மனிதர்களை நாடி அல்லி ராஜா சுபாஸ்கரண் – ஓர் பார்வை

அல்லி ராஜா சுபாஸ்கரண் – ஓர் பார்வை

2021 Aug 16

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறுவயதிலேயே தகவல் தொடர்பாடல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் கண்டு புலம் பெயர் தமிழர்களின் ஜாம்பவான் என்ற போற்றலுக்கும் சொந்தக்காரரான அல்லி ராஜா சுபாஸ்கரண் தொடர்பிலான ஓர் பார்வை இதோ,

1972ம் ஆண்டு இலங்கையில் பிறந்த சுபாஸ்கரன் அவர்கள் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை, அவரை பிரான்ஸ் நாட்டிற்கு குடும்பம் சகிதம் படகும் மூலம் தப்பிப்பதற்கு காரணகர்த்தாவாக மாற்றி இருந்தது. தஞ்சம் கோரி அகதியாக இருந்த ஆரம்ப காலப்பகுதிகளில் உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் நபராகப் பணிபுரிந்தார். இந் நிலப்பகுதிகளிலேயே ஐரோப்பாவில் கையடக்கத் தொலைபேசிகளின் வருகை வலுப்பெறத்தொடங்கியது. அலைப்பேசிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதென்பதை முன்கூட்டியே அறிந்த இவர் அவ்வர்த்தகத்தில் மும்முறமாக ஈடுபடத் தொடங்கினார். சிம் அட்டைகள் மற்றும் மீள் நிரப்பும் அட்டைகள் விற்கும் முகவராக இத்துறையில் தடம் பதித்து அதன் நுட்ப வழிமுறைகளை இனங்கண்ட சுபாஸ்கரன் அவர்கள், இன உறவுகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல் தொடர்பாடல் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தனது வர்த்தகத்தை மேலும் விஸ்தரித்தார். வெறுமனே தகவல் தொடர்பாடல் துறையில் மாத்திரம் நின்று விடாது சுகாதாரம், மருத்துவம், பொழுதுபோக்கு, சுற்றுலாத்துறை மற்றும் ஊடகம் என்று பல துரைகளில் உயர் தரமான சேவைகளை வழங்கி உலகளாவிய ரீதியில் 23 நாடுகளில் 15 மில்லியனுக்கும் அதிகமான கொள்வனவாளர்களை அவரது சேவை பார் ஈர்க்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயது முதலே திரைத்துறையில் ஈர்க்கம் கொண்ட அல்லி ராஜா சுபாஸ்கரன் அவர்கள் ஈழத்துப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தென் ஆசியா பக்கம் எத்துறையிலாவது சாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு Lyca Production என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து, நடிகர்விஜய் நடித்த கத்தி படத்தின் தயாரிப்பாளராகத் தென் இந்தியாவில் அறிமுகமாகினார். இத் திரைப்படத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட அனைத்து சர்ச்சைகளையும் எதிர்கொண்டு அத் திரைப்படத்தின் வருவாய் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ‘இது என்னுடைய இரண்டு நாள் வருமானம், நான் என்னுடைய தனிப்பட்ட ஆசைக்காகத்தான் படம் தயாரித்தேன்’ எனக்கூறி பலரின் வாயை மௌன மாக்க வைத்தார் என்பது நெகிழ்வூட்டக்கூடிய விடயமாகும்.

தனது 46வது வயதில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டும் Lyca நிறுவனத்தின் அதிபதியாகிய சுபாஸ்கரன் அவர்கள் இருந்த அதே வேளை, இந்தியாவின் விலை உயர்ந்த படம் தயாரித்த பெருமையையும் அவரே ஈட்டிச்சென்றார். இந்தியா ரூபா படி சுமார் 573 கோடி (இலங்கை ரூபா படி ஏறத்தாள 1500 கோடி) செலவில் சங்கர் அவர்களின் திரைக்கதையில் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசையில் ரஜனிகாந்த மற்றும் பொலிவூட் நட்சத்திரமான அக்‌ஷய் குமார் அவர்களின் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் வெளிவந்தது. மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டாலும் அதன் முதல் நாளிலேயே 117.34 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்து பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

தான் முளைக்கத் தானே விதையாகி, இன்று ஆலமரமாய் உயர்ந்த நிற்கும் சுபாஸ்கரன் அவர்கள் எவ்வாறு பேரும் புகழும் பெற்றாரோ அவ்வாறே அவருக்கு எதிரான விமர்சனங்களும் அவ்வாறே எழுந்த வண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டு இருக்கும் தீவிரவாத குழு ஒன்றின் பணமே இவரிடம் காணப்படும் செல்வம் எனவும், Tamil Rockers இணையத்தளத்திற்குப் பின் நின்று வழி நடத்துபவர் இவரே என்றும் பரவலாக இவர் மேல் குற்றம் சாட்டப்படுகின்றது. எனினும் நான் உருவாக்கிய செல்வம் அனைத்தும் என் முயற்ச்சியினாலையே என்று சொல்லாமல் சாதித்துக் காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சர்வதேச தொழில்முனைவோருக்கான விருது’ மற்றும் ‘சமூக தொழில்முனைவோருக்கான விருது’ போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரனாகத் திகழும் அதே வேளை, அவரின் வெற்றிக்குத் துணையாக இருந்த தாயின் பாசம் ஏனைய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரின் தாயின் பெயராகிய ஞானம் என்ற பெயரில் Gnanam Trust என்பதை ஆரம்பித்து உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் எனச் சகலவசதிகளையும் 7 கண்டங்களிலும் தனது சேவையினை ஆற்றி நேசக்கரம் நீட்டி வருகிறார் என்பது எம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php