அனைத்தையும் நாடி  Besties அலப்பறைகள்.

Besties அலப்பறைகள்.

2021 Jul 30

நாம் எமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்குப் பயந்து வாழும் நிலைமைகளில் இருந்துள்ளோம். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களுக்கும், மாணவனாக இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், தொழில் நிலையங்களில் முதலாளி மார்களுக்கும் அடிபணிந்து நடந்துள்ளோம். அவ்வாறானதொரு வரிசையிலேயே எமது இல்லற வாழ்க்கையையும் பயந்து வாழும் நிலைமைக்கு இந்த Boy Bestie / Girl Bestie நபர்கள் மாற்றி அமைத்துள்ளனர் என்பதை வேதனையுடனும் மனவறுத்தத்துடனும் தெறியத்தருகிறேன்.

நான் உண்மையாகவே 90s களில் பிறந்த ஒரு Typical 90s kid. நானும் உங்களைப்போலவே இந்த Bestie என்றால் யார் என்று அறிய முடியாமல் திரிந்த நபர்களில் ஒருவர். நான் படித்த காலம் முதல் எனக்கு தெறிந்த ஒரே விடயம் Lover, Friend என்ற இரண்டும் மட்டுமே. ஆனால் இப்போது Lover, Bestie என்று ஆளுக்கொன்று வைத்திருக்கின்றனர். Boy Bestie / Girl Bestie கலாச்சாரம், யாரால்? எப்போது? எதற்காக ஆரம்பிக்கப்பட்டதென்பதற்கான ஆதாரங்கள் இணையத்தளத்தால் கூடக் கண்டுபிடிக்க முடியாததுள்ளது. எவராக இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு உண்மையாகவே இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தான் வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

Bestie என்பது நண்பருக்கு மேலாகவும் வாழ்க்கைத் துணைக்குக் கீழாகவும் அரங்கேறும் உறவு முறை என்றே அதிகமானோரால் வரைவிளக்கணப்படுத்தப்பட்டுள்ளது. ‘இதனைக் கொச்சப்படுத்துவற்கு என்ன இருக்கு? Bestie என்றால் நண்பர் தானே’ என நீங்கள் மனதில் கேள்வி எழுப்புவது புரிகின்றது. இது சற்று குளப்புகரமான Concept ஆக இருந்தாலும் கூட, முடிந்த வரை அவர்களின் Concept என்னவென்பதை புள்ளிக்கோவைகளில்விளக்குகிறேன்.

* பொதுவாக இவர்கள் ஒரே பாலினத்தில் Bestie களை தெரிவு செய்யமாட்டார்கள். ஒரேபாலினத்திலிருந்தால் அவை வெறும் நண்பர்கள் எனவும் எதிர் பாலினத்திலிருந்தால் மட்டுமே அது Bestie என்றும் கண்மூடித்தனமாக நம்புவார்கள்.

* Lover இருந்தாலும் கூட Bestie உடனே அதிகமாக நேரம் செலவழிப்பதற்கு விரும்புவதாகவும், வாழ்க்கைத்துணை இல்லாவிடினும் பரவாயில்லை Bestie இல்லாமல் வாழவே முடியாது என்று வெற்று வீராப்புடன் கதைத்துத் திரிவார்கள்.

* கணவன்/மனைவியோடு பகிரங்கமாகச் சில விடையங்களைக் கதைப்பதற்குக் கூச்சமாக இருப்பதால் தத்தமது Bestie கள் மூலம் கதைத்துப் பரிமாறும் ஊடகமாகப் பாவித்துக்கொள்கிறார்கள்.

* உன்னுடன் விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை Bestie ஐ விட்டு விலகமாட்டேன் எனச் சற்று கூச்சம் கூடமில்லாமல் சொல்வதுண்டு.

* திருமணத்தின் பின்பு வாழ் நாள் முழுவதும் உன்னுடன் மாத்திரமே வாழப்போகிறேன் என்பதால் வாழ்வில் சற்று Variety தேவை என்பதற்காக நான் Bestie களுடன் பழகுகிறேன் எனக்கூறும் சந்தர்ப்பங்களும் உண்டு.

* தாம்பத்திய உறவுகள் பற்றிக்கதைத்து சந்தேகம் தீர்த்துக்கொள்ளும் ஊடகமாகவும், சில சந்தர்பங்களில் ஒத்திகை பார்க்கும் நபர்களாகவும் தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

இதற்குப் பின்பும் நீங்கள் இவர்களை ‘நண்பர்களே’ எனக் கருதினால் ‘ஓ மானிட ஜாதியே!! மனிதர்களே நீங்கள்!!’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை உங்களுக்குச் சமர்ப்பணம் செய்வதை தவிர எனக்கு வேறுவழிகள் கிடையாது.

நாம் எல்லோரும் எதிர்ப் பால் நண்பர்களைக் கொண்டு இருப்பது அவசியமாகும் எனினும் அவர்கள் நல்ல நண்பர்களாக மாத்திரமே இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நல்ல நண்பர் யார் என்பது தொடர்பில் விளக்கம் கூறும் கட்டுரை இதுவல்ல ஆனால் Bestie என்ற போர்வைக்குள் திரிவுபட்ட Living together நடாத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே என் வாதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here