அனைத்தையும் நாடி  பெண்கள் தம் காதலர்களிடம் சொல்லும் பொய்கள்

பெண்கள் தம் காதலர்களிடம் சொல்லும் பொய்கள்

2021 Jul 19

அனைவருமே பொய் சொல்கிறோம்.
அவற்றுள் சில பொருத்தமில்லாத பொய்களாகவும் சில சாதாரண ஏதுமே இல்லாத பொய்களாகவும் இருக்கின்றன. எது எவ்வாறாக இருப்பினும் அனைவருமே பொய் பேசுகிறோம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் விடயமே.

ஆனால் பின்வரும் காலங்களில் நீங்கள் சொல்லும் சில பொய்கள் உங்கள் பலமான உறவுகளின் அஸ்திவாரங்களை பலமிழக்க செய்கின்றன. அவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய பொய்களை தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில் இந்த பொய்கள் உறவுகளுக்கு இடையே கோபத்தினை வளர்ப்பதோடு அந்த கோபம், பலி வாங்கல் வரை சென்று உங்களையும் உங்கள் காதலையும் நிரந்தரமாக பிரித்து விடுகிறது.

கீழ்வரும் பொய்களை அனைவருமே ஏமாற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு சொல்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இந்த பொய்களை சிலர் உண்மையாகவே அதே மனநிலையில் சொல்வதாகவும் இருக்கலாம். எது எவ்வாறாக இருப்பினும் இந்த பட்டியலினை நாம் அனைவரும் ஓர் முறை ஆராய்ந்து விட்டு வருவோம் வாருங்கள்.

1.”அவர் எனக்கு அண்ணா மாதிரி”

உங்கள் காதலி நீண்ட காலமாக குறிப்பிட்ட ஒரு பையனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புகிறாரா? ஆரம்பத்திலிருந்தே வெகுநாட்களாக அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்களா? அவ்வாறு உங்கள் காதலி தொலைபேசியில் பேசும் போது லேசாக புன்னகைத்தபடி பேசுகிறாளா? இதை எல்லாம் பார்க்கும் போது அவள் எப்போதும் அந்த பையனுடன் பேசுவதை நிறுத்த மாட்டாள் என்பதனை நீங்கள் உறுதி செய்துக் கொள்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நீங்கள் உங்கள் காதலியிடம் “அது யார்?” என வினவும் போது உங்கள் காதலி உடனே நீங்கள் சந்தேகப்பட்டு அஞ்சக் கூடும் என்பதற்காக “அவர் எனக்கு அண்ணன் போன்றவர்” அல்லது “நாங்கள் நல்ல நண்பர்கள்” என பதிலளிப்பார். அவருடைய பதில் உறுதியாக இருந்தால் பரவாயில்லை. அதற்கு மாறாக உங்களை சமாதானப்படுத்துவதுப் போல் தடுமாற்றத்துடன் காணப்பட்டால் உங்களை ஏமாற்றுவதற்கான பொய்யாக கூட அது இருக்கலாம். அவ்வாறு இருப்பின் இது நீங்கள் ஓர் உறுதியாக மற்றும் தெளிவாக மனம் திறந்து பேச வேண்டிய நேரம் என்பதை மறவாதீர்கள்.

2.”நான் ஒன்றும் கோபமாக இல்லை”

ஏய் ஆண்களே! அவள் கோபமாக இருப்பது ஒரு சாதாரண விடயம் தான். உங்களுக்கு கோபத்தினை ஏற்படுத்தாத சில விடயங்கள் அவளின் கோபத்திற்கு வித்திடுவதாக இருக்கலாம். நானும் ஒரு பெண் தான் ஆனாலும் “ஏன் இந்த பெண்கள் ஒன்றுமில்லாத விடயத்திற்கு எல்லாம் கோபப்படுகிறார்கள்!” என நினைத்தது உண்டு. எது எவ்வாறாக இருப்பினும் அவள் கோபமில்லை என கூறினால் கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அதனால் அவள் கோபமாக இருக்கும் போது எதைப் பற்றியும் பேசாது அவள் கோபம் குறைந்த பின் பேசுவது நல்லது.

3.“ஆம், நான் 5 நிமிடங்களில் தயாராகி விடுவேன்”

இது உண்மையில் எங்கள் தவறல்ல. சில நேரங்களில் எங்களது தலைமுடி மிகவும் மோசமாக இருக்கிறது. சில நேரங்களில் எங்கள் ஒப்பனை தூரிகைகள் உடைந்து போகின்றன. ஏனெனில் நீங்கள் இலங்கையில் பெறும் ஒப்பனை தூரிகைகள் உண்மையில் அவ்வளவு நல்ல தரத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் நாம் குண்டானதாக உணர்கிறோம். நேற்று நாங்கள் வாங்கி வந்த ஆடைகளில் இன்று அவ்வளவு அழகாக தோற்றமளிக்காதுள்ளோம். எனவே இப்போது அதனை அணிய முடியாது. ஒரு வழியாக எப்படியோ தயாராகி நாங்கள் கிட்டத்தட்ட கதவுக்கு அருகில் வரும் போது ​​அம்மா எங்களது ஆடைகளை பார்க்கிறார். நாங்கள் மீண்டும் அவற்றை அவரது விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். எனவே நீங்கள் இந்த பொய்யினை பற்றி கற்பனை செய்துக் கொள்வதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பாக முடியாது.

4.”நான் உன்னை ஒருபோதும் காயப்படுத்த மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.”

தற்காலிகமான இந்த உலகில் நிரந்தரமாக உடனிருக்க போவதாக வாக்களிக்கின்றோம். எவ்வளவு வேடிக்கையான வாக்குறுதி இது! உணர்வுப் பூர்வமான சூழ்நிலைகள் அமையும் போது எங்களுக்கே தெரியாமல் சில பொய்யான வாக்குறுதிகளை அளித்து விடுகின்றோம். அவள் எப்படியும் உங்களுடன் காதலில் இருக்கப் போகும் காலத்தில் குறைந்தது ஒரு தடவையாவது உங்களை காயப்படுத்த தான் போகிறாள். ஆனாலும் என்றுமே உன்னை காயப்படுத்த மாட்டேன் என வாக்களிக்கிறாள். உறவுகளில் எவ்வாறேனும் உங்கள் உணர்வு காயத்திற்கு உள்ளாகி நீங்கள் வருந்துவதற்கான சூழ்நிலை ஒரு முறையேனும் அமைந்து விடுகிறது. அதனால் காதலில் இருக்கும் போது சொல்லப்படும் அனைத்தையும் பெரிது படுத்தாமல் வாழ பழகுங்கள்.

5.“நீங்கள் சொல்லுங்கள்! நான் வருத்தப்பட மாட்டேன்! ”

இவ்வாறு அவள் கூறினால் நீங்கள் சற்று துரமாக ஓட வேண்டிய நேரம் இது. அவள் ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறாள். உங்களால் ஒரு அறிவு பூர்வமான அதே வேளையில் பொறுமையாக ஒரு குழந்தையுடன் உரையாடுவது போன்ற உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றால் மட்டும் அவளுடன் பேசுங்கள். இல்லையெனில் எதுவும் பேசாமல் ஓடி விடுங்கள் ஏனெனில் உங்களது வார்த்தைகள் உங்களுக்கிடையே உள்ள அழகான பந்தத்தை சிதைத்து விடக் கூடும்.

6. “ஆம், நான் அவனை மறந்து விட்டேன்”

ஒரு பெண் எப்போதும் தான் விரும்பும் ஒரு குறிப்பிட்ட மனிதனைப் பற்றி நினைக்கும் போது அவள் மனதில் எவ்வாறான எண்ணம் ஓடும் என்பதை மேலே உள்ள படம் உங்களுக்கு காட்டுகிறது. அவள் அவனைக் கடந்துவிட்டதாக சொல்வதனால் ​​அவள் அவனை நேசிப்பதை நிறுத்திவிட்டாள் என்று அர்த்தமாகாது. அவள் அவனை நேசிக்கிறாள் தான் ஆனாலும் அவனிலும் அதிகமாக உங்களை நேசிக்கிறாள். அவள் அவனைப் பற்றி நினைக்கும் போது ஒரு முறை பெருமூச்சு விடுகிறாள். இதற்கு அர்த்தம் அவனைப் பற்றி அவள் நினைப்பதை கூறி உங்களை துன்புறுத்துவதை அவள் விரும்பவில்லை என்பது தான். எது எவ்வாறாகயிருப்பினும் அவள் இப்போது உங்களுடன் தானே இருக்கிறாள். அது அல்லவா முக்கியம். இந்த ஒரு விடயத்திற்காக நீங்கள் அவளை தள்ளி வைப்பது சரியான செயலல்ல. அவளது உணர்விற்கு மதிப்பளிக்க பழகுங்கள்.

இவை தான் பெண்கள் தன் காதலனிடம் அதிகமாக சொல்லும் பொய்கள்.

உங்களுக்கு இடையில் மலரும் புரிந்துணர்வில்லாமையினை இலகுவாக தீர்ப்பதற்கான ஒரே வழி உங்கள் துணைவர் அவருடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்களுடன் சேர்ந்து உங்களுடன் முன்னே நகர்ந்து கொண்டு வருகிறாரா என்பதனை உறுதி செய்துக் கொள்வது தான். ஒரு விடயத்தை மறவாதீர்கள், எந்தவொரு புரிந்துணர்வில்லாமையினையும் தகர்த்தெறிவதற்கு ஒரு சிறந்த கலந்துரையாடல் போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php