அனைத்தையும் நாடி  கொழும்பில் செல்லப்பிராணிகளை அழைத்துப் போகக்கூடிய உணவகங்கள்

கொழும்பில் செல்லப்பிராணிகளை அழைத்துப் போகக்கூடிய உணவகங்கள்

2021 Apr 25

நம்மில் பலர், நாம் வளர்க்கும் விலங்குகள் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இதனால் நாம் வெளியில் செல்லும் போது எங்களுடைய செல்லப் பிராணிகளையும் எங்களுடன் அழைத்து செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றோம். இனிமேல் கொழும்பில் உங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்துப் போகக் கூடிய வகையிலான உணவகங்களை தேடுவதில் கவலை வேண்டாம். உங்களுக்காக நாங்கள் எங்களது குழுவினருடன் இணைந்து கொழும்பிலுள்ள செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்லக் கூடிய கபே, உணவகங்கள் சிலவற்றின் பட்டியலை தயாரித்துள்ளோம்.

டயோ பியர் (Tayo Bear)

2019ஆம் ஆண்டு கிரிகோரியன் வீதியில் டயோ பியர் திறக்கப்பட்டது. இது நாய் பிரியர்களுக்கும் நாய்களினை வளர்க்கும் உரிமையாளர்களுக்கும் சிறந்ததொரு அனுபவத்தினை பெற்றுத்தரக் கூடிய இடமாகும். இங்கு இரண்டு வெவ்வேறு மெனுக்களின் மூலம் ஆரோக்கியமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. டயோ பியர் பற்றிய மேலதிகமானவற்றை @tayobear எனும் அவர்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணலாம்.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 10.30மணி முதல் இரவு 9.30மணி வரை (வியாழக்கிழமை ஓய்வு நாளாகும்)

தொலைபேசி : 0771 992 907

 

பெப்பர்மின்ட் கபே (Peppermint Cafe)

முதன் முதலில் கொழும்பு 7இல் திறக்கப்பட்ட 24 மணி நேர கபே இதுவாகும். நாங்கள் பட்டியல் படுத்தியுள்ள கபேக்களில் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான ஓர் பிணைப்பினை கொண்டுள்ள சிறந்த கபே இதுவே. இங்கு மனிதர்களுடைய வயிற்றினை நிரப்புவதற்கென சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இருப்பது போலவே செல்லப்பிராணிகளுக்கெனவும் தனி மெனுவே உண்டு.

24 மணி நேரமும் திறந்திருக்கும்.

தொலைபேசி : 0756 320 420

 

ப்ளஸ் நைன் ப்ஹோர் (Plus Nine Four)

கொழும்பு நகரிலுள்ள செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லக் கூடிய மற்றுமொரு கபே தான் ப்ளஸ் நைன் ப்ஹோர். இது 2018ஆம் ஆண்டு மே மாதம் கபே கும்பூவின் (Cafe Kumbuk) சிஸ்டர் கபே ஆக திறக்கப்பட்டது. இங்கு சிறப்பான உள்நாட்டு உணவுகளை ருசிக்க முடியும். இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளக மற்றும் புறத்தோற்றமானது நமது செல்லப்பிராணிகளை மிகவும் சௌகரியமாக உணர வைக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 9மணி முதல் மாலை 5மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0112 554 225

 

சுகர் பீச் (Sugar Beach)

நாவூற வைக்கக் கூடிய உணவுகள், அற்புதமான கொக்டைய்ல் மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றுடன் கடலின் அழகை பார்த்த படி ஓர் பொழுதினை கழிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் உங்கள் அன்புக்குரிய செல்லப்பிராணிகளுடன் பொழுதினை கழிக்க கூடியதாகயிருந்தால்? இவ்வாறாக தங்களது செல்லப்பிராணிகளை கடற்கரையோரம் வாக்கிங் கூட்டிக் கொண்டு சென்று உணவு உண்ண விரும்பும் பலருக்கும் சுகர் பீச் ஒரு சிறந்த தேர்வு.

Open hours: காலை 10மணி முதல் நள்ளிரவு 12மணி வரை (திங்கள் – வெள்ளி), காலை 9மணி முதல் நள்ளிரவு 12மணி வரை (சனி– ஞாயிறு)

தொலைபேசி : 0117 035 135

 

ப்ளெக் கெட் கபே (Black Cat Cafe)

இவர்கள் உங்களது செல்லப்பிராணிகளை உணவகத்திற்கு வெளியில் மட்டுமென அனுமதிக்கும் போது கூட இவர்கள் செல்லப் பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபே ஆகவே கருதப்படுகின்றனர். இங்கு ஒரு கப் காபி மற்றும் நீங்கள் தெரிவு செய்யும் ஒரு ஜோடி சன்ட்விச் வகை சிறப்பான முறையில் பரிமாறுவதோடு அதை நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகள் பக்கத்திலிருந்தே ருசிப்பதையும் உறுதி செய்கின்றனர்.

Open hours: காலை 8மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0112 675 111

ஸ்பின்னர் கபே (Spinner Cafe)

இதுவும் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபேக்களில் ஒன்றாகும். இங்குள்ள புறப்பகுதியானது நீங்கள் உங்கள் செல்லப்பிராணியுடன் சௌகரியமாக மற்றும் சிறப்பாக பொழுதை கழிக்க சிறந்த தேர்வாகயிருக்கும்.

திறந்து வைக்கப்படும் நேரம் : 6மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள் – ஞாயிறு)

தொலைபேசி : 0768 716 266

 

கபே ஷோஷயில் (Cafe Sociale)

செல்லப்பிராணிகளை மனதில் வைத்து தங்களது உணவுப் பட்டியலினை தயாரிக்கும் கபேக்களில் இதுவும் ஒன்றாகும்.

திறந்து வைக்கப்படும் நேரம் : காலை 8மணி முதல் இரவு 10மணி வரை (திங்கள்– ஞாயிறு)

தொலைபேசி : 0774 445 788

மேற்கூறப்பட்ட ஒவ்வொன்றும் செல்லப்பிராணிகள் மீதான நட்பு ரீதியான கபேக்களாகும். எங்களுடைய இந்த ரௌன்ட் அப் முடிவுகள் உங்களுக்கும் உங்கள் செல்லப்பிராணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php