அனைத்தையும் நாடி  தினமும் காலையில் ஐஸ் பிரியாணி !

தினமும் காலையில் ஐஸ் பிரியாணி !

2020 Oct 12

ம் முன்னோர்கள் எதிலும் புதுமை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் தந்து சென்ற ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம் வாழ்வில் ஓர் படி மேல் செல்லவும் ஆரோக்கியமான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான் இந்த பழஞ்சோறு. மதியம் வடித்து உண்ட பின் மீதமான சாதத்தில் மறு நாள் வரை நீர் ஊற்றி வைத்தால் அது பழஞ்சோறாகும். வகை வகையாக எத்தனை உணவுகள் உண்டாலும் மனதிற்கும் வயிற்றிற்கும் இதம் தரும் பழஞ்சோறின் சுவை தனித்துவமானது. இதனை பழைய சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்ற பெயர்களாலும் அழைப்பர்.

பழஞ்சோறினை உண்பதால் ஏற்படும் நன்மைகள்,
பழஞ்சோறானது அதிக நார்ச் சத்தினை கொண்டுள்ளது இதனால் மலச்சிக்கல் ஏற்படாது காத்துக் கொள்ள முடியும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் குணமாகும்.

பழஞ்சோற்றில் புரதச்சத்து காணப்படுகிறது இது உடலிற்கு வலிமையினையும், உடல் வளர்ச்சியிற்கும் உதவுகிறது.

பழஞ்சோற்றில் காணப்படும் காபோவைதரேற்று அன்றைய நாள் முழுதும் வேலை செய்வதற்கு தேவையானளவு சக்தியினை தருகிறது.

பழஞ்சோற்றில் காணப்படும் கல்சியம் பற்கள் மட்டும் என்புகளினை வலிமையானதாக பேண உதவுகிறது.

பழஞ்சோற்றில் காணப்படும் விட்டமின் B உடலின் குருதியில் காணப்படும் (red blood cells)யின் வளர்ச்சிக்கும், மூளையின் சீரான செயற்பாட்டுக்கும், உணவு சமிபாட்டிற்கும் உதவுகிறது.

பழஞ்சோற்றில் காணப்படும் குளோரைட்டானது உடலின் குருதி அமுக்கம், குருதியளவு, pH பெறுமானம் போன்றவற்றை சீராக பேண உதவுகிறது.

பழஞ்சோற்றில் காணப்படும் சோடியமானது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது, கிட்னி பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், பழஞ்சோற்றில் தாதுக்களும் காணப்படுகிறது.

பழஞ்சோற்றினை மேலும் சுவையாக மாற்றுவதற்கான வழிமுறைகள்,
சிலருக்கு பழஞ்சோறின் மணமும் சுவையும் பிடிக்காதவர்களுக்கு பிடித்த மாதிரியாக பழஞ்சோற்றினை மாற்றியமைக்க முடியும். அவ்வாறான சில வழிமுறைகள்,
பழஞ்சோற்றினை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி தயிர் கலந்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நறுக்கி போட்டு ஊறுகாயுடன் பரிமாறலாம். இது தனிச் சுவை உடையதாக பழஞ்சோற்றினை மாற்றும்.

பழஞ்சோற்றினை கொண்டு வடை மற்றும் வடகமும் செய்யலாம்.

  • பழஞ்சோற்றினை உண்பதால் குணமாகும் நோய்கள்
    சக்கரை நோய்
    உடல் உஷ்ணம் தணிக்கும்
    மலச்சிக்கல்
    இரத்த அழுத்தம்
    தோல் வியாதி
    வயிற்றுப்புண்

 

இவ்வாறாக நம் முன்னோர் சொல்லி தந்து சென்ற காலையில் பழஞ்சோறு உண்ணும் பழக்கத்தினை நம் வாழ்வில் இது வரை நடைமுறைப்படுத்த தவறியிருந்தாலும் இனியாவது நடைமுறைப்படுத்திக் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php