2020 Feb 28
தேவையான பொருட்கள்:
- நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் – 3
- பாலில் ஊறவைத்த 4 தேக்கரண்டி ஓட்ஸ்
- பாலில் ஊறவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
- கடலைமாவு – 2 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
நன்கு ஊறவைத்து, அரைத்த பாதாம் விழுதோடு பாலில் ஊறவைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை கலந்துகொள்ளவும்.
இதனுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஊறவைத்தால், ஃபேஸ் பேக் தயார்!
பாவனை முறை :
முதலில் காய்ச்சாத பால் வைத்து முகத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். முகத்தில் பால் தடவிவிட்டு, பஞ்சினால் துடைத்து எடுக்கவும். பாலிலுள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் ஆக்கும். சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
ஃபேஸ் காஸ் (Gauze) எனப்படும் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்தி தயாராக உள்ள ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுக்க அப்ளை செய்யவும்.
20 நிமிடங்கள் கழித்து, ஃபேஸ் காஸை நீக்கினால் போதும். முகம் தளர்ச்சியின்றி பளிச்சென மாறியிருக்கும்.
ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 5 நாட்கள் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்யலாம் .
பாதாம் மற்றும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் B , புரதம் போன்றவை சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்.