அனைத்தையும் நாடி  ஐயையோ….. எனக்கு வாய் இல்லாம போச்சே.

ஐயையோ….. எனக்கு வாய் இல்லாம போச்சே.

2021 Jul 27

தலையங்கத்தை பார்த்தவுடன் என்னடா இது என பார்க்க வந்திருக்கும் மக்களே, இந்த ஆக்கத்தில் வரும் பொருட்கள் உங்கள் daily வாழ்க்கையில் நீங்கள் உபயோகிப்பவையே. இக்கட்டுரையின் முடிவில் நீங்களே “அட ஆமா, இதுக்கு ஒருநாள் ஆச்சு லீவ் குடுக்கலாமே” என்று எண்ணினாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. சரி அப்படி என்ன பொருட்கள் என்பதை பார்த்து விட்டு வருவோமே..

  1. வானொலி பெட்டி

இதிலென்னடா இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். சில வீடுகளில் காலையில் வேலை செய்யும்போது மட்டும் அந்த வானொலி பெட்டி ஒலிக்கும். ஒரு சில வீடுகளில் மாலை அல்லது இரவு நேரம் வரை. ஆனால் ஒரு சில வீடுகளில் மின்சாரம் உள்ளதா இல்லையா என்பதையே வானொலியை வைத்து தான் கண்டுபிடிப்பார்கள். அந்த அளவிற்கு இருக்கும் அதன் பாவனை. அப்பொழுது அந்த வானொலியை நினைக்கும் போது தோணும் அதுக்கு வாய் இல்லாமல் போச்சே என்று.

2. ஹெட் செட்

ஒரு சிலரின் ஹெட் செட்டை தொடவே அருவருப்பாக இருக்கும். மிகவும் அசுத்தமாக, பிய்ந்து, வளைந்து, அதை அவர்களால் மட்டுமே பாவிக்க கூடிய வகையில் இருக்கும். மேலும் அது 24/7 அவர்களின் காதிலேயே கிடக்கும். இதனாலேயே இதை பல அம்மாக்கள் செவிட்டு மெஷின் என்பார்கள். உண்மையில் பிழை என்னவோ அதை பாவிப்பவர் மேல் தான். ஆனால் அடிவாங்கியதோ என்னமோ அந்த ஹெட் செட் தான். அப்பொழுது தான் தோணும். வாய் இருந்தால் ஹெட் செட் கூட அழுமென்று.

3. தொலைபேசிஇது இன்று தொலைபேசியா அல்லது தொல்லைபேசியா என்ற சந்தேகம் இன்று பல வீடுகளில் உள்ளவர்களுக்கு உண்டு. அந்தளவிற்கு இதன் பாவனை அதிகரித்துள்ளது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைவருமே சலிப்படைந்து கிடைக்கும் போது தொலைபேசியையே நாடிச் செல்கின்றனர். அப்படி போகும்போது அதில் போஸ்ட் பார்க்க போகின்றேன் என்று வீட்டில் இருக்கும் டேட்டா பாக்கேஜை தங்களை அறியாமலேயே முடித்துவிட்டு இருக்கும் போது தொலைபேசி நினைக்கும் “அப்பாடா, இனி இவன் என்னை வதைக்க மாட்டான் என்று. ” ஆனால் இல்லை சீக்கிரமே மொபைலில் ரீ-சார்ஜ் செய்து மீண்டும் மொபைலை நோண்ட தொடங்குவார்கள். அப்போது எங்கேயோ இருந்து அம்மா சொல்வது காதில் ஒலிக்கும், “அந்த போனுக்கு வாய் இருந்தால் அழும்னு.”

4. பேனை மூடிஎழுதினேன். எழுதுவேன். எழுதிக்கொண்டே இருப்பவர்களின் பேனையையும் பேனை மூடியையும் கொஞ்சம் எடுத்துப்பார்த்தால் தெரியும். நான் சொல்லும் முன்னே நீங்களே சொல்லிவிடுவீர்கள், வாய் இருந்தால் மூடி அழுமென்று. அந்தளவிற்கு அதை கடித்து, சப்பி, அதிலிருந்து வரும் பிளாஸ்டிக்கை பிய்ந்து அதிலும் ஓட்டை போட்டு, அப்பப்பா இனி ஒருவர் எக்காலத்திலும் அந்த பேனையால் எழுத முடியாதபடி செய்து விடுவார்கள். ஒருசில மூடிகளை என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. அந்தளவுக்கு அதன் நிலைமை மிக கவலைக்கிடமாக இருக்கும்.

5. Snapchat

இதிலென்னடா இருக்கு? எல்லாரும் பாவிக்கும் ஒரு செயலியில் என்ன இருக்கப்போகிறது என்று கேட்கலாம். உண்மையிலேயே அந்த செயலி ரொம்ப பாவம். அதில் தன் முகத்தை காமெரா மூலமாக அழகுபடுத்துகிறேன் என்று சொல்லி 100 filterகலை பாவித்து snap chat ஐயே அழவைத்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் முகத்தையே தங்களால் பார்க்க முடியாதபடி செய்துவிடுகிறது. அப்படி இருந்தும் அதன் பாவனையை நிறுத்தாமல் அதை அழ வைப்பதே நம்மவர்களின் வேலையாக போய்விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here