அனைத்தையும் நாடி  இலங்கையில் நீங்கள் சந்திக்கக்கூடிய 10 வெவ்வேறுவிதமான பெண்கள்

இலங்கையில் நீங்கள் சந்திக்கக்கூடிய 10 வெவ்வேறுவிதமான பெண்கள்

2021 Jul 6

இலங்கை நாடானது பல்சுவை கொண்ட மக்களை கொண்டுள்ளது. அது போலவே பல வித குணாதிசயங்கள் மிகுந்த பெண்மணிகளை உருவாக்கிய நாடு என்று கூறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். “நான் எந்த Categoryக்கு உள்ளே வரப்போகிறேனோ” என்று நினைத்து Scroll செய்ய முயல்வது புரிகிறது. அலட்டிக்கொள்ளாமல் நேரடியாக Listஇற்கு சென்றிடுவோம்.

1. கவர்ச்சிக்கன்னி
பொதுவாக இவர்களுக்கு இரண்டாயிரம் – மூவாயிரம் Followers க்கு மேல் இருக்கும். அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர்கள். தனது Snapchat இல் Bed Coffee முதல் Night Dress வரை அனைத்தையும் சுடச்சுட Snap களாக பார்க்க அனைவருக்கும் அனுப்பிவிடுவார். நண்பர் கூட்டத்தில் தான் தனியாக விளங்கவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொள்வார்கள். அதைவிட, Skinny dress என்ற போர்வையில் மிக ஒடுங்கிய உடையில் Gym களில் காட்டும் அலப்பறைகள் மிக அதிகம். ஆனால் அவர்களை அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதால் எதிர்த்து பேசுவதென்னமோ மிக அறிது.

2. அன்புள்ள சகோதரி
தனது முதல் சந்திப்பில் அல்லது கலந்துரையாடலில் தனது குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக தத்து எடுத்துகொள்வார்கள். கவலையான சந்தர்பங்களில் தோழியாக, சோர்வுற்று இருக்கும் நிலைமைகளில் ஊக்கமளிக்கும் பேச்சாளராக, தனது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் நண்பியாகவும் வலம்வருவார்கள். குறிப்பாக உடைந்த இதயங்களை குணப்படுத்தும் சூழ்நிலைகளில் சரி- தவறு கூறும் நீதிபதியாகவும் அனைத்து வேதங்களை அறிந்த வேந்தராகவும் உதவி கரம் நீட்டுவார்கள்.

3. புத்தகப் பூச்சி
எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் செல்லப்பிள்ளையாக கருதப்படுவார்கள். தனது இலட்சியத்தை அடைவதில் மிக மும்முரமாக ஈடுபடுவார்கள். “நீ இதை படிக்கவில்லையா?” என்று Exam அன்று காலை கடுப்பேற்றும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் சமூகத்தோடு இணைந்திருக்கும் சந்தர்பம் மிகவும் குறைவு என்பதால் கூட்டமாக இருக்கும் வேலைகளில் பொட்டி பாம்பாக அடங்கி இருப்பார்.

4. பாரம்பரிய அம்மாக்களின் பிள்ளை
சற்று பாவமான பிள்ளைகள். தன்னிச்சையாக தங்களது பிள்ளைகளை எதற்கும் விடமாட்டார்கள். பிரத்தியேக வகுப்பு முடிந்தவுடன் அம்மாக்கள் பிள்ளைகளை கையோடு வீட்டிற்கு கூட்டிச் சென்றுவிடுவார்கள். பிள்ளைக்கு ஆண் நண்பர்களின் நட்பு இருக்கக்கூடாது என்பதற்காக வீட்டிற்குள்ளும் காவல் அதிகாரி போல் நோட்டம் இட்டவாரே இருப்பர். பொதுவாக இப்பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசி இருக்காது. அம்மாவின் தொலைபேசியிலேயே அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள்.

5. நான் நானாகத்தான் இருக்கிறேன்
எதற்கும் அஞ்சாத, யார் என்ன சொன்னாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன்னிச்சையாக இருக்கும் பெண்மணிகள். இவர்களை சமூகத்தில் கண்டறிவது மிகவும் கடினம். நாட்டு நடப்பு, வதந்திகள், குடும்ப விபரங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் இவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளலாம். தெரிந்தோ தெரியாமலோ பேசும் போது ஒர் இரண்டு வார்த்தைகள் ஆங்கிலத்தில் இழுத்துவிடுவார்கள். மணப்பெண் தேவை என்றால் இந்த Category இல் பார்ப்பது சால சிறந்தது.

6. MakeUp/அலங்கார சிணுங்கிகள்
“ஐயோ இந்த உடுப்பில் நான் குண்டாக விளங்குறேனா?” என பக்கத்தில் இருக்கும் அனைவரையும் கேள்வி கேட்டு இம்சை செய்யும் Department. “போன வருஷம் பார்த்த நம்ம குமுதாவா இது?” என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கிலோ கணக்கில் Makeup போட்டு எலிஸபத் மகாராணிக்கே Tough குடுக்கும் நோக்கில் ஆடை அணிகலன்கள் அணிந்து வருவார்கள். நிலத்துக்கு அடிக்கும் வெள்ளை சுண்ணாம்பு போல அடிப்பாங்க பாருங்க ஒரு Lipstick ! !

Paaah ! ! Chance eh இல்ல, அவ்வளவு கோரம்.

7. கூத்தாடும் குடும்ப குத்து விளக்குகள்
ஊரில் இருக்கும் ரமேஷ் முதல் அஜய் வரை எல்லோரையும் தெரிந்து இருக்கும். ஒரு பார்வையிலேயே அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைப்பவர்கள். இவர்களுக்கு குடி என்று வந்துட்டால் போதும். இரவு பகல் பார்க்காமல் பஜனை பண்ணும் கூட்டம். குடித்து மட்டை ஆகுவது இலகுவில் நடக்காது, அப்படி நடந்துவிட்டால் இவர்களை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்.

8. வாழ்க்கை ஒரு நாடகம்
இவர்கள் போன்றவர்கள் சமூகத்தில் கொஞ்சம் அதிகமாகவே இனங்காணப்படுகிறார்கள். எதற்கும் துக்கம், சோர்வு அனைவரும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இருக்கிறார்கள் என தீவிரமாக நம்புபவர்கள். பொய் சொல்ல கூடாது; அமைதியான Type தான் ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் அடிச்சுக்கவே முடியாது. செல்லப்பிராணிகள் என்றால் அதிக பிரியம். மிக நெருக்கமான நண்பிகளிடம் மாத்திரம் விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள்.

9. சிங்கப்பெண்ணே
“Boys க்கு விருப்பம் என்றால் அவங்க தானே முதல்ல Text பண்ணனும்…”

என்று முற்றிலும் சிரிப்பு வார மாதிரி counter அடிக்கும் எஜமானிகள். மிகவும் தைரியமான, நினைத்ததை செவ்வணே செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களும் தனது இலட்சியங்களை அடைவதில் தீவிரமாக காட்டுவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள், எவ்விதமான சூழ்நிலைகளிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து வென்றவர்கள். ஒருவரின் மனதுக்குள் புகுந்து விட்டாலோ என்ற அறிவதற்கு முன்னே Tata காண்பிக்கும் இயல்பு கொண்டவர்கள்.

10. அதி புத்திசாலி
தவறுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்டி நேர் வழிப்படுத்தும் கரம் படைத்தவர்கள். இது சரி! இது தவறு! என்று எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள். அனைவருக்கும் இப்படியானதொரு காதலியோ, நண்பியோ, சகோதரியோ கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி இருந்து விட்டால் தன் பாதை தவறி செல்வது மிகவும் அறிது.

இவை நான் வகைப்படுத்திய முறை. நிச்சயமாக அனைத்து வகைகளிலும் கண்டறியப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட நபராகக் கூட நீங்கள் இருக்ககூடும். இவை அனைத்தும் ஒர் தனிப்பட்ட கருத்து என்பதால் யாரினது மனதையும் புன் படுத்துவதற்காக அமையப்பெற்றது அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php