2022 Feb 18
சைக்கிள் ஓட்டும் கலாசாரமென்பது கொழும்பு நகரில் மிகவும் அரிதாக காணக்கூடியதொன்றாகவே இருந்துவருகிறது. இதனை மாற்றியமைத்து இலங்கை மக்களின் சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தை தூண்டி அதில் அவர்கள் முழுமையாக ஈடுபாட்டை வழங்கவேண்டும் என்பதன் அடிப்படையில் பல சைக்கிள் ஓட்ட மைதானங்கள், பூங்காக்களில் சைக்கிளோட்டப்பாதைகள் போன்றன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைய ஒருவர் தன்னுடைய வாழ்வையும் அர்ப்பணிக்கிறார் என்றால் அவர்தான் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர் யசாஸ் ஹெவகே. அவருடைய விடாமுயற்சியையும் சைக்கிளோட்டத்தில் அவரின் முழுமையான ஈடுபாட்டையும் சிலர் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு சைக்கிளோட்ட கலாசாரத்தை தாமும் பின்பற்றுகின்றனர்.
“Race the Pearl” எனும் கருப்பொருளை மையமாகக்கொண்ட சைக்கிளோட்ட பந்தயத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திய பெருமை யசாஸ் அவர்களையே சாரும். ஸ்பின்னரால் ஏற்பாடு செய்யப்பட்ட “Race the Pearl” 24 மணிநேர சைக்கிள் ஓட்ட சவாலாகும்.இவ் ஆண்டு சைக்கிளோட்டத்தின் நான்காவது பாகத்தை 2022 பெப்ரவரி மாதம் கடந்த 6 ஆம் திகதி அவர்கள் நிறைவுசெய்தனர்.உடலூனமுற்ற குழந்தைகளுக்காக 10000 சக்கரநாற்காலிகளை பெற்றுக்கொடுக்கவேண்டுமென்ற “Wheels For Wheel Foundation” எனும் அறக்கட்டளையின் நோக்கத்தை ஆதரிப்பதே இந் நிகழ்வின் முக்கிய குறிக்கோளாகும்.
எனவே, ‘Race the Pearl” என்றால் என்ன?
சுருக்கமாக கூறுவதானால் ‘Race the Pearl” என்பது பருத்தித்துறை முதல் தேவந்திர முனை வரையில் சைக்கிள் ஓட்ட ஆர்வலர்களின் சைக்கிளோட்ட பந்தய நிகழ்வாகும். மேடு,பள்ளம் மற்றும் தரிசு நிலங்களையும் கடக்கும் சுமார் 600 கிலோ மீற்றர் சமதளத்தில் 24 மணி நேரத்திற்குள் பயணம் செய்து இந்தப் பந்தயத்தை முடிக்கவேண்டும். இதில் பங்கேற்பவர்கள் தங்கள் சைக்கிளை ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று வர்ணிக்கப்படும் இலங்கை தீவை சுற்றி ஓட்டும் முயற்சியில் ஈடுபடும்போது தீவிர உடல் மற்றும் மன சவால்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த ஆண்டு 6 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டதோடு நம் நாட்டைத் தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, கிர்கிஸ்தான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய ஏழு நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இவ் ஆண்டு ஓட்டப் பந்தயத்தில் 22 தனிநபர் ஓட்டுனர்களும், 78 ரிலே ஓட்டுனர்களும் இணைந்து 16 அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டனர். இவ் ஓட்டுனர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க 32 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 24 மணிநேர முழுவதும் அவர்கள் பயணம் செய்தனர்.
இந்த பந்தயத்தில் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பயணத்தை வேகமாக நிறைவு செய்வதற்காக தங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதற்காக இவ் ஓட்டப்பயணத்தில் 3 நிறுத்த இடங்கள் (Pitstop) ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த சவாலை முடித்துகாட்ட 24-hour Solo, 24-hour Ultra Challenge, 2 Day Challenge (32 hours) மற்றும் ரிலே டீம் (2 முதல் 5 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு) ஆகிய சவால்களில் ஒன்றை பங்கேற்பாளர்கள் தெரிவு செய்யலாம்.
- சவாலை வெற்றிகரமாக முடித்துகாட்டிய சிறந்த சைக்கிள் ஓட்டுனர்களின் பட்டியல் இங்கே.
தனி நபர் பயணம்
செல்வடோர் லோபஸ் (மெக்சிகோ) – 25:27:06
சுமேதா ரத்நாயக்க (பெண், இலங்கை) – 27:45:50
எக்னஸ் செஃபோர்ட் (பெண், அமெரிக்கா) – 27:58:49
அல்ட்ரா-வகை
ருவான் ஜெயமன்ன (இலங்கை) – 22:11:20
ப்ரேன்சியோஸட கம்ப்ட்டேர் (பிரான்ஸ்) – 22:24:29
சமன் பெரேரா (இலங்கை) – 23:57:57
டீம் ரிலே பிரிவில் 11 அணிகள் வெற்றி பெற்றன
களனி சைக்கிள் ஓட்டம் – 18:06:08
பன் பீ சைக்கிளோட்டம் – 19:06:43
பெடல் எமிசி – 19:30:19
Race The Pearl Sri Lanka என்பது Race Across America எனும் அமெரிக்காவின் மதிப்புமிக்க நிகழ்விற்கு தகுதியுடைய ஒரு நிகழ்வாகும். வெற்றிகரமாக நிறைவு செய்த பந்தயத்தின் 4 ஆம் பாகத்தை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 5, 2022 அன்று அதன் 5 ஆம் பாகத்தை ஆரம்பிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு, www.racethepearl.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
சைக்கிளோட்ட பந்தயத்தின் 4 வது பாகத்தில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இந்த நிகழ்வானது இலங்கையில் உள்ள ஏனைய சைக்கிள் ஓட்டுனர்களுக்கும் சவால்கள் நிறைந்த மறக்க முடியாத ஒரு சைக்கிளோட்ட அனுபவத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறோம்!