அனைத்தையும் நாடி  மீள் அறிமுகம் செய்யப்பட்ட றோயல் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையதளம்

மீள் அறிமுகம் செய்யப்பட்ட றோயல் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையதளம்

2021 Aug 16

2010 இல் வெளியிடப்பட்ட றோயல் கல்லூரியின் இணையத்தளமானது முழுமையாக பாடசாலை மாணவர்களைக் கொண்டு இன்றை காலத்திற்கேற்ப மீள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்  மாணவர்கள் கல்லூரியின் மீது கொண்டுள்ள பற்றுதலும் அன்பும் தான் இத்தகைய ஒரு முயற்சியில் வெற்றி பெறுவதற்கான காரணம் என்று கல்லூரியின் அதிபர் M.V.S.Gunathilake தெரிவித்தார்.

நாட்டின் நிலவக்கூடிய COVID-19 அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு
சமூகமானது “work from home” கலாச்சாரத்தை நோக்கி நகர்வதை அவதானித்த கல்லூரியின் 2021 இற்கான மாணவ தலைவ ஒன்றியத்தின் தொழில்நுட்ப குழு, இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கல்லூரியின் செயல்பாடுகளை இலகுவாக்க இணையதளத்தை மீள் வடிவமைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தனர்.

அதேவேளையில்அதற்கான முதற்கட்ட வடிவமைப்பினை 2021 பிப்ரவரி மாதத்தில்  நிறைவு செய்த  குழு, ஏப்ரல் மாத முடிவில் இணையதளத்தை முழுமையாக வடிவமைத்தனர். 9000 மாணவர்கள், முப்பத்தி ஐந்து விளையாட்டுக்கள், 50 சங்கங்கள் மற்றும் கழகங்கள். இத்தனை உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கல்லூரிக்கு இணையதளத்தை அமைப்பது என்பது ஒரு இலகுவான காரியமல்ல. எனினும் மாணவர்கள் முழுமூச்சாக நின்று இந்த செயற்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளமை என்பது குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.

இச் செயற்திட்டத்தின் சிறப்பம்சமாக கருதப்படுவது யாதெனில் இத்தகைய   ஒரு இணையதளத்தை முழுமையாக பாடசாலை மாணவர்களின் முயற்சியை கொண்டு வடிவகை்கப்பட்டதாகும்.   அதேவேளையில இவ் இணையதள செயற்திட்டமானது எந்தவித செலவினங்களும் இன்றி உருவாக்கப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேவேளையில் 1931 ஆம் ஆண்டு பாடசாலையில் இருந்த 20 மாணவர்களை கொண்டு “The History of Royal College” நூல் எழுதப்பட்டது. அதனை நினைவூட்டும் வண்ணமாக இந்த இணையதளம்  மாணவர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு பழைய பாரம்பரியத்தை மீண்டும் ஞாபகம் ஊட்டும் வகையில் இவ் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில் இன்றைய கால மாணவர்களை மிகவும் கவரும் வண்ணத்தில் இணையதளமானது அமையப்பெற்றுள்ளது. மேலும் அனைவரும் இலகுவாக உபயோகிக்கும் வகையில் இதன் தெரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவரிடத்திலும் இந்த இணையத்தளமானது ஒழுங்காக அறிமுகம் செய்ய முடியாத நிலை ஒன்று உள்ளது. எனினும், இணையதளத்தில் புள்ளி விவர அடிப்படையில் கணிசமான இணையதள நெரிசல் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற விடயங்கள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இத்தகையதோர் இணையதளத்திற்கு கிடைத்திருக்கும் சாதகமான அடையாளமாகும். அதேவேளையில் இந்த செயற்திட்டம் ஆனது பாடசாலைக்கு உள்ளேயும், அதேவேளையில் அகில இலங்கை ரீதியில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே கல்லூரியின் ஒரே எதிர்பார்ப்பாக அமைகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php