அழகை நாடி பெண்களைக் கவரும் தாடி ஸ்டைல்கள்!

பெண்களைக் கவரும் தாடி ஸ்டைல்கள்!

2020 Feb 28

ஃபேடட் லாங் தாடி (Faded Long Beard)

இது, வட்ட மற்றும் சதுர வடிவ முகத்துக்கான ஸ்டைல்.இந்த ஸ்டைலில் மிக டிரெண்டியான நபராக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். காதின் ஓரங்களில் இருக்கும் ரோமங்களில் ஆரம்பித்து கன்னங்களை நோக்கி அப்படியே தாடை வரை போகப்போக ரோமங்களின் அடர்த்தி அதிகரித்து கொண்டே போக வேண்டும். இதன் பராமரிப்புக்கு அதிக நேரம் செலவாகும். மாதம் இரண்டுமுறை சலூனுக்குச் சென்று ஷேப் மாறாமல் ட்ரிம் செய்ய வேண்டும். அதிகமான ஆண்கள் இதையே விரும்புகின்றனர்.

திக் அண்டு `வி’ ஷேப் தாடி (Thick & ‘V’ Shape Beard)

இது முரட்டுத்தனமான தோற்றத்தை விரும்புகிறவர்களுக்கான சரியான தேர்வு. இந்த ஸ்டைலுக்கு நீண்ட மற்றும் அடர்ந்து வளர்ந்த தாடி அவசியம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தாடியை வெட்டாமல் வளர்த்தபின் சலூனுக்குச் சென்று ஷேப் செய்துகொள்ளலாம். இது நீண்ட மற்றும் ஓவல் வடிவ முகங்களுக்கான ஸ்டைல்.

இந்த ஷேப்பை நீங்களே பராமரித்துக்கொள்ளாமல் சலூனுக்குச் சென்று பராமரிப்பது அவசியம். அடர்ந்த மீசைதான் இந்த ஸ்டைலுக்கான கெத்து. அதனால் முறுக்கு மீசைக்காரர்கள் இந்த ஸ்டைலை தயங்காமல் தேர்ந்தெடுக்கலாம்.

கான்டூர் தாடி (Contour Beard)

இந்த ஸ்டைல், வட்டவடிவ முகத்தினரை சாக்லேட் பாய் இமேஜிலிருந்து விடுவித்து முரட்டு தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது. கான்டூரிங் பியர்டு மூலம், உங்கள் முகத்தின் வடிவமே மாறியது போன்ற போலியான தோற்றத்தைக் கொடுக்கமுடியும். சிலருக்கு தாடியில் ரோமம் சீராக இல்லாமல் ஆங்காங்கே இடைவெளியுடன் வளரும். இவர்களுக்கு இந்த ஸ்டைல் கைகொடுக்காது.

ட்ரிம்மர், ஷேப் செய்ய உதவும் ஆங்குலர் சீப்பு மற்றும் சரியான கத்தரிக்கோல் போன்றவற்றின் மூலம் நீங்களே பராமரித்துக் கொள்ளமுடியும். ஆனால், மிகுந்த கவனமும் போதிய பயிற்சியும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php