2021 Aug 18
இன்றைய காலகட்டத்தில் இயந்திரமயமாக்கல் இன் ஊடாக நவீன உலகத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தமக்குத் தேவையான ஒரு பீங்கான் ஆகாரத்தை கூட பெற்றுக்கொள்வதில் சோம்பேறியாக காணப்படுகின்றனர் இது அவர்களின் இயல்பா அல்லது மந்தமான நிலையின் அறிகுறியா என்று தெரியவில்லை ஆம் இத்தகைய உணவுகளை பெற்றுக்கொள்வது நேரமின்மையே இதற்கான முக்கிய காரணமாக அமைகின்றது ஆகையால் இவ்வாறான உணவு குறைபாட்டினை தவிர்த்துக்கொள்ள பல சத்தான சிற்றுண்டிகளை இன்றைய கால இளைஞர்கள் நேரத்துக்கு நேரம் எடுத்துக்கொள்கின்றனர்
protein bars
பொதுவாக நாளொன்றில் எமக்கு 3 வேளைகள் கட்டாயம் உணவு கொள்ள வேண்டும் எனினும் அதைத் தாண்டி நமக்கு பசிக்கின்ற சந்தர்ப்ப நேரம்தான் இத்தகைய பசி ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் அருகிலுள் cargills keels போன்ற supermarket களில் இந்த ப்ரோட்டின் பார்ஸ் இணை பெற்றுக்கொள்ளமுடியும் நிச்சயமாக இத்தகைய சிற்றுண்டிகள் உடலுக்கு போசாக்கானதாக அமையும் அதே நேரத்தில் சிறு பசிக்கு உகந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது
Hummus and pita chips
10லிருந்து 12 கிராம் வரையிலான புரதச் சத்தினை இந்த சிற்றுண்டியின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் இந்த சிற்றுண்டி ஆனது எந்த அளவிற்கு புரதச்சத்து மிக்கதோ அதே அளவிற்கு உங்களது சுவை நரம்புகளை வசியப்படுத்தும் தன்மையும் கொண்டது இது சிற்றுண்டியைJah’s Hummus இன்ஸ்டகிரம் பக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் அதேவேளையில்
Keels, SPAR மற்றும் Arpico Thalawathugoda விழும் பெற்றுக்கொள்ளலாம்
வாழைப்பழம்
நிச்சயமாக இலங்கையர்கள் என்ற ரீதியில் நமது வாழ்வியலில் பின்னிப்பிணைந்த ஒரு பழமாக வலம் வருவது வாழைப்பழம் ஆகும் ஆம் எமது புதுவருட உணவு மேசை தொடக்கம் விருந்தினர்களின் வீடு வரை இந்த வாழைப்பழம் இடம்பெறுகின்றது
கிட்டத்தட்ட வாழைப்பழத்தின் ஊடாக பொட்டாசியம் சேமிக்கப்படுகிறது மேலும் இந்த பழமானது நார்ச்சத்து உடையது குறிப்பாக ஒரு சுற்றுலாவின் போது நாம் அதிக களைப்படைந்து இருந்தால் 2 வாழைப்பழங்களை உட்கொள்வதன் ஊடாக இழந்த சக்தியை மீண்டும் பெறமுடியும்
Air-popped popcorn
popcorn என்பது ஒரு திரைப்படத்தை கண்டுகளிக்கும் போது அதிக அளவில் உட்கொள்ளும் சிற்றுண்டியாக காணப்பட்டாலும் ஒரு வாகனத்தை ஓட்டும்போது கூட எமது நாவிற்கு popcorn சுவையினை ருசிக்க நாவின் நரம்புகள் ஆசைப்படலாம் அத்தகைய நேரங்களில் அருகிலுள்ள SPAR மற்றும் Keels போன்ற இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் மேலும் popcorn அதிக நார்ச்சத்து உடையது
Dry-roasted nuts
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மனம் கவர்ந்த சிற்றுண்டியாக கருதப்படுவது இந்த நட்ஸ் வகைதான் குறிப்பாக நட்ஸ் பக்கேஜ் ஒன்றில் பிஸ்தா முந்திரி காய்ந்த பேரிச்சபழம் என பல்வேறு நார்ச்சத்து இரும்புச்சத்து உடைய போசனை பொருட்கள் உள்ளடக்கப் பட்டுள்ளது இத்தகையDry-roasted nuts சிற்றுண்டி யை keels ல் பெற்றுக் கொள்ளலாம்
Hard-boiled eggs
பொதுவாக முட்டை என்று கூறினாலே சத்து என்ற பொருள்படும் அதேபோன்றுதான் அவித்த முட்டையினை உணவாக உட்கொள்வதன் மூலம் 7 கிராம் புரதச் சத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்
String cheese
String cheese சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்ற எண்ணம் நம் அனைவர் மத்தியிலும் உள்ளது ஆயினும் அனைத்து வயதினரும் இந்த cheeseயை உட்கொள்ளலாம் பொதுவாக spar போன்ற super market ல் பெற்றுக்கொள்ளலாம்
இன்றைய காலகட்டத்தில junk foodsல் மூழ்கிக் கிடக்கும் நமது இளைஞர் சமுதாயம் அதிலிருந்து விடுபட்டு இத்தகைய போசனை மிக்க உணவின் பால் திரும்ப வேண்டும்.