அனைத்தையும் நாடி  இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.

இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.

2021 Jul 31

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்று பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது. உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் சில முக்கியமான தருணங்களை அவதானிப்போம். அவை எவ்வாறு இன்று செய்திகளாக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவதானிப்போம்.

1737- ஒல்லாந்தர்கள் முதன்முதலில் பத்திரிகைகளை அச்சிடும் முதல் அச்சகத்தை இலங்கையில் நிறுவினர்.

1802- இலங்கையின் பத்திரிகை துறையின் ஆரம்பம் அரசு வர்த்தமானியை அச்சிடுவதுடன் ஆரம்பமாகியது. பிரித்தானிய அரசின் கீழ் பத்திரிகைகள், விடுமுறை அறிவிப்புக்கள், உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெறல், மற்றும் நிர்வாக முடிவுகள் போன்றவற்றை அறிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது ஆயினும் இவை அதிகாரபூர்வமான பத்திரிகைகள் அல்ல.

1829ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்- பிரித்தானிய அரசாங்கம், கோல்புரூக் மற்றும் கேமரூன் ஆணைக்குழுவை பத்திரிகைகளை ஆரம்பிப்பதற்காக நியமித்தது.

1832ம் ஆண்டு, ஜனவரி மாதம், முதலாம் திகதி- த கொழும்பு ஜேனல் எனும் பத்திரிகை காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவில் கீழ் வெளியிடப்பட்டது.

1833ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ஆம் திகதி- த கொழும்பு ஜேனல், அக்காலகட்டத்தில் பிரித்தானிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததால் அவ்வெளியீடு இடைநிறுத்தப்பட்டது. பத்திரிகை துறையை தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அது நிறுத்தப்பட்டது.

1834ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 4ஆம் திகதி- இலவச பத்திரிகைக்கான தெளிவான தேவையின் காரணமாக, ஜே. அக்லேன்ட் மற்றும் இ.ஜே. டார்லி ஆகியோர் இணைந்து த சண்டே ஒப்சவர் மற்றும் த கொமர்ஷியல் அட்வடைஸரை ஆரம்பித்தனர். த சண்டே ஒப்சவர் இன்றுவரை தொடர்ந்து வெளிவருகின்றது. ஆசிரியரான கிறிஸ்டொபர் இலியட் தலைமையின் கீழ், த ஒப்சவர் பத்திரிகை, அரசாங்கத்தை மிகவும் விமர்சிக்கும் ஒரு பத்திரிகையாக காணப்பட்டதுடன், காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையர்களின்  கருத்துக்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியது.

1841-  உதய தாரகை எனும் பத்திரிகை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் வாரத்திற்கு இருமுறை வெளிவந்தது.

1860- முதல் சிங்கள வாராந்த பத்திரிகையான லங்காலோக, காலியில் வெளியிடப்பட்டது. இது ”மொழி”பத்திரிகையின் பிறப்புக்கு வழிவகுத்தது.

1948- இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இப்பத்திரிகை துறையானது ஏ.என்.சி.எல் மற்றும் டைம்ஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஏ.என்.சி.எல் பிற்காலத்தில் லேக்ஹவுஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1979- விஜயா செய்தித்தாள் (Wijeya Newspapers Limited-WNL) நிறுவனம் நிறுவப்பட்டது.

1981- உபாலி செய்தித்தாள் நிறுவனம் (Upali Newspapers Limited-UNL) ஆரம்பிக்கப்பட்டது.
ஏ.என்.சி.எல், விஜயா செய்தித்தாள் நிறுவனம்(WNL) ,உபாலி செய்தித்தாள் நிறுவனம் (UNL) அக்காலகட்டத்தில், இலங்கையில் மிகவும் பலம்வாய்ந்த செய்தித்தாள்களை வெளியிடும் குழுக்களாக திகழ்ந்ததன.

1994ம் ஆண்டு, நவம்பர் 12 ஆம் திகதி – தேர்தலின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது, மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். பிற்காலங்களில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சிவில் யுத்தம் இடம்பெற்றபோது, முந்தைய அரசாங்கத்தால் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலாக்கப்பட்டது.

1998ம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் திகதி- மீண்டும் தடைகள் அமுலாக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள், மோதல் இடம்பெறும் வலயத்திற்குள் உள்நுழைவது தடுக்கப்பட்டது.

2002- தகவல்கள் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டு, புத்தகங்கள், காணொளிகள், சஞ்சிகைகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2009 ஆம் ஆண்டு போர் முடிவடையும் வரை தொடர்ந்தது.

2011- லங்காதீப, ஞாயிற்றுக்கிழமை லங்காதீப சண்டே டைம்ஸ் போன்ற பல இலத்திரனியல் மற்றும் நிகழ்நிலை செய்தித்தாளாக ( online newspapers) அறிமுகப்படுத்தப்பட்டது.

2018 ஆம் ஆண்டு- சுதந்திர வெளியீட்டாளர்களால் காலை செய்தித்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுதந்திர வெளியீட்டாளர்களால் காலை ஒலிவடிவ செய்தித்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இலங்கையில் சஞ்சிகைகளில் பயணம் பத்திரிகை சுதந்திரம், பல தசாப்தங்கள் முதல் மாறிவரும் பத்திரிகை சுதந்திரத்தையும் கொடூரமான காலங்களில் இரக்கமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட தடைகள் வரை மிகத் தெளிவாக விளக்குகிறது. தகவல்களை பரப்புவதற்கான ஒருவழியாகவே ஆரம்பிக்கப்பட்டது. பிற்காலங்களில், உடனடியாக உண்மையை எடுத்துச் செல்வதற்கான ஊடகமாக தொழிற்பட்டது.

21 ஆம் நூற்றாண்டு உலகளவில் உள்ளூர் முறையிலிருந்து இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றமுற்றது. வளர்ந்து வரும் சமூக வலைத்தளமான ட்விட்டர், இலத்திரனியல் செய்தித்தாள்கள், ஒலி வடிவிலான செய்தித்தாள்கள், நிகழ்நிலை செய்தித்தளங்கள்(Online news sites) போன்ற மாற்றங்களின் காரணமாக இவை என் வீட்டு வாசல் வரை வளர்ச்சியடைந்துள்ளது. ‘பெரிய இலக்கு’ மற்றும் ‘அடுத்த தலையங்கம்’ போன்றவை பத்திரிகை துறையில் வாசகர்களையும் பார்வையாளர்களையும் பெருமளவில் ஈர்த்துள்ளது. இந்நிகழ்வு இன்று பத்திரிக்கைகள் இடையே எழுச்சியடைந்து, புத்துயிர் பெற்று, புது வடிவில் மாற்றமுற்றுள்ளது.

இலங்கையின் எதிர்கால பத்திரிகைத்துறையில், பார்வையாளர்களும் வாசகர்களுமே அதிகாரம் உடையவர்களாக இருப்பர். இருந்தபோதிலும் செய்தித்தாள்கள் தீவின் அனைத்து பக்கங்களிலும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றது. ஆயினும் இன்னும் எவ்வளவு காலம் அச்சிடப்பட்ட பத்திரிகைகள் நீடிக்கும் என்பதை கணிக்க கடினமாய் உள்ளது. இலங்கை, டிஜிட்டல் செய்தி கலாசாரத்தை தழுவிக் கொள்வதில் ஒரு பகுதியாக திகழ்கிறது அத்தோடு கால மாற்றத்திற்கேற்ப மேலும் முன்னேற்றமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php