கும்.
உங்கள் குடும்பத்தோடு உல்லாசப் பயணத்திற்காக கொழும்பை சுற்றிய எங்கள் பயணத்தில் நாம் கண்டறிந்த சிறந்த 10 இடங்கள் இதோ உங்களுக்காக..! படித்து மகிழுங்கள்!

கோல்ஃபேஸ் க்ரீன் (GALLE FACE GREEN)

கோல்ஃபேஸ் க்ரீன் என்பது கொழும்பு நகரத்தின் பிரபலமான இடமாகும். பல குடும்பங்களின் பொழுதுபோக்கு மற்றும் விருப்புத் தெரிவாக இது திகழ்கிறது. கடற்கரையை அண்மித்த பாதையில் பச்சைப்பசேலென படர்ந்து நீண்ட புற்றரையில் உலாப்போவதும் , கடலில் வீசும் பலத்த காற்றுக்கு உயரச் செல்லும் பட்டங்களும், dog-and-the-bone மற்றும் ஓடிப்பிடிப்பது போன்ற விளையாட்டுக்களும் குடும்ப பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக அமைகிறது. தொழினுட்பயுகத்திலும், சமூக ஊடகங்களிலிருந்தும் விடுபட்டு எளிமையான இன்பத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த இடமாகும். கரைக்கு வரும் அலைகளில் உங்கள் கால்விரல்களை நனைத்துக்கொண்டே கடலுக்கு வெளியே இருக்கும் பாலம்போன்றதொரு நடைபாதையையும் பார்வையிடலாம். இருப்பினும் இங்கு கிடைக்கும் அனுபவம் தெரு உணவுகளின்றி முழுமையடையாது. இதன் மணமும் சுவையும் நம்மை ஈர்த்துவிடும்.
மாலைநேரங்களில் அதிகமான உணவுக்கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு ‘நாண்’உணவு. கடலோரத்தில் அவர்கள் வறுத்த பார்பிக்யூ மற்றும் வறுத்த உணவு வகைகளான கடல் உணவுகள், டெவில்ல்ட் கிராம் மற்றும் பராட்டா போன்றவற்றை வழங்குகிறார்கள். நீங்கள் எடுத்துச் செல்வதற்காக வாங்கிய வாங்கிய உணவுகளை புல் மீது அமர்ந்த வண்ணம் அவற்றை உண்டு அனுபவிக்கலாம். அல்லது பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் மேசைகளுடன் கூடிய பெரிய கடையில் அமர்ந்து உண்டு மகிழலாம்.

சுதந்திர சதுக்கம் INDEPENDENCE SQUARE

கொழும்பு நகரின் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் சுதந்திர சதுக்கம் சனி அல்லது ஞாயிறு விடுமுறைகளுக்கேற்ற பொழுதுபோக்கு இடமாக பெற்றோர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. சதுக்கத்தில் அல்லது அதற்கு அருகாமையிலுள்ள பாதையில் சைக்கிள் ஓட்டுவது, நிழல் தடங்களில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்தல், புல்வெளியில் பிக்னிக் செய்வது முதல் வெளிப்புற விளையாட்டுகள் வரை பல்வேறு வகையான குடும்ப செயல்பாடுகளுக்கு ஏற்ற இடமாக இது விளங்குகிறது. சுதந்திர நினைவு மண்டபத்தில் அதன் சின்னமான கற்சிங்க உருவ சிலைகளுக்கு மத்தியில் குடும்பங்களோடு சேர்ந்து அமர்ந்து இருக்கலாம். அல்லது சுற்றிப்பாரக்கவும் முடியும். கடந்த காலத்தில் தேசத்திற்கு சேவை செய்த மக்களை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட அதன் நினைவு அருங்காட்சியகத்தையும் அவர்கள் பார்வையிடலாம். மேலும், அதன் மூலைகளைச் சுற்றி ஆர்கேட் சுதந்திர சதுக்கம் காணப்படுகிறது. ஒரு காலனித்துவ கட்டிடம் இப்போது Mall ஆக மாற்றப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கடைகள் மற்றும் உணவகங்கள் மற்றும் இங்குள்ள சினிமா மற்றும் நிலத்தடி கண்ணாடி பொருத்தப்பட்ட மீன்தொட்டிகள் (குழந்தைகள் இதை பார்வையிடவும் அதற்கருகில் நடக்கவும் விளையாடவும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்) போன்றவை இப்பகுதியின் ஈர்ப்பை கூட்டி கொழும்பில் குடும்பத்திற்கான ஒரு முக்கிய இடமாக மாற்றம்பெற்றுள்ளது.

பூங்காக்கள் THE PARKS

1. விகாரமஹாதேவி பூங்காViharamahadevi Park

கொழும்பு போன்ற ஒரு நகரத்தில், விகாரமஹாதேவி பூங்கா போன்றதொரு பசுமை நிறைந்த மிகப்பெரிய பொது பூங்காவை கண்டறிந்து கொள்வது உண்மையில் மிகவும் தனித்துவமானதொன்றே. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சைக்கிள் ஓட்டுவதற்கும், ஓடி விளையாட அல்லது நடைப்பயிற்சி, ஜோகிங் போன்ற செயற்பாடுகளுக்காகவே பிரத்தியகமாக இங்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் ஏராளமான மரங்கள் படர்ந்த நிழலைத் தருவதுடன், மதிய மாலை நேரங்கள் குடும்ப சுற்றுலாவிற்கு ஏற்றதாக அமைகிறது.
குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பல விளையாட்டுக்களை விளையாடும் போது அல்லது கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் போது, அல்லது நன்கு அழகுபடுத்தப்பட்ட புல்வெளி மற்றும் நீரூற்றுகள் வழியாக நிதானமாக உலாவும் போது கிடைக்கும் அனுபவம் மனதிற்கு இதமானது. உண்மையில் இவ்விடம் குடும்பத்தோடு செல்வதற்கு பயனுள்ளதாகவும் ஏற்றதாகவும் அமையும்.

2.பேர ஏரி பூங்கா Beira Lake Park

பேர ஏரிக்கு ஒரு சுவாரஸ்யமான கடந்த காலம் உண்டு. இன்று, அதன் நீர்ப்பக்கத்தில் அருகிலிருக்கும் நேரியல் பூங்கா, நகரத்தில் பசுமையின் வெளிப்பாட்டைக் கொண்டு காட்சியளிக்கிறது. ஏரி பகுதியில் அன்னப்பறவை மிதிபடகு சவாரி மற்றும் ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவுடன் அமைந்த ஒரு தொங்கு பாலம் ஆகியவை அடங்கலாக இந்த பூங்கா விளங்குகிறது. குடும்பத்துடன், குறிப்பாக மாலை வேளைகளில் நிம்மதியாக நேரத்தை பயனுள்ளதாய் செலவிட இது ஒரு சிறந்த இடமாகும்.

3.பத்தேகன ஈரநிலப் பூங்கா Baddegana Wetland Park

நகரின் புறநகர்ப் பகுதியில் (ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில்) அமைந்துள்ள இந்த ஈரநிலப் பூங்கா கொழும்பு நகரத்திற்கு ஒரு புதிய வரவாகும். ஏனெனில் இது மிக அண்மையிலேயே பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இயற்கை விரும்பும் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். இங்கு இலங்கையின் ஈர மண்டலங்களில் வாழும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களை பார்வையிடமுடியும். இது பல பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளின் தாயகமாக கருதப்படுகிறது. அவற்றில் சில இலங்கைக்கு சொந்தமானவை. ஆகஸ்ட் முதல் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் பருவ காலத்தில் பல்வேறு வகையான பறவைகள் இங்கு புலம் பெயர்கின்றன. அதன் காரணமாகவே இந்த பூங்கா மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.
வாத்து குளம், வேடர் நடை, புலம் பெயர்ந்த பறவைளின் நடை மற்றும் பட்டாம்பூச்சி நடை போன்ற இங்குள்ள குறிப்பிடத்தக்க சில இடங்கள் சிறு குழந்தைகளை கவரும் என்பதில் ஐயமில்லை. இந்த பூங்காவின் ஈர்ப்பானது குழந்தைகள் மட்டுமன்றி அவர்களின் பெற்றோருக்கும் சுற்றுச்சூழலைப் பற்றி அறிய வாய்ப்பளிக்கின்றது. பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தும்பிகள் மற்றும் ஏனைய பூச்சிகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தும் படகு சவாரி போன்ற கல்விச் சுற்றுலாக்களும் இங்கு இடம்பெறுகின்றன.

4.தியத உயன Diyatha Uyana

கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியில், தியவன்ன ஓயாவின் கரையில் அமைந்துள்ள இந்த நவீன பூங்கா, குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு வரும்போது ஏற்ற இடமாக தெரிவாகிறது. இது கொழும்பின் நகர்ப்புறத்தை விட்டு வெளியேவரும் அனுபவத்தை தரும் ஒரு நிதானமான இடமாகும். ஒரு மாலைப் பொழுதில் குடும்பங்கள் நடைபாதையில் உலாவ முடிவதோடு ஏரியில் அன்னப்பறவை படகு சவாரி செய்வதையும் தெரிவு செய்யலாம். உணவு விற்பனை நிலையங்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற சில மனதைக் கவரும் காட்சிகள் இங்கே உள்ளன. இங்கு பலவகையான அலங்கார மீன்களை பார்வையிடக்கூடிய மீன்தொட்டிகளும் உள்ளன. அத்தோடு பலவகையான பொருட்களும் இங்கு விற்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இங்கு சென்றால் ஷொப்பிங் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here