2021 Sep 23
இன்றைய நவீன காலகட்டத்தில் Labour market விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன, அதே நேரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வருமான வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை வாழ்க்கை முறைகளை மாற்றுகின்றன. பாரம்பரியமாக, பெரும்பாலான ஊழியர்கள் காலை முதல் மாலை வரை வழக்கமான வேலை நேரத்தை வேலை செய்து, தங்கள் குடும்பத்துடன் இருக்க வீட்டிற்கு சென்றனர். ஆனால், வாழ்க்கை முறையினுடைய மாற்றங்களால் மக்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதில்லை. சேவைகளை வழங்க வணிகங்கள் தாமதமாக திறந்திருப்பதால், இத்தகைய நடத்தை தொழிலாளர் சந்தைகளில் ஊடுருவி வருகிறது. ஆண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதால், நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப பெண்களை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். எனினும், இது எளிதாக இல்லை. பல்வேறு முயற்சிகள் இருந்தபோதிலும், பெண் தொழிலாளர் பங்கேற்பு கடந்த பல தசாப்தங்களாக மாறாமல் மற்றும் 40% க்கும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும், பெண்களும் இன்றைய கால கட்டத்தில் வேலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாகவே பெண்கள் பகல் நேர வேலைகளுக்கே அதிகமாகச் செல்கின்றனர். அதனையே அதிகமாக தேர்ந்து எடுக்கின்றனர். ஆனால் இரவு நேர வேலைக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.
எனவே சில பெண்கள் கண்டிப்பாக இரவு வேலைக்கு செல்ல நேரிடுகின்றனர். அவ்வாறு தனியாக வேலைத்தளங்களுக்கு செல்லும் போதோ அல்லது வேலைத்தளங்களில் இருக்கும் போதோ அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை கீழே பார்ப்போம்.
- தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்ளல்.
தனியாக வேலையில் இருக்கின்ற, தனியாக வேலைக்கு செல்கின்ற பெண்கள் போன்ற அனைத்து வயதுடைய பெண்களும் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் மிக முக்கியமானது தற்காப்புக் கலை. இன்றைய சூழலில் பெண்கள் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்கு தற்காப்புக் கலை பயில்வது அத்தியாவசியமாகும். Labour market இல் தற்போது தொழில் துறையில் பெண்களின் வேலைவாய்ப்பு வீதம் தற்போது அதிகரித்து வருகின்றது. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இன்றளவும் குறைந்தளவிலேயே இருக்கின்றது. இதனால் பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்கோ, தனது வெவ்வேறு கடமைகளை செய்வதற்கோ கட்டாயம் தற்காப்புக் கலை பயில்வது என்பது இன்றியமையாதது ஒன்றாகும். இதனால் பெண்களுக்கு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஒரு நிலையைக் கொடுக்கின்றது. பொதுவாக கராத்தே போன்ற தற்காப்பு கலையினை கற்றுக் கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பு எனலாம்.
- அவசர தகவல் தொடர்பு
பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க, அதாவது பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுவார். அந்த நேரத்தில் அவசரமாக காவல் துறைகளுக்கு அறிவிப்பதினூடாக ஏற்பட இருக்கின்ற இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கலாம். இவ்வாறு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தலின் மூலம், பெண்களுக்கு குற்றம், பிரச்சினைகள் செய்பவர்களுடைய நடவடிக்கலைகளைத் தடுக்கலாம். பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் உருவாகின்றது.
- துணையுடன் பணிபுரிதல்
இதில் பெண்கள் வேலையில் இருக்கும் இடங்களில் அதிகமாக ஆண்கள் இருக்கலாம். எனவே அவர்கள் அந்த வேலையில் அதிக பெண்கள் இருக்கின்ற இடங்களில் தன்னுடைய வேலையினை மாற்றிக்கொள்வது சிறந்ததாகும். இந்த முறை சில நேரங்களில் ஆண்களிடமிருந்து வரும் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவும்.
- பிரயாணிக்கின்ற வாகனம் தொடர்பான தகவல்களை வழங்குதல்.
சில நேரங்களில் பெண்கள் அவசரமாக வாகனங்களில் போக வேண்டியிருக்கும். எனவே Pick Me, Uber taxi போன்ற வாகனங்களில் தனியாக செல்லும் போது நம்பிக்கையான நபருக்கு செல்கின்ற வாகன எண், driver உடைய தொலைபேசி இலக்கம் மற்றும் location போன்றவற்றினை குடும்பத்தில் தெரிந்தவருடன் share செய்யலாம். இது போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்ளுவதால் பயத்துடனோ, சந்தேகத்துடனோ போக வேண்டிய தேவை இல்லை. தற்பாதுகாப்புக்காக இவ்வாறும் செய்துகொள்ளலாம்.
- பெண்களுடன் வாகனங்களில் செல்லல்.
இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது துணைக்காக இன்னொரு பெண்ணுடனோ அல்லது சில நேரங்களில் taxi ஓட்டுநர்களான பெண்களும் இருப்பார்கள். அவ்வாறாக பெண் ஓட்டுநர்களுடன் செல்வது அல்லது துணைக்காக மற்றும் பாதுகாப்புக்காக வேறு பெண்ணுடன் பெண்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும். ஒரு நம்பிக்கையுடன் இரவு நேரத்தில் பயணிக்கலாம்.
மேற்கூறிய வழிகளில் பெண்கள் இரவு நேரங்களில் வேலையில் இருக்கின்ற போதோ செல்கின்ற போதோ கடைபிடித்துக்கொண்டால், பெண்களுக்கு வர இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம்.