இன்று உங்களுடைய சம்பள தினம் என்ற ஒரு எண்ணத்தை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வங்கிக் கணக்கு மீதியை பார்த்து சற்று மகிழ்ச்சியடைவீர்கள். நான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்று மனதிற்குள் எண்ணிக்கொள்வீர்கள். திடீரென்று தொலைபேசிக்கட்டணம், போக்குவரத்துச் செலவுகள், நீங்கள் வாங்கவேண்டிய பாதணிகள், இரவில் ஊபர் ஈட்ஸில் நீங்கள் ஓர்டர் செய்த உணவுக்கான பில், பார் பில் இவையெல்லாம் கட்டிமுடிக்க நினைத்து கணக்கு பார்த்து முடிக்கும்போது மறுநாள் காலையில் அழுகையே வந்துவிடும்.
திடீரென்று நீங்கள் உடைந்து போய் விடுவீர்கள். இந்த மீதிப்பணத்தை வைத்து மாதம் முழுவதையும் எப்படியாவது ஓட்டிவிடவேண்டும் என்று நினைத்து நினைத்தே மீதிக் காலத்தை செலவழிக்காமல் விடுவீர்கள்.
கவலையை விடுங்கள், உங்கள் நாட்களை சேமிப்புடன் திருப்திகரமாக கொண்டு செல்ல நாங்கள் இருக்கிறோம். எங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பொழுதுபோக்கான விடயங்களை 1000 ரூபாவிற்கு குறைவாக கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியும்.
1. இறால் வடையுடன் காலி முகத்திடலில் நடைப் பயணம்
இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். இருநூறு ரூபாய்க்கும் குறைவாகச் செலவாகும் சூடான இறால் வடையை உண்ணும்போது உங்கள் தலை உச்சியில் கடல் காற்று வீசுகின்ற காலி முகத்திடலில் நீங்கள் கடைசியாக எப்போது நடந்தீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சூரியன் மறைந்து கொண்டு செல்லும்போது புல்லில் உல்லாசமாக விளையாடும் குழந்தைகளின் குறும்புகளை கண்டு மகிழ முடியும். நிச்சயமாக அது ஒரு மறக்கமுடியாத மாலையாக இருக்கும்.
2. நெலும் பொகுனவை சுற்றி ஒரு நடைபவணி
விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகிலுள்ள நெலும் பொகுன கொழும்பில் உள்ள அழகான பகுதிகளில் ஒன்றாகும். பசுமைப் பாதையில் உள்ள அழகிய கலை ஓவியங்களை அங்கே பார்த்துக்கொண்டே அமைதியாக நடந்து செல்ல முடியும். அங்கே கம்பீரமாக தோற்றமளிக்கும் நெலும் பொகுனவில் புகைப்படம் எடுக்க முடியும். புகைப்பட ஆர்வலர்கள் தங்களை அழகாக புகைப்படங்கள் எடுக்க இங்கே செல்கிறார்கள். இதற்கு ஒரு ரூபாய் கூட செலவாகாது.
3. பெல்லன்வில பூங்காவில் சைக்கிள் ஓட்டம்
நீங்கள் கொழும்பில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று எண்ணினால் பெல்லன்வில பூங்காவிற்குச் செல்லுங்கள். இரண்டு சைக்கிள்களை (ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய்) வாடகைக்கு எடுத்துக் கொண்டு உங்கள் துணையுடன் ஏரியைச் சுற்றி அழகாக சவாரி செய்து மகிழுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபட இது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சைக்கிள் ஓட்டி முடித்ததும் சுவையான உணவுக்காக அங்கே உள்ள உணவுக் கடை ஒன்றிற்கு செல்ல முடியும். இவை அனைத்தையும் 1000 ரூபாயை விட குறைவான செலவில் செய்து முடிக்க முடியும்.
4. கொழும்பு தேசிய அருங்காட்சியக சுற்றுப்பயணம்
பல்வேறு காலகட்டங்களின் தொல்பொருட்களால் களஞ்சியப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தை ஆராய்வதன் மூலம் நீங்கள் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்கலாம். நீங்கள் இருவரும் வரலாற்றை அறியும் ஆர்வமுள்ள மாணவர்களாக இருந்தால் இது உங்களுக்கு ஒரு சிறந்த இடமாகும்.
5. தியத்த உயனவில் தாவரக் கன்றுகளை வாங்குதல்
நீங்களும் உங்கள் துணையும் தோட்டமொன்றை அமைப்பதை விரும்புகிறீர்களா? பச்சையாக பசுமையுடன் தோட்டம் ஒன்றை அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளீர்களா? தியத்த உயனாவுக்குச் செல்லுங்கள், அங்கு தாவர விற்பனையாளர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் வந்து தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறார்கள். சில சுவாரஸ்யமான சதைப்பற்றுள்ள தாவரங்கள் முதல் கவர்ச்சியான கண்கவர் பூக்கள் வரை நியாயமான விலையில் நினைக்கும் அனைத்தையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.
6. பப் ஒன்றில் மகிழ்ச்சியான நேரம்.
இலங்கையர்களான நாங்கள் மதுபானத்தை விரும்புகிறோம். ஆனால் பார் பில்கள் தூக்குக் கயிறுகள் போல காயங்களை ஏற்படுத்துகின்றன. மகிழ்ச்சியான மணித்துளிகள் உங்கள் வாழ்க்கையை சேமிக்கும். சில இடங்களில் ‘1 வாங்கினால் 1 இலவசம்’ என்ற சலுகைகளை வழங்குகிறார்கள். சில தேர்ந்தெடுக்கப்பட்ட காக்டெய்ல்களை இலவசமாகவும் வழங்குகின்றார்கள்.ஏனையவற்றில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இரண்டு பீரினை 1,000 ரூபாய்க்கு கீழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சுவாரஷ்யமான அனுபவங்களை பெற முடியும்.
7. தியத்த உயனவில் அன்னப்படகு சவாரி
தியத்த உயனவில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் காதலியுடன் ஏரியின் அலைகளில் மேலும் கீழும் படகில் துள்ளியவாறு பயணம் செய்வதில் ஏதோ ஒரு இனிமையான மற்றும் அமைதியான இன்பம் இருக்கிறது. நீங்கள் மனக்கசப்புகளிலிருந்து தப்பித்து உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட விரும்பினால் இது அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
8. உங்கள் சொந்த மலர் பூச்செண்டை உருவாக்குங்கள்
டீன்ஸ் சாலை ஆரம்பம் முதல் இறுதி வரை பூக்கடைகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் விரும்பும் பலவிதமான கண்கவர் மலர்களைத் தேர்ந்தெடுத்து 1,000 ரூபாய்க்குள் எளிதாகக் கிடைக்கும் பூங்கொத்தை அமைத்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் சுவாரஷ்யமானதாக மாற்றலாம். இதன் மூலம் மலரைப் பற்றியும் அதன் அழகைப்பற்றியும் பரிமாறிக்கொள்ளலாம்
9. One Galle Face இல் ஒரு விளையாட்டு அனுபவம்
விளையாடும் ஆர்வம் உடையவர்கள் இங்கே ஒன்று கூட தயாராக இருங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பரந்த அளவிலான கேம்களுடன் One Galle Face இல் உள்ள Ground Zero உங்கள் நண்பருடன் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடும் ஒரு சுவாரஷ்யமான நேரத்தை உங்களுக்கு வழங்கும்.
10. கல்கிசை கடற்கரையில் வைன்
இங்கே ஒரு நபருக்கு சுமார் 1,000 ரூபாய் செலவாகும் என்றாலும் நீங்கள் செய்யக்கூடிய எளிமையான காதல் வெளிப்பயணங்களுக்கு இதுவும் சிறந்ததொரு இடம்தான். 2,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சிவப்பு அல்லது வெள்ளை வயின் போத்தலை எடுத்து போர்வை மற்றும் சுற்றுலா பொருட்கூடையை எடுத்துக்கொண்டு சூரியன் மறைவதை பார்வையிட கல்கிசை கடற்கரையின் மணல் கரைக்கு செல்லுங்கள்.
11. மருதானை செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடை
புத்தகப்புழுக்களே நீங்கள் ஜாக்கிரதை! உண்மையிலேயே இங்கு 1,000 ரூபாய்க்கு மேல் செலவழிக்க மிகவும் ஆசையாக இருக்கும். மருதானையில் உள்ள கடைகளின் தூசி நிறைந்த அலுமாரிகளில் ஒரு விலையுயர்ந்த இரத்தினத்தை கண்டுபிடிப்பதில் நம்பமுடியாத திருப்தி உள்ளது. தேர்வு செய்ய அலுமாரிகளும் அதற்குள் குவியல்களும் அதிகம் உள்ளன. கடைகளை நடத்தும் தோழர்கள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தர உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
12. Excel World இல் பந்துவீச்சு
இன்னும் சொல்ல வேண்டுமா? பந்துவீச்சு என்பது மிகவும் சுவாரஷ்யமானது. உற்சாகமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். உங்களின் நேரத்தை பயனுள்ளதாகவும் திருப்திகரமாகவும் மாற்ற பந்து வீச்சு உத்தரவாதம் அளிக்கிறது!
13. சல்சா நைட்ஸ்
The Irish மற்றும் Playtrix ஆகிய சமூக ஊடக பக்கங்களுடன் இணைந்திருங்கள். சில இரவுகளில் அவர்கள் சால்சா நடன இரவுகளை ஒழுங்கமைக்கின்றனர். அங்கு அனைத்து வயதினருமான மற்றும் அனுபவமான நடனக் கலைஞர்கள் உங்கள் நேரத்தை சிறப்பாக மாற்ற வருகிறார்கள். உங்கள் நண்பரை அல்லது காதலியை பிடித்து சில நடன அசைவுகளை நீங்களும் எளிதாக உருவாக்க முடியும். நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்று கவலை வேண்டாம். அங்குள்ளவர்கள் உங்களுக்கு நட்பாக இருப்பார்கள். மேலும் சில அடிப்படை நடன அசைவுகளை எப்படி செய்வது என்று உங்களுக்கு அவர்கள் கற்பிப்பார்கள்.
14. Crystal Shopping
ஆன்மிகத்துடன் வாழ விரும்புகின்றீர்களா? House of Siris இன் Stratford Avenue இல் அமைந்துள்ள சக்கர சமநிலையைக் காட்டும் ஆரா வாசிப்பு அனுபவங்களை பெற முடியும். உங்களை எவ்வாறு சமநிலைக்கு கொண்டு வருவது என்பது குறித்த இலவச ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள். 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் குளிர்ந்த டம்லட் படிகற்கள் உள்ளன. இருப்பினும் படிகத்தின் வகையை பொறுத்து அதன் விலை மாறுபடும். (Blue Lace Agate costs LKR 1,200, whereas Rose Quartz or Red Jasper costs LKR 400)
15. கார்னிவல் ஐஸ்கிரீம்
நம் அனைவருக்கும் பிடித்தமான கார்னிவல் ஐஸ்கிரீமை ருசித்து நாவின் சுவை அரும்புகளை திருப்தி படுத்த முடியும். இந்த கார்னிவெல்லில் மிகவும் நியாயமான விலையில் தேர்வு செய்ய பலவிதமான சுவைகளைக் கொண்ட ஐஸ்கிரீம்கள் உள்ளன. அழகான உட்புறத் தோற்றம், வர்ணஜாலம் என எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அழகுபடுத்த இந்த கார்னிவல் காத்திருக்கிறது.
16. நடனம் அல்லது யோகா வகுப்பில் சேருங்கள்
புதிதாக ஒரு விடயத்தை முயற்சிப்பதில் எந்தத் தீங்கோ தவறோ கிடையது. சுவாரஷ்யமான நடன வகுப்பு அல்லது நிதானமான யோகா அமர்வை ஒரு கணம் முயற்சி செய்து பாருங்கள். யார் அறிவார்கள், இது உங்களுக்கு ஒரு புதிய பழக்கத்தின் தொடக்கமாகக் கூட இருக்கலாம். ஏராளமான யோகா பயிற்றுவிக்கும் நிலையங்கள் கொழும்பில் உள்ளன. ஒருவருக்கு 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே கட்டணம் அரவிடப்படுகின்றது. பெண்கள் மட்டும் என்றால் நடனக் கலைஞர் கியோஷி பெரேராவின் வகுப்பை முயற்சித்துப் பார்க்க முடியும். ஒரு வகுப்பில் லத்தீன், ஹிப் ஹாப், ஆப்ரோ, மூவ்மென்ட் மற்றும் பாரம்பரிய நடனம் என ஐந்து ஸ்டைல்கள் கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு மட்டுமான வகுப்பில் அருமையான அசைவுகள் கற்றுத் தரப்படுகின்றன. மேலும் நீங்கள் அதிக வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர் உங்களுக்காகவே மாதந்தோறும் பல வகுப்புகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறார்.
17. சாய்வாலாவில் தேநீர் கொண்டாட்டம்
சூடான ஆறுதல் தரும் தேநீரையும் சுவையான பேஸ்ட்ரியையும் மெரின் டிரைவில் பார்த்து சுவைத்து மகிழுங்கள். இந்த இடம் இரவில் ஒளிர்கின்ற சில இதமான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது.
18. Caramel Pumpkin இல் காஃபி டேட்
காஃபி பிரியர்களே, Caramel Pumpkin இற்கு செல்லுங்கள் அங்கு அவர்கள் சுவையான காஃபி மற்றும் காஃபி அடிப்படையிலமைந்த பானங்களை நியாயமான விலையில் வழங்குகிறார்கள்.
19) தெஹிவளை மிருகக்காட்சிசாலை
நீங்களும் உங்கள் துணையும் விலங்குகள் மேல் ஆர்வமாக உள்ளீர்களா? தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு செல்லுங்கள். இப்போது இரவு நேர வருகை அனுமதியையும் வழங்குகிறார்கள். இப்போது நிலவுகின்ற வெயிலுடன் கூடிய கால நிலைக்கு மிகவும் சாதகமானதாக இந்த அனுமதி இருக்கிறது.
20. கோள்மண்டலத்தைப் பார்வையிடுங்கள்
“என்னை சந்திரனுக்கு பறக்க விடுங்கள், நட்சத்திரங்களுக்கு இடையில் விளையாட விடுங்கள்” என்ற ஃபிராங்க் சினாட்ராவின் பாடல் எல்லா காலத்திலும் அதிகம் கேட்கப்பட்ட காதல் பாடல்களில் ஒன்றாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை கோள்மண்டலத்தை பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். கோள்மண்டலம் நிச்சயமாக அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடமாகும். இது ஒரு தனித்துவமான மற்றும் ஒரு வகையான புதுவித அனுபவத்தை வழங்குகிறது.
இதோ, இப்படி எல்லா விடயங்களையும் இப்போது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்! உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ளும் உங்கள் துணையுடன் சேர்ந்து வரும் மாதத்தை அற்புதமான மாதமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தேர்ந்தெடுங்கள்!