அனைத்தையும் நாடி  இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்

இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்

2021 Apr 23

11ம் நூற்றாண்டில் ‘முறுசாக்கி சிகிபு’ என்ற ஜப்பானிய பெண்மணியினால் ‘The tale of Genji’ என்ற நூல் உலகின் முதலாவது நாவலாக கருதப்படுகின்றது. அன்று முதல் வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில் நீங்கா இடம் பிடித்துள்ளது. புத்தகம் வாசித்தல் என்பது ஓர் மனிதனிடம் இருக்கக்கூடிய சிறந்த பண்புகளில் ஒன்றாகும். இப் பழக்கம் மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றபோதிலும், அதிகமான மக்களுக்கு புத்தகமே சிறந்த நண்பனாக சித்தரிக்கப்படுகிறது. ஆகவே இக் கட்டுரையில் புத்தகம் வாசிக்கும் பண்புகளை கண்டறிவதோடு, அதற்கு தாக்கம் செலுத்துகின்ற காரணிகளைப் பற்றி சற்று நோக்குவோம்.

இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஆதி கால மக்கள் பகுத்தறிவற்ற மக்களாகவே விளங்கினர். நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாக நகரம் சார் நாட்டம் கொண்டனர். எனினும் நகரங்கள்; பதாகைகள், குறியீடுகள், இலக்கங்களைக் கொண்ட பொறிமுறையை அடிப்படையாகக்கொண்டு விளங்கியதால், மக்கள் அதனை வாசித்து, கிரகித்து செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. கற்றால் மாத்திரமே நகரங்ளில் தமது அன்றாட வாழ்க்கையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனடிப்படையில் மக்கள் கல்வியின் பால் ஈர்க்கப்பட்டு பல கல்விமான்கள் உருவாகத்தொடங்கினர். இதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய கல்வி கற்றோர் விகிதம் 91.9% என்பது, உண்மையிலே பெருமை கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும்.

இலங்கையின் பொக்கிஷங்களாக புராதன நூலகங்கள் எப்போதும் விளங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவின் மிகப்பெரிய, முக்கிய நூலகமாக இன்றுவரை கருதப்படுகின்றது. மறுமலர்ச்சி காலங்களில் உலகின் வர்த்தக மற்றும் கல்வி சார் தலைநகரமாக விளங்கிய கொன்ஸ்டான்டிநோபிள் வெளியிடப்பட்ட பல அறிவியல் புத்தங்கள் யாழ் நூலகத்தில் இருந்தாக பல சான்றுகள் உள்ளன. எனினும் 1981ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந் நூலகம் எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளுதல் மற்றும் பகுப்பாய்வு திறன்கள் வெகுவாக மேம்படுவதோடு, கற்பனைகள் மூலம் எமது மனதின் நினைவக மையங்கள் தூண்டப்படுகின்றது. இதன் மூலம் எமது ஞாபக சக்தி கூர்மையாக்கப்படுவதோடு எமது மனநிலை சமநிலைப்படுத்துகின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் சில சந்தர்ப்பங்களில் அதிகளவான புத்தக வாசிப்பு பல நபர்களின் மனநிலையை பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விஞ்ஞான யுகத்தின் ஆதிக்கம் காரணமாக, பல மாற்றுப் பொழுதுபோக்குகளால் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் Smart Phone இன் வருகையினால் Games, Videos மற்றும் Messaging Apps ஆகிய துறைகள் பால் திசை திருப்பப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய விலைவாசியின் காரணமாக புத்தகம் வெளியிடுவதற்கோ அல்லது புத்தங்களை வாங்கி வாசிப்பதற்கோ யாரும் முயற்சி எடுப்பது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனினும் ஆண்டுதோறும் நடைபெறும் கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு பாரியதோர் வரைவேற்பு உள்ளதென்பது யாவரும் அறிந்ததே.

2005ம் ஆண்டு, சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு 2ம் தர கல்வியின் முடிவில் ஓர் மாணவன் வாசிப்பு, எழுதுதல், புரிதல் ஆகிய திறன்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுவர்களின் வாசிப்புத் திறனை கணிக்கும் முகமாக மாணவர்களிடம் மேற்கொண்ட கேள்விகளில், 84.2%க்கும் அதிகமான சிறார்கள் 1 புள்ளியையேனும் பெறவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php