உணவை  நாடி கொழும்பில் உள்ள தாய்லாந்து உணவகங்கள்

கொழும்பில் உள்ள தாய்லாந்து உணவகங்கள்

2022 Feb 22

கொழும்பில் உணவுக்கென்றே சில இடங்கள் பிரசித்திபெற்று வருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து உணவுக்கென்றே பிரசித்திபெற்ற இடங்கள் பல கொழும்பு நகரில் உள்ளன என்றால் அதில் ஆச்சரியமில்லை. சுவையான Tom Yum முதல் கிளாசிக் Pad Thai வரை அனைத்து விதமான தாய் உணவுகளையும் நீங்கள் ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பட்டியல் உங்களுக்குதான்.

Krua Thai by Dao

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள லிட்டில் ஹோல் இன் த வோல் (little hole-in-the-wall) என்ற அடைமொழியால் அறியப்படும் Krua Thai உணவகம் உங்கள் பணத்தை முழுவதுமிழக்காமல் உண்மையான தாய் உணவின் சுவையை ருசித்து மகிழும் வாய்ப்பை உங்களுக்கு தருகின்றது. இங்கு கிடைக்கும் உணவோ அல்லது இந்த ரம்மியமான சூழலோ நிச்சயம் நீங்கள் யாரோ ஒருவரின் சமையலறையில் இருந்து சாப்பிடுவதைப் போலவே உணர்வீர்கள். 1000 ரூபாய்க்கு மிகவும் திருப்திகரமான தாய் உணவை ருசிக்கவேண்டுமெனில் இவ்விடத்தை பரிந்துரை செய்கிறோம்.

துரித அழைப்பு – 0779 603 760
விலாசம் – 10 பாம் க்ரூவ் , கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.30 இலிருந்து பி.ப 3.30 வரை, பி.ப 6.30 இலிருந்து 10.00 மணிவரை

Instagram – @daokruathaidaoskitchen

Quick Thai

பெலவத்தை மற்றும் கொழும்பு 5 ஐ தளங்களாகக்கொண்டு இரு விற்பனை நிலையங்களை அமைத்து Quick Thai மனதைக் கவரும் அலங்காரம் மற்றும் சாதாரண விலையில் சுவையான உணவு என அனைத்திலும் தனித்துவமாக விளங்குகின்றது. 1500 ரூபாய் செலவில் நீங்கள் ஒரு நேர்த்தியான உணவை அனுபவிக்க முடியும்.

துரித அழைப்பு – 0112 073 353
விலாசம் – பத்தரமுல்லை- பன்னிபிடிய வீதி, ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 10.30 வரை

Instagram @quickthaisrilanka

Facebook – @QuickThaiSL

Thai Heritage Food Truck

கொழும்பில் புட் ட்ரக் உணவுமுறை என்பது பிரபலமடைந்து வருகிறது. அந்த வரிசையில் உள்ள பிரபல Thai Heritage Food Truck ஐ ஹெவ்லாக் சாலையில் நீங்கள் பார்க்கலாம். மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இது திறந்திருக்கும்.நீங்கள் 1000 ரூபாவை செலுத்தி உங்கள் தாய் உணவுப் பிரியத்தை தீர்த்து வைக்கலாம். குறிப்பாக அவர்களின் Pad Thai உணவு உண்மையிலேயே அருமைதான்.

துரித அழைப்பு – 0777 003 688
விலாசம் – 381 ஹாவ்லொக் வீதி, கொழும்பு 06

Instagram – @thaiheritagetruck

Facebook – @thaiheritagefoodtruck

Thai Express MC Food Court

தாய் ஸ்பெஷல் கொத்து, அல்லது தாய் ஃப்ரைட் ரைஸ் போன்ற தவிர்க்க முடியாத சில தர் உணவுகளுக்கு சிறந்த தெரிவு Thai Express உணவகம். மெஜஸ்டிக் சிட்டி, கிரெஸ்கட் மற்றும் லிபர்ட்டி ப்ளாசா போன்றவற்றில் இவ் உணவகம் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கும் உணவுகளைப் பற்றிய குழப்பம் இருக்கலாம். ஆனால் அவர்களின் சேவை மிகவும் வேகமாகவும், நேர்த்தியாகவும், நட்பாகவும் இருக்கும். நீங்கள் இலங்கையிலேயே தயாரிக்கப்படும் தாய்லாந்து உணவை விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான இடம் இதோ.

துரித அழைப்பு – 0112 438 300
விலாசம் – மெஜஸ்டிக் சிட்டி. க்ரெஸ்கட், லிபர்டி ப்ளாசா பூட் கோர்ட்
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10.00 இலிருந்து பி.ப 10.00 வரை (அனைத்து கிளைகளும்)

Laksa Noodle Bar

திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள Laksa Noodle Bar என்பது புதிதாகப்பட்ட மற்றும் சிறந்த சேவையை வழங்கிவரும் ஒரு சிறிய உணவகமாகும். Thai Woon Sen நூடுல்ஸ் மற்றும் Pad Thai ஆகியவற்றை உள்ளடக்கிய இன்னும் பல தெற்காசிய நூடுல்ஸ்களுடன், அநேக தெரிவுகளை வழங்குகின்றது. ஒரு உணவுக்காக அண்ணளவான விலை 1500 ரூபாய் வரையிலிருக்கும்.

துரித அழைப்பு – 0112 559 799
விலாசம் – 179 திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.30 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 6.00 இலிருந்து பி.ப 9.00 வரை

Instagram – @laksanoodlebar.lk

Facebook – @laksanoodlebar.lk

Monsoon

பார்க் ஸ்ட்ரீட் மியூஸில் அமைந்துள்ள Monsoon உயர்தர தெற்காசிய உணவுகளில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த தாய் உணவகமாகும்.குடும்பம் அல்லது நண்பர்களிடையே பகிர்ந்துண்ணுவதற்கு ஏற்ற ஏரளமான உயர்தர தாய் உணவு வகைகளை உங்களுக்கு வழங்குகிறது. அவர்களின் சரோங் இறால் மிகவும் சுவையாக இருக்கும். எனவே இதை முயற்சிக்க மறக்காதீர்கள்!

துரித அழைப்பு – 0112 302 449
விலாசம் – 50, 2 பார்க் வீதி, மியவ்ஸ், கொழும்பு 02
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @monsooncolombo

Facebook – @monsooncolombo

Café Beverly

ராஜகிரியவில் அமைந்துள்ள பெவர்லி Beverly Street ஆடை வளாக பகுதியிலி உள்ள Café Beverly சில கலாச்சார மற்றும் தாய் உணவுகளையும் வழங்குகிறது. Sweet ChilI Wings முதல் கடலுணவு கேக்குகள் வரை தாயுணவு ருசிகளை அனுபவித்திட Café Beverly சரியான இடமாகும்.

கபே பெவர்லி சில சுவையான தாய்களைப் பெறுவதற்கு மிகவும் நிதானமான விருப்பமாகும்.

துரித அழைப்பு – 0112 888 686
விலாசம் -475/C, ஸ்ரீ ஜயவர்தன மாவத்தை, கோட்டை 101
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @cafe.beverly

Facebook – @CafeBeverly

Thai Cuisine Boulevard

மிகவும் பிரத்தியேகமான தாய் உணவகளை வழங்கிவரும் பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள Thai Cuisine Boulevard உணவகம் மனதை ஈர்க்கக்கூடிய உணவு, சேவை மற்றும் சுற்றுப்புறத்தை வழங்குகின்றது. உயர்தர சமையற் பொருட்கள் மற்றும் தாய் மண்ணின் சுவைகள் மாறாத இந்த இடம் தாய் உணவு பிரியர்களுக்கான ஒரு டேட் நைட்டுக்கு ஏற்ற இடமாகும்.

துரித அழைப்பு -0112 055 425
விலாசம் – 33 குயின்ஸ் வீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 10.30 வரை

Instagram – @thai.boulevard

Facebook – @theboulevardsrilanka

Nara Thai

2006 ஆம் ஆணடிலிருந்து இன்று வரை தாய்லாந்தின் சிறந்த உணவகங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாரா தாய் ஒரு தனித்துவமான உணவு வகைகளை அதன் வாடிக்கையாளருக்கு வழங்கி வருகின்றது. ஒவ்வொன்றும் தாய்லாந்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான தாய் உணவை உண்ட அனுபவத்தை உறுதி செய்கிறது. Anchan Iced Tea போன்ற தனித்துவமான இன்னும் பல ஈர்த்த வண்ணமேயுள்ளது.

துரித அழைப்பு – 0112 577 655
விலாசம் – 31 டீல் ப்ளேஸ் கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @narathaisrilanka

Facebook – @narathaisl

Royal Thai Cinnamon Lakeside

Royal Thai சினமன் குளப்பகுதியில் அமைந்துள்ள ஒரு உயர்தர உணவகமாகும். ஒரு உயர்தர சுற்றுப்புறச் சேவையையும் நட்சத்திர சேவையையும் இதுகொண்டுள்ளது. குழுவாக இணைந்த கொண்டாட்டங்கள் அல்லது உங்களை நீங்களே உபசரிக்க நினைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற Royal Thai உணவகத்தின் உணவின் தரம் பல ஆண்டுகளக்கும் மேலா தனித்து நிற்கின்றது. மேலும் அவர்களின் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் தாய் உணவை விரும்புகிறீர்களோ இல்லையோ.

துரித அழைப்பு – 0112 491 945
விலாசம் – இன்ஸைட் சினமன் லேக் சைட்
திறந்திருக்கும் நேரம் – ஒரு நாளில் 24 மணித்தியாலமும் திறந்திருக்கும்.

Robata Grill and Lounge

முன்னர் ஜப்பானிய உணவகமாக இருந்த ரோபாடா இப்போது மேலும் ஆறு வகையான ஆசிய உணவு வகைககளையும் மேலும் ஆறு வகையான ஆசிய உணவு வகைகளுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக வழங்கிவருகின்றது. ஆழஎநnpiஉம கொழும்பில் அமைந்துள்ள அவற்றின் உணவுத் தெரிவு மற்றும் விலையைக் கருத்தில் கொள்ளும்போது பகுதியளவிலேயே மிகவும் தாராளமாக இருக்கும். மேலும் 1500 ரூபாய்க்கு நீங்கள் நம்பமுடியாத உணவை அனுபவிக்க முடியும்

துரித அழைப்பு – 0117 450 450
விலாசம் – யு2இ ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தை கொழும்பு 07
திறந்திருக்கும் நேரம் – பி.ப 12.00 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 7 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @robatagrill

Facebook – @Robata-Grill-and-Lounge

Nom Nom Thai

மாயா அவென்யூவில் அமைந்துள்ள இந்த உணவகம், தெற்காசிய சுவையுடன் இணைந்த தாய்லாந்து உணவுகளையும் வழங்குகிறது. இவர்களின் சுவை உங்களின் சுவை மொட்டுக்களைத் தூண்டிவிடுவதும், மேலும் பல தெரிவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுபவிப்பீர்கள் என்பதும் நிச்சயம். பகுதி அளவுகள் மிகப் பெரியவை மற்றும் உணவுக்கான விலை 1500 ரூபாயாகும்.
துரித அழைப்பு – 0112 559 050
விலாசம் – 58 மாயா அவன்யூ கொழும்பு 06
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 3.00 வரை, பி.ப 6.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @nomnomthaisl

Facebook – @NomNomThaiSL

Ban Thai Seafood Restaurant

இவ் உணவகம் உண்மையான தாய் சுவையுடன் கூடிய உணவை ருசிக்க விரும்பும் உணவு பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும். Ban Thai மெனுக்களில் ஏராளமான கடல் உணவுகளுடன் மாறுபட்ட சுவைகளை அனுபவத்திடவும் ஏராளமான உணவுத்தெரிவுகளுக்கான மெனுவை தேர்ந்தெடுக்கும் அனைவருக்கும் தனித்துவமானதொரு அனுபவத்தை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் அளவைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம். ஆனாலும் ஒரு முறை உணவுக்கு 1500-2000 ரூபாய் வரை செலுத்தவேண்டும்.

துரித அழைப்பு – 0112 576 676
விலாசம் – 31ஃ5 இ சீ அவனியூ கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 10.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Siam House Restaurant

சியாம் ஹவுஸ் கொழும்பில் உள்ள மிகவும் பழமையான தாய்லாந்து உணவகங்களில் ஒன்றாகும். மேலும் இது பல ஆண்டுகளாக தாய்லாந்து உணவை அனுபவித்திட என்னும் இலங்கையர்களுக்கு இணையற்ற வழிகளில் உதவிசெய்திடும் மதிப்புமிக்கதொன்றாகும்.உணவுக்கான விலை ரூபாய் 1500.

துரித அழைப்பு – 0112 595 966

விலாசம் – 17இ மெல்போர்ன் அவன்யூ கொழும்பு
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.30 வரை

Facebook – @Siam-House-Thai-Restaurant

Jack Tree

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜெக் ட்ரீ உணவகம் கொழும்பில் தாய்லாந்து உணவுகளுக்கான மையப்புள்ளியாக உள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தாய் உணவுத் தெரிவுகளை வழங்கும் இவ் உணவகம் பிரத்தியேக தாய் உணவு சுவைகளை வழங்கி வாடிக்கையாளர்கள் மனதை ஈர்க்க ஒருபோதும் தவறியதில்லை. உணவு வகைகளைப் பொறுத்தே விலைகளும் உண்டு. உணவுக்கான விலை அண்ணளவாக 1000-2000 வரையில் இருக்கும்.

துரித அழைப்பு– 0117 620 620
விலாசம் – 289இ ஹை லெவல் வீதி கொழும்பு 03
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.30 இலிருந்து பி.ப 10.30 வரை

Facebook – @JackTreeSriLanka

Lan Tao Cafe & Fusion Restaurant

குடும்பத்தோடு இணைந்து தாய் உணவுகளை ருசித்திட ஏற்ற இடம் ; Lan Tao cafe. நட்பான சேவை, இதமான சுற்றுசூழல் என இந்த உணவகம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. விலை அண்ணளவாக 1000-2000 ரூபாய் வரையில்.

துரித அழைப்பு – 0112 584 514
விலாசம் – 47இ திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு 05
திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @lantaocafe

Facebook – @lantaocafe

Mama Thai Cuisine

மமா தாய் உணவகம் அசல் தாய் உணவு சுவைகளை வகைகளை உங்களுக்கு வழங்குகிறது. இந்த உணவகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் சுவையான உணவுகள் நிச்சயம் உங்கள் இதயத்தை கவர்ந்துவிடும். விலை அண்ணளவாக 1000-2000 ரூபாய் வரையிலாகும்.
துரித அழைப்பு – 0756 795 995
விலாசம் – 95இ ஹொஸ்பிடல் வீதி, களுபோவில,தெஹிவளை
திறந்திருக்கும் நேரம் – மு.ப 11.00 இலிருந்து பி.ப 11.00 வரை

Instagram – @mamathaicuisine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php