Open Time:
திங்கள் முதல் ஞாயிறு காலை 11 மணி முதல் 2 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரைAddress
53, ஆனந்த குமார சுவாமி மாவத்தை, கொழும்பு 03
directions
Cinnamon Red இற்கு முன்னால்
Contact No
Menu
What we had
இஸ்ஸோ (Isso), அவர்களது தளத்தின் மேற்பகுதியில் புதிதாக ஒரு பார் பகுதியினை அமைத்துள்ளனர். இலங்கையின் கொக்டெயில்கள் அடங்கிய ஓர் சிறப்பான பட்டியலினை இவர்கள் ஒழுங்கமைத்துள்ளனர். இங்கு நாங்கள் சென்றிருந்த போது அவர்களது பட்டியலில் உள்ள சிக்னேச்சர் கொக்டையில் வகைகளில் ஒவ்வொன்றிலும் ஒன்றை ஓர்டர் செய்தோம்.
இவை ஒவ்வொன்றினதும் விலை 990 ரூபாய் ஆகும். நீங்கள் இந்த கொக்டையில்களில், இலங்கை அராக்கினை மேலதிக உள்ளீடாக சேர்க்கும் போது சாதாரண விலையிலிருந்து 1490 ரூபாயாக மாற்றமடைகிறது.
ஹிரிகெட்டிய (Hiriketiya)
இந்த கொக்டையிலில் அல்கஹோல் மற்றும் பழச்சாறு ஆகிய இரண்டும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருந்தன. இந்த முழு கொக்டையிலும் சிட்ரஸ் பழ சுவையை கொண்டிருந்தது. இதன் மேல் காணப்பட்ட தேங்காய் மற்றும் ஜின்னின் சுவை முதல் சிப்பிலேயே உங்கள் நாவிற்கு புதியதொரு அனுபவத்தை பெற்றுத் தரும். இது வெறும் ஒரேஞ்ச் ப்ளேவர் மட்டுமன்றி வெனிலா மற்றும் எலுமிச்சை சாறு என உங்கள் நாவிற்கு விருந்தளிக்க கூடியதாகும்.
கொள்ளுப்பிட்டிய (Kollupitiya)
பட்டியலில் காணப்பட்ட இனிப்பான ஓர் கொக்டைலாக இது இருந்தது. இதில் நடுநிலையில் சிட்ரஸ் இருந்த போதும் ஒவ்வொரு சிப்பிலும் தேனின் சுவையினை அனுபவிக்க முடிந்தது.
யால (Yala)
வாயூற வைக்கும் கொக்டையிலில் அம்பரெல்லா அச்சாறு! இந்த கொக்டையிலில் ஒரு சிறப்பான ஸ்நெக் ப்ளேவரினை உருவாக்க ஆனைக்கொய்யா சேர்க்கப்பட்டிருந்தது. இதனை கொக்டைல் என சொல்வதை விட சிற்றுண்டி என்றே சொல்ல வேண்டும். இதன் விளிம்பைச் சுற்றி தூவப்பட்டிருந்த உப்பு மற்றும் மிளகின் சுவை சட்டென தலை முதல் கால்களை தொட்டு விட்டு வரும்.
திகன (Digana)
இது ஸ்ட்ரோங்கான சிட்ரஸ் சுவையினை கொண்டிருந்ததோடு இதன் விளிம்பில் உப்பு மற்றும் மிளகு தூவப்பட்டிருந்தது. இதில் இருந்த ஒவ்வொன்றும், ஒன்றுடனொன்று சேர்ந்து தந்த சுவை சிறப்பானதாக இருந்தது. பெண்களது இரவு நேர நைட் அவுட் இன்ஸ்டகிராம் புகைப்படத்திற்கு இது பொருத்தமானதாக இருக்கும்.
அறுகம் பே (Arugam Bay)
இந்த கொக்டைலை தயாரிக்கும் போது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென க்ளாஸில் முட்டையின் வெண்கருவினை இட்டனர். இதைக் கண்டவுடன் முதலில் திடுக்கிட்டு அதிர்ந்து போனேன். எனக்கு பிறரை பற்றி தெரியாது ஆனால் எனக்கு என்னுடைய உணவு சரியாக சமைக்கப்பட வேண்டும். இந்த கொக்டைல் முதலில் பெரிதாக ஓர் அனுபவத்தை பெற்றுத் தராது. ஆனால் குடித்து முடித்ததும் ஓர் கசப்பான உணர்வினை நாவில் விட்டுச் செல்கிறது. இதில் முட்டை வெண்கருவானது, மேற்பரப்பில் இருக்கும் நுரையின் செறிவினை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்த கொக்டையிலை குடிக்கும் போது, அது புதியதொரு சுவையினை ஏற்படுத்துவதற்காகவே. இது ஸ்டைலிஷ்ஷான, சிங்கிள், ஸ்குயார் சன்க் ஐஸுடன் பரிமாறப்படுகிறது. இதனை ஒரே கதியில், வேகமாக குடித்து டவுன் செய்வது சிறப்பானது.
வெலிகம (Weligama)
இது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்! புளிப்பு சுவையை விரும்பி உட்கொள்பவர்களுக்கு இது ஓர் சிறந்த தேர்வாகும். இதிலுள்ள பெஷன் பழம், கொக்டையிலின் செறிவினை அதிகரிப்பதோடு, இதிலுள்ள துளசி இலைகள் ஒரு வகையான பாரம்பரிய சுவையினை உணரச் செய்கிறது. இதன் ஒவ்வொரு சிப்பிலும் இதனை அனுபவிக்க முடியும்.
உனவட்டுன (Unawatuna)
இந்த கொக்டைல் பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. என்ன தான் இது இஸ்ஸோவின் சிக்னேச்சர் கொக்டைய்ல்களில் ஒன்றாக இருந்தாலும், இந்த கொக்டையிலில் கலவைகள் ஒன்றுடன் ஒன்று அதிகமாக கலந்ததாக உணர்கிறேன். இதன் சுவையினை அதிகரிக்க இன்னும் எதாவது ப்ளேவர்களை மேலதிகமாக சேர்த்தால் சிறப்பானதாக இருக்கும்.
தம்புள்ள (Dambulla)
இந்த கொக்டையிலினை குடிக்கும் போது ஒரு கடலோரத் தீவுகளில் (tropical island) இருக்கும் உணர்வு தோன்றுகிறது. இங்கு சூரியனும் மணலும் கடலும் தான் மிஸ்ஸிங். இந்த கொக்டைலுக்கு ஏன் ஏதாவது ஒரு கடற்கரை நகர்ப்பகுதிகளின் பெயர் வைக்கப்படவில்லை என தெரியவில்லை. இதில் உள்ள அன்னாசிப்பழச் சுவை, தேங்காயின் அரை இனிப்புச் சுவை மற்றும் அராக்கின் தோராயமான சுவை அனைத்துமே கலந்து சிறப்பான ஓர் அனுபவத்தை பெற்றுத் தருகிறது. நாங்கள் ருசித்த கொக்டைல்களில் இது தான் சிறப்பானது
சுற்றுப்புறம் (Ambiance)
கீழ்தளத்தில் காணப்படும் பிரகாசமான அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. Shrimp Daddy’s பகுதியானது, மங்கலான விளக்குகள் மற்றும் அழகான க்ரானைட் பாரினை கொண்டுள்ளது. அத்துடன் அழகான இருக்கை அமைப்பும் வௌிப்புற பகுதியும் (outdoor area) கொண்டுள்ளது. இது வெறும் ஆரம்ப நிலை தான். இவர்களது வருங்கால வளர்ச்சியினை காண நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.
குறிப்பு – யாலவினை (Yala) முயற்சியுங்கள் – ‘சும்மா தெ(வெ)றியா இருக்கும்’.