அனைத்தையும் நாடி  கொழும்பில் மெக்ஸிகன் உணவு கிடைக்கும் இடங்கள்

கொழும்பில் மெக்ஸிகன் உணவு கிடைக்கும் இடங்கள்

2021 Apr 28

மெக்ஸிகோவானது டகோஸ், பர்ரிடோஸ் மற்றும் டெக்கீலாவின் நிலம். மெக்ஸிகன் உணவு தனித்துவமான சுவை கொண்டிருப்பதனால் பிரபலமாக காணப்படுகிறது. சில மெக்ஸிகன் உணவகங்கள் இலங்கையில் காணப்பட்டபோதிலும் அந்த உண்மையான டெக்ஸ்-மெக்ஸ் ருசியை பூர்த்தி செய்ய இன்னும் சில விடயங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் சில, உண்மையான மெக்ஸிகன் சுவையை பிரத்தியேகமாக பூர்த்தி செய்கின்றன. மற்ற உணவகங்களும் சில அருமையான மெக்ஸிகன் உணவுகள் மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் உணவு வகைகளை வழங்குகின்றன. எனவே, பிரத்தியேக மெக்ஸிகன் உணவகங்கள் மற்றும் சில மெக்ஸிகன் உணவுகளை வழங்கும் விரிவான மெனுக்கள் கொண்ட உணவகங்கள் மற்றும் டெக்ஸ்-மெக்ஸ் சார்ந்த உணவுகளை வழங்கும் உணவகங்கள் பிரித்துப் பார்க்கலாம்.

பிரத்தியேகமான மெக்ஸிகன் உணவகங்கள்

டகோ பெல் (Taco Bell)

டகோ பெல்- நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் நிறுவப்பட்டது. அப்போதிருந்தே மூன்று கிளைகளை (ஹோர்டன் பிளேஸ், மரைன் டிரைவ் மற்றும் கல்கிசை) திறந்து, தரமான சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இன்றுவரை, எனக்கு எப்போதாவது மிருதுவான, மென்மையான சீஸ் சாப்பிட வேண்டுமென தோன்றினால், டகோ பெல்லிலிருந்து உணவைத் தேர்வு செய்கிறேன். பொதுவாக டகோ பெல்லில் எல்லா உணவின் மேலும் சீஸ் சேர்க்கிறார்கள்.

36, ஹார்டன் பிளேஸ், கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

3, 32 8 வது லேன், கொழும்பு 3
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

89, காலி வீதி, தெஹிவல – கல்கிஸ்ஸ
திறக்கும் நேரம் – காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை

டகோ கெட் (Taco Cat)

டகோ கெட், வண்ணமயமான மற்றும் இன்ஸ்டாகிராம் படவரியில் பதிவிடக்கூடிய கண்களுக்கு கவர்ச்சிகரமான உணவை வழங்குகிறது. சில சுவையான டெக்ஸ்-மெக்ஸை உட்கொள்ள உங்களுக்கு ஆர்வமிருந்தால், டகோ கெட் அதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த புதுமைகள் நிறைந்த உணவகம், பிளாக் கேட் கஃபேயை அண்மித்திருக்கிறது. இங்கு ஹலால் மற்றும் தாவர உணவுகளையும் பரிமாறுகிறார்கள். உங்கள் உணவில் தேவையான, புரதம், சாலடுகள் மற்றும் சாஸ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் சொந்த மெக்சிகன் விருந்தை விருப்பப்படி தேர்வு செய்யலாம்.

11, விஜேராம மாவத்தை, கொழும்பு 7
திறக்கும் நேரம் – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை (திங்கள் கிழமைகளில் மூடப்படும்)

கிங் ஆஃப் தி மம்போ (King of The Mambo)

கோல் ஃபேஸ் ஹோட்டலில் அமைந்துள்ள கிங் ஆஃப் தி மம்போ அதன் ஹேப்பி ஹவர் சலுகைகள் மற்றும் லேடீஸ் நைட்ஸ் நிகழ்வுகளால் புகழ்பெற்றது. இது அற்புதமான, அழகான சுற்றுப்புறத்தைக் கொண்டுள்ளதுடன், பல சுவையான உணவுகளையும் பரிமாறுகிறது. மேலும் நம்பமுடியாத மெக்சிகன் உணவு வகைகளுக்கும் இந்த இடம் பெயர்போனது! அவர்களின் பீஃப் ரிப் டகோஸ் (Beef Rib Tacos), எம்மை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும். நீங்கள் அதை விரும்புவீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! அனால் ஏன் நீங்கள் இங்கு கண்டிப்பாக வர வேண்டும்? எனக் கேட்டால், இவர்களின் தனித்துவமான கருப்பொருள் கொண்ட, கண்ணாடிகளில் ஊற்றப்பட்ட காக்டெய்ல்கள் அலாதியானவை. டெகிலாவின் தூறல்கள் நிறைந்த, உண்மையான மெக்ஸிகன் அனுபவத்திற்கு, பிளாக் மம்போ உங்களை கூட்டிச்செல்லும்.

கோல் ஃபேஸ் ஹோட்டல், 2, காலி வீதி, கொழும்பு 3
திறக்கும் நேரம் – மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

ஒருங்கிணைந்த மெக்ஸிகன் உணவகங்கள்

தி பார்ன்ஸ்பரி (The Barnesbury)

கட்டாயம் சுவைக்க வேண்டிய டிஷ் : என்சிலதாஸ் (Enchiladas)

பிரத்தியேகமாக மெக்ஸிகன் உணவகம் இல்லையென்றாலும், பார்ன்ஸ்பரி அற்புதமான, மென்மையான என்சிலாதாஸை வழங்குகிறது. கனகச்சிதமாக சமைக்கப்படும் இந்த என்சிலாதாஸ்கள், கோழி மற்றும் கிரீமியான மீன் என இரண்டு சுவைகளில் கிடைக்கின்றது. இந்த டிஷ் மீது இடப்படும் அதிக மசாலா, நாவூறும் சுவையைத் தருகிறது.

91, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் 12 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை), காலை 7 மணி முதல் 1 மணி வரை (வெள்ளி மற்றும் சனிக்கிழமை)

க்ரொஸ்ரோட் கஃபே அன்ட் ரெஸ்டோரன்ட் (Crossroads Café and Restaurant)

சுவைக்க வேண்டிய டிஷ் – சிக்கன் ஃபாஜிதாஸ் மற்றும் சிக்கன் என்சிலதாஸ் (Chicken Fajitas and Chicken Enchiladas)

ஒரு சுவையான கேடரர்ஸ் ஸ்தாபனம். க்ரொஸ்ரோட்ஸ் கஃபே மற்றும் உணவகம் ஒரு பரந்த மெனுவைக் கொண்டுள்ளது, இதனால் நீங்கள் தேர்வுக்கு குழப்பமடைய வாய்ப்பிருக்கிறது. அத்தகைய மெனுவில் மிகவும் முக்கியமாக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உருப்படிகள் உள்ளன: சிக்கன் ஃபாஜிதாஸ் மற்றும் சிக்கன் என்சிலதாஸ். குவாக்காமோல், பீன்ஸ் மற்றும் புளிப்பு கிரீம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாபெரும் டோர்ட்டில்லாவில் மூடப்பட்ட கோழியின் வறுத்த கீற்றுகள் அடங்கும் டிஷ் ஒன்று. மற்றையது மொஸெரெல்லா சீஸ், மெக்ஸிகன் சல்சா மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றைக் கொண்டு வறுக்கப்பட்ட கோழிகளைக் கொண்டது. உங்கள் வாயில் இன்னும் தண்ணீர் ஊறுகிறதா? மலிவு விலையில் சீஸி மெக்ஸிகன் உணவுகளை இங்கு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!

292, நாவல வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை.
திறக்கும் நேரம் – காலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மெக்ஸிகன் பியூஷன்

ஸலாட் மாப்ஸ் (Salad Maps)

ஸ்டார் மெக்சிகன் டிஷ் – மெக்சிகன் டகோ சாலட்

இது ஒரு குறிப்பிட்ட வகை உணவுடன், குறிப்பிட்ட பொருள்களை ஒன்றிணைத்து சாலட் முறையில் உணவு பரிமாறுமிடம். சாலட் மாப்ஸ், நாடு சார்ந்த “உலகின் சாலட்களை” வழங்குகிறது. அதிலொன்றுதான் மெக்ஸிகோ. அவர்களின் மெக்ஸிகன் டகோ சாலட் கட்டாயம் சுவைக்க வேண்டிய விருந்தாகும். இது டோர்ட்டில்லா சிப்ஸ், மூன்று வகையான சீஸ், பெரி பெரி சிக்கன், கீரை, இனிப்பு சோளம், பீன்ஸ், பெல் பெப்பர்ஸ், செர்ரி தக்காளி மற்றும் மெக்ஸிகன் டிரஸ்ஸிங் ஆகியவற்றை உள்ளடக்கியது! நாம் இன்னும் சொல்ல வேண்டுமா? அவற்றை நீங்கள் Pick Me மற்றும் Uber Eats மூலம் ஓர்டர் செய்து கொள்ளலாம்.

திறக்கும் நேரம் – காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை (திங்கள் முதல் சனி வரை)

கிரிக்கெட் கிளப் கஃபே (Cricket Club Café)

ஸ்டார் மெக்ஸிகன் டிஷ் – மெக்கல்லமின் மெக்ஸிகன் ரொட்டி மற்றும் பவுண்டரி பீஃப் அல்லது சிக்கன் நாச்சோஸ். (McCullum’s Mexican Wrap and Boundary Beef or Chicken Nachos)

கிரிக்கெட் கிளப் கஃபே ஏராளமான கிரிக்கெட் சார்ந்த உணவுகளை வழங்குகிறது. இங்கு பாவிக்கும் மசாலாவின் சுவை அலாதியானது. மெக்கல்லமின் மெக்ஸிகன் ரொட்டி, உங்கள் ரூபாய்க்கு மதிப்புள்ள ஒரு திருப்தியான உணவாகும். பவுண்டரி பீஃப் மற்றும் சிக்கன் நாச்சோஸ் ஆகியவை டெக்ஸ்-மெக்ஸ் உணவாகவும், இன்னொருவருடன் பகிர்ந்து உண்ணக்கூடிய கொள்ளளவுடையதாகவும் காணப்படுகிறது. மாட்டிறைச்சி அல்லது கோழியைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.

12, fபிலவர்ஸ் வீதி, கொழும்பு 7
திறக்கும் நேரம் – காலை 7.30 முதல் இரவு 11.30 வரை

பிலேய்ட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார் அன்ட் கஃபே (Playtrix Sports Bar and Café)

ஸ்டார் மெக்ஸிகன் டிஷ் – ஃபுள் ஹவுஸ் மெக்ஸிகன் ஹாட்-டோக்

உணவருந்த எனக்கு பிடித்த இடங்களில் ஒன்றான பிளேய்ட்ரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார், ரூபாய்க்கு மதிப்புள்ள சேவையை வழங்குகிறது. 12 அங்குல நீளமுள்ள மெக்ஸிகன் ஹாட்-டோக், அமெரிக்க மற்றும் மெக்ஸிகனின் சரியான கலவையாகும். நொறுக்கப்பட்ட நாச்சோஸ், ஜலபெனோஸ், வறுத்த வெங்காயம், பூண்டு மற்றும் உருக்கிய சீஸ் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட இந்த கால் நீள பன், ஒரு முழுமையான விருந்தாகும்! நீங்கள் சி.சி.சி.க்கு போகும்போது மெக்ஸிகன் உணவை விரும்பினால், பிளேய்ட்ரிக்ஸை நாடவும். ‘சில்லாக’ ஒரு பீர் குடித்துக்கொண்டே, உணவினை சுவைத்திடலாம்.

லெவல் 1, கொழும்பு சிட்டி சென்டர், 137, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு 2

24 மணி நேரம் திறந்திருக்கும்!

இதோ உங்கள் மெக்ஸிகானோவைப் பெறக்கூடிய இடங்களின் பட்டியல்! உங்கள் தேர்வுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here