அனைத்தையும் நாடி  இந்தக் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள்?

இந்தக் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள்?

2021 Jul 5

ஓர் அழகான பிரகாசமான கோடை காலத்தில் உங்கள் துணைவருடன் பூங்காவில் நடந்து செல்லும் போது யாரோ ஓர் ஜோடி பேசி சிரித்தபடி தங்களது சிறிய உலகினை ஓர் நீலநிற துணியால் (ஆண் குழந்தை) சுற்றி அலங்கரித்து கொண்டு வருவதை காண்கிறீர்கள். அப்போது நீங்கள் உடனே அந்த குழந்தையின் அருகில் சென்று அது மீண்டும் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்ற நம்பிக்கையில் சிரிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நினைத்ததற்கு மாறாக அந்த குழந்தை உங்களை சில விநாடிகள் முறைத்துப் பார்த்து கோபப்படுவதை அவதானித்து ஆச்சரியப்பட்டதுண்டா? இந்த குழந்தைகளின் மனதில் அப்படி என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது? இவர்கள் வெறுமனவே சாப்பிட்டு, மலம் கழித்து, உறங்கி, அடிக்கடி சிணுங்குவதேன்? இவ்வாறாக குழப்பமடைந்ததுண்டா? இதோ குழந்தைகளின் சில முகப்பாவனைகளை கொண்டு அவர்கள் மனதில் அப்படி என்ன தான் ஓடிக் கொண்டிருக்கிறது என நாங்கள் கணித்தவை.

  • “சம்திங்-அப்-மை-ஸ்லீவ்” என்ற முகபாவனை.

இந்த முகபாவனை என்ன கூறுகிறது என்றால் “நான் எனது சிறிய விளையாட்டுப் பொருளை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வந்தது அம்மாக்கு தெரியாது. பரவாயில்லை அவர் எப்படியும் கண்டுபிடிப்பார்.”

  • “இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை நிறுத்துங்கள்” என்ற முகபாவனை.

இந்த முகபாவனையை உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து செய்யும் போது “தயவு செய்து இப்படி பேசுவதை இப்போதே நிறுத்துங்கள்! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இப்படி பேசுவது எரிச்சலாக உள்ளது. என்னாலும் இப்படி பேச முடியும். இது ஒரு மோசமான செயல். உங்களது வேலைகளை பாருங்கள் அல்லது இப்படி பொது இடங்களில் என் மானத்தை வாங்குவதை நிறுத்துங்கள். என் நண்பர்கள் இதையெல்லாம் கேட்டால் என்னை என்னவென்று நினைப்பார்கள்?” என கூற முற்படுகிறார்கள் என்று அர்த்தம்.

  • “ஓ-ஆமாம்” என்ற முகம்.

w

நீங்கள் ஸ்பாக்களுக்கு சென்று மசாஜ் சேவையினை பெறும் போது “ஹா… ஆமாம்… அங்கு தான்” என நீங்கள் கூறும் போது உங்களுள் அப்போதிருக்கும் அந்த உணர்வு எவ்வாறானது என்பது நினைவிருக்கிறதா? அதே உணர்வினை நீங்கள் குழந்தைகளின் முதுகினை தடவிக் கொடுக்கும் போதும் அல்லது நல்ல உணவு, பாலினை அவர்கள் குடித்து முடிக்கும் போதும் உணர்கிறார்கள். அவ்வாறான தருணங்களில் இந்த முகபாவனையினை செய்கிறார்கள்.

  • “say-whaaaaaa/ என்ன…….?” என்ற முகபாவனை.

fd

குழந்தைகள் “எனக்கு இந்த உலகத்துல டா-டா-டா மற்றும் பா-பாக் தவிர வேறேதும் தெரியாதுனு நினைச்சிங்களா?” என நினைக்கும் போதும் வீட்டில் துர்நாற்றம் வீச செய்வதற்காக அம்மாவிடம் திட்டு வாங்க முடியாத அப்பா குழந்தையை குற்றம் சாட்டும் போது கேள்வி கேட்பது போல் அவர்கள் “say-whaaaaaa” என்ற முகபாவனையினை செய்கின்றனர்.

  • “ஓ-மறுபடியுமா-வேண்டாம்” என்ற முகபாவனை.

j

உங்கள் குழந்தையை பார்ப்பதற்காக உறவினர்களில் யாராவது ஒருவராவது அடிக்கடி வருவார். அப்போது அவர்கள் குழந்தையின் மொழியினை அறிய முயற்சிப்பார்கள். அவ்வாறாக அவர்கள் அறிந்தவற்றை மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் போது குழந்தையானது எரிச்சலான ஓர் மனநிலைக்கு ஆளாகி “அன்றைக்கு நீங்கள் இப்படி பண்ணப்ப சிரிச்சதுக்காக அடிக்கடி இப்படி பண்ண வேண்டாம். என்னால முடியல. இதுக்கு மேல இந்த முகத்த பார்க்க முடியாது” என எண்ணி முகபாவனை பயனளிக்காத போது சத்தமிட்டு அழுது விடுகிறது.

  • புதிதாக பிறந்த வாத்து போன்ற முகபாவனை.

g

சில தாய்மார்கள் தொலைப்பேசியில் மூழ்கி கிடப்பவர்களாகவும் செல்பி எடுப்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவ்வாறாக தாய்மார் தொலைபேசிகளை பார்த்து செய்யும் பாவனையை குழந்தைகள் தாமும் முயற்சித்து “அம்மா எப்போதும் தொலைபேசியை பார்த்து இவ்வாறு செய்கிறார். நானும் இப்போது சரியாக செய்கிறேனா? இல்லை அது வேறேதும் முகபாவனையா?” என எண்ணிக் கொள்வார்கள்.

  • முற்றிலும் விரக்தியானது போன்ற முகபாவனை.

r

நீங்கள் யாராவது நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு அதிகபடியான நேரத்தினை செலவிடும் போது உங்களது குழந்தை சலிப்படைந்து “அம்மா… போதும்! இப்போதாவது வீட்டுக்கு செல்லலாமா? எனக்கு வெறுப்பாக இருக்கிறது. சலித்து விட்டேன். அம்மா… கொஞ்சம் பால் கொடுங்கள்.” என எண்ணிய படி இந்த முகபாவனையினை செய்கிறார்கள்.

  • அழகாக கெஞ்சுவது போன்ற முகபாவனை.

dfsa

நீங்கள் எப்போதாவது குழந்தைகளிடம் “உங்களுக்கு பிடித்தவர் யார்?” என கேட்கும் வீடீயோக்களை யூடியூபில் பார்த்ததுண்டா? அப்போது இது தான் உங்கள் குழந்தைகளின் முகபாவனையாக இருக்கும். இது “ஆனால் அப்பா குதிரை வண்டி வாங்கித் தாறேன் என சொன்னாரே!” என இருவரில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் எண்ணி தவிக்கும் போது அல்லது “அம்மா… நான் இப்ப தான் பால் குடிச்சேன் ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்.” என கேட்க எண்ணும் போதும் இந்த முகபாவனையினை குழந்தைகள் செய்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php