அனைத்தையும் நாடி  திருமணம் தொடர்பான பொது சட்டம்

திருமணம் தொடர்பான பொது சட்டம்

2021 Oct 14

“சட்டம் ஒரு வெளிச்சம்” என்பது சட்டத்தை புரிய வைப்பதற்கான மூன்று மொழிகளில் ஆன ஒரு சட்டபூர்வ உரையாடல் தொகுப்பாகும். லத்தின் மொழியின் படி “ignorantia legis neminem excusat” அதாவது சட்டத்தை அறியாமை, மன்னிக்க முடியாதது. இலங்கை சட்ட மாணவர் சங்கத் துடைய Pro bono குழு, சட்டத்தை இலகுவாக்கி பொது மக்களிடம் கொண்டு செல்லும் பணியை எமது நாட்டில் மேற்கொள்கிறது. இந்த ஆறாவது கலந்துரையாடல் திருமண சட்டங்கள் தொடர்பாக  தனியாரின் உரிமைகள் மற்றும் கடமைகள் விளக்குகிறது.

கீழ்வரும் உரையாடல், வெறிட்டஸ் அக்காடாடேமியாவின் தலைவரும், லண்டன் பல்கலைக்கழக  LLB பட்டதாரியான திரு. நிஷால் கெஹேனாவுடன் நடைபெறுகிறது.

  1.  சட்டப்படி திருமணம் என்பது யாது?

வெவ்வேறுபட்ட திருமணங்களுக்கு உரிய சட்டங்கள் யாவை?

திருமணம் என்பது ஒரு சுதந்திரப் பெண்ணும் ஆணும் பரஸ்பர ஈடுபாட்டுடன் இணைந்து கணவன் மனைவியாக வாழ சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு உடன்படிக்கை ஆகும்.

இலங்கை திருமண பொதுச் சட்டம் ஆனது ரோமன் டச்சு சட்டம் மற்றும் ஆங்கில சட்டத்தின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. திருமணப்பதிவு சட்டமூலம்  ( MRO) இலக்கம் 19, 1907 ஆனது பொதுச் சட்டத்தின் கீழான திருமணம் தொடர்பான சட்டங்களை விளக்குகிறது. வெவ்வேறுபட்ட மத இனங்களைச் சார்ந்த தனிப்பட்ட மக்களுக்கு இடையிலான திருமணங்களுக்கு சட்டமூலம் செல்லுபடியாகும். இருப்பினும் கண்டிய சிங்கள மக்கள் தங்கள் திருமண சட்டங்களை நிர்வகிக்க பொதுச் சட்டம் அல்லது கண்டிய சட்டத்தை தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இச்சட்ட மூலமானது முஸ்லிம் சமூகத்தின் திருமண உடன்படிக்கைகளை நிர்வகிக்க பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக இஸ்லாமிய சட்டத்தின்படி அவை நிர்வகிக்கப்படுகின்றன.

 

2. செல்லுபடியாகும் திருமணங்களின் வகைகள் யாவை?

பதிவு செய்யப்பட்ட திருமணம்

திருமண பொதுச் சட்டத்தின் (MRO) முன்னுரையின் படியும் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத எல்லா குடிமக்களும் MRO சட்டத்தின்படி திருமண பதிவில் இணைய முடியும்.

திருமண பதிவானது பிரிவு 23 தொடக்கம் 36 வரையிலான சட்டத்தின் ஊடாக படிப்படியாக நடைபெறும். பின் MRO வின் பிரிவு 26 சட்டத்தின்படி திருமண சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு  MRO இன் கீழ் திருமணம் செல்லுபடியானதாக அறிவிக்கப்படும்.

பிரிவு 23(1)- பத்து நாட்களுக்கு இலங்கையில் வசித்துள்ளதை உறுதிப்படுத்த இருவரில் ஒருவர் தாம் குடியிருந்த பிரதேசத்தின் பதிவாளருக்கு அறிவித்தல் வழங்க வேண்டும்.

பிரிவு 23(2)- இருவரும் வெவ்வேறு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆகின் பதிவாளருக்கு அறிவிக்க வேண்டும்.

பிரிவு 23(3)- இருவரில் ஒருவர் இலங்கைப் பிரஜை அல்லாவிடின் மற்றவர் பதிவாளருக்கு அறிவிக்கவேண்டும்.

பிரிவு 23(4)- தம்பதி இருவரும் இலங்கைப் பிரஜை இல்லாவிடின் பதிவாளருக்கு அறிவிப்பதுடன் இருவரும் குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது திருமணத்துக்கு முன் இலங்கையில் தங்கியிருக்க வேண்டும்.

பிரிவு 25 – அறிவித்தல்களை பெற்றோரின் பின்பு பதிவாளர் திருமணம் தொடர்பான தகவல்களை திருமண பதிவு புத்தகத்தில் பதிவு ஏற்றுவார். இது திருமண அறிவித்தலை பிரசுரம் செய்வதாக அமைவதுடன் பதிவாளர் பிரிவு 26 படி திருமண சான்றிதழை வழங்குவார்.

பாரம்பரிய திருமணம் (Customary marriage)

பாரம்பரிய கலாசாரத்தின் ஊடாகவும் விழுமியங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படும் திருமணங்களை நீதிமன்றம் ஏற்கின்றன. ஒரு பாரம்பரிய திருமணத்திற்குரிய அனைத்து முக்கிய சடங்குகளும் நடைபெறும் போது நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் அத்திருமணம் செல்லுபடியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

3. திருமணத்தை பதிவு செய்வது ஒரு அத்தியாவசியத் தேவையா?

சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்தல் அத்தியாவசியமானது அல்ல. இருப்பினும் திருமண பதிவேட்டில் பதிவு செய்தல் திருமணத்திற்கு சிறந்த ஆதாரமாக அமையும். திருமண புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். ( பிரிவு 41 MRO )

Cohabitation அதாவது தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கும் பாரம்பரிய திருமண முறைக்கும் இடையிலான சட்ட ரீதியான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இருப்பினும் பல்வேறு இன ங்களுக்கு உரிய பாரம்பரிய சம்பிரதாயங்களும் பழக்க வழக்கங்களாலும் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய திருமணமானது சட்டரீதியாக பதிவு மேற்கொள்ளப்படாவிட்டாலும் ஒரு செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 

4. யார் யார் திருமண பந்தத்தில் இணைய முடியும்?  வயது,தகுதி, தடை செய்யப்பட்ட உறவுமுறைகள்

1995 இன் முன்பு பிரிவு 15 இன் படி ஆண்களுக்கு 16 வயதாகவும் பெண்களுக்கு 12 வயதாகவும் திருமண வயது காணப்பட்டது. பின்பு 1995 இலக்கம் 18 டின் படி, திருமண பந்தத்தில் இணைய தம்பதியில் இருவரும் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என திருத்தி அமைக்கப்பட்டது. இச்சட்டமானது (தியாகராஜா v குருக்கள் (1923 25 NLR 69) என்ற வழக்கின் படி உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் 11 வருடம் ஒரு மாதம் வயது நிரம்பிய சிறுமி திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டார். இருப்பினும் இத்திருமணம் செல்லுபடியாகாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ( (குணரத்தினம்v பதிவாளர் நாயகம்)

பிரிவு 16 MRO, தடை செய்யப்பட்ட திருமண இணைப்புகளை பின்வருமாறு விளக்குகிறது.

  • தம்பதியில் இருவரில் ஒருவர் நேரடி வாரிசாக அமைதல்.
  • சகோதரி சகோதரனுக்கு இடையிலான உறவு ( பாதி ரத்தம் அல்லது முழு ரத்த சொந்தம் )
  • பெற்றோருக்கும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இடையிலான உறவு.

பிரிவு 18 படி தம்பதியில் இருவரில் ஒருவராவது ஏற்கனவே திருமண பந்தத்தில் இணைந்து, சட்டப்படி அந்த திருமணம் செல்லுபடியற்றது என நிரூபிக்கும் வரை பிரித்தோரு நபருடன் திருமணம் செல்லுபடியற்றது ஆகும். இது ( கேடியாராசி v கேடியாராசி மற்றும் பலர் 2004 3 SLR 116) என்ற வழக்கின் படி உறுதிப்படுத்தப்படுகிறது.

MRO இன் பிரிவு 17 படி, மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட உறவு முறைகளில் திருமணம் மேற்கொண்டால் அல்லது இணைந்து வாழ்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனையாக சிறைவாசம் அல்லது கடுங்காவல் தண்டனை ஒரு வருடத்திற்கு குறையாமல் வழங்கப்படும்.

 

5. இணைந்து வாழ்தல் (cohabitation) என்பது யாது?

அதாவது இரு நபர்கள் நண்பர்களாலும் உறவினர்களாலும் கணவன்-மனைவியாக வாழ்வதாக அடையாளம் காணப்படும் நிலை இணைந்து வாழ்தல் எனப்படும். பாதிக்கப்படும் வரை இந்த உறவு பிறரின் அனுமானத்தில் தங்கியுள்ளது. Habit ( பழக்கம் ) என்பது இருவர் குறித்த காலப்பகுதியில் கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதைக் குறிக்கும். Repute ( நற்பெயர் ) என்பது இருவர் சமூகத்தில் திருமண தம்பதியாக ஏற்றுகொள்ளப் படுதலைக் குறிக்கும்.

ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து வாழும்போது திருமணத்தின் விளைவாக தம்பதி இணைந்து வாழ்வதாகவே சட்டம் எடுத்துக்கொள்ளும். இன்நிலை விபச்சாரம் அல்ல என்ற நிலையில் சட்டம் அவர்களை தம்பதியாக ஏர்கும்.

Habit, repute நிலையாக இணைந்து வாழும் உறவு நிலை வெறும் அனுமானத்தின் மூலம் செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறாக அவர்கள் தம்பதியாக வாழ்வதற்கான போதுமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட வேண்டும். இணைந்து வாழும் உறவு நிலைக்கு எதிர்வாதமாக இருவரும் சட்டரீதியான திருமணத்தில் இணையாமையும், விபச்சாரம் ரீதியான உறவில் ஈடுபடுவதற்கான சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.

வழக்கு ( பெருநாண்டோ V டேபேரா ) இன்படி தம்பதி இருவரும் இணைந்து வாழும் நிலையில் மரணமடைந்து விட்டனர். தம்பதிக்கு இடையே யான எந்தவித சட்ட ரீதியான திருமண பதிவு இல்லாவிடினும், தம்பதியின் நடவடிக்கை மற்றும் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு காரணமாக நீதிமன்றம்  தம்பதியின் Habit மற்றும் Repute உறவு நிலையை திருமணமாக ஏற்றுக்கொண்டது.

கண்டியின் சட்டத்தின்படி Habit மற்றும் Repute உறவு நிலைக்கான அனுமானங்கள் செல்லுபடியாவதில்லை. கண்டியின் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டமூலத்தின் படி (KMDA) திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயமானதாகும். MRO அல்லது KMDA இன் படி பதிவு செய்யப்படாத எந்த திருமணமும் செல்லுபடியான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

6. Customary Marriage ( பாரம்பரிய திருமணம்) என்பது யாது?

பாரம்பரிய திருமணம் என்பது ஒரு நாட்டால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப நடத்தப்படும் திருமணமாகும். MRO இல் இது தொடர்பான சட்ட ரீதியான பிரிவுகள் காணப்பட்டாலும் பல தரவுகள் வழக்குகளின் மூலம் நிரூபிக்க படுகின்றன. பாரம்பரிய திருமணம் ஆனது குறித்து இன மத பிரதேச மக்களிடம் காணப்படும் சடங்கு முறை மூலம் நடத்தப்படுகின்றது.

பாரம்பரிய திருமணம் ஆனது, Customary laws ( வழக்கச் சட்டம் ) அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றது. கண்டிய மக்கள்  KMDA ஆலும், முஸ்லிம் மக்கள் MMDA ஆலும், யாழ்ப்பாண தமிழர், தேசவழமைச் சட்டத்தின் ஆலும் நிர்வகிக்கப்படுகின்றனர். இவை தவிர்ந்த மற்ற இன மக்கள்  MRO மூலம் திருமண பந்தத்தில் இணைய முடியும்.

 

7. இலங்கையில் காணப்படும் வெவ்வேறுபட்ட  சட்டங்கள் யாவை?

குறித்த தம்பதி மேற்குறிப்பிட்ட இனப் பிரிவுகளை சேர்ந்தவராக உள்ள நிலையில் வழக்கு சட்டங்களின்படி அவர்களின் திருமணம் நடைபெறும். இல்லாவிடின் குறித்து தம்பதி  MRO சட்டத்தின் மூலம் திருமணத்தில் இணைவர்.

உதாரணமாக கண்டியர்களின் KMDA சட்டமானது கண்டியர்களை KMDA அல்லது MRO சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும் திருமணம் நிச்சயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்  என்பதில் உறுதியாக உள்ளது.

 

8. ஒரு நபர் எந்த சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெரிவு செய்ய முடியுமா?

குறித்த நபரின் வளமை சட்டமானது அதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் பிற வழமைச் சட்டம் அல்லாத சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்ய முடியும். பொதுவாக தம்பதியில் ஒருவர் மற்றவரின் வளமை சட்டத்திற்கு உட்படாத நிலையில் குறித்த தம்பதி தமது திருமணத்தை நிர்வகிக்கும் சட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது..

கண்டியன் திருமணம்

9. நாம் கண்டியின் சட்டங்கள் பற்றி உரையாடலாமா? தம்பதியில் இருவரும் கண்டியராக இருக்கவேண்டுமா?

முகவுரை இன் படி KMDA சட்டமானது கண்டியர்களின் திருமணம் மற்றும் விவாகரத்தை நிர்வகிக்கிறது. 1850 காலகட்டத்தில் கண்டி மாகாணத்தில் வசித்து வந்த மக்களையும் குறித்த வம்சாவளியில் தொடர்ந்து வரும் தனி நபர்களையும் KMDA நிர்வகிக்கிறது.

முக்கியமாக தம்பதியில் இருவரும்  கண்டியராக அமையும்போது மட்டுமே KMDA மூலம் அவர்கள் திருமணத்தை நிர்வகிக்க முடியும். இருப்பினும் கண்டிய சட்டத்தின்படி திருமண தம்பதியினர்  KMDA அல்லது MRO இன் படி தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

 

10. கண்டியின் சட்டத்தில் பதிவு செய்தல் கட்டாயமானதா?

பிரிவு 3 (1) (a), இன் படி கண்டியின் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நபரது திருமணமானது புனிதமானதும், KMDA அல்லது MRO இன் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றும் பிரிவு 3  (1)(b), இன் படி பதிவு செய்யப்படாததும் புனித அற்றதும்  ஆன  திருமணம் செல்லுபடியற்றதாக அமையும்.

இதன்படி கண்டியன் சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்தல் கட்டாயமானது. MRO இன் படி திருமணத்தை பதிவு செய்தாலும் கண்டியர்கள் KMDA சட்டத்தின் வரம்புக்கு உட்பட்ட இருப்பர்.

 

11. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் முறையானது இன்னும் கண்டியன் சட்டத்தில் உள்ளதா?

பலதார உடமை( polygamy)மற்றும் பல பதிகள் உடமை( polyandry)கண்டியன் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. அவ்வாறு ஏற்படின் அது பலர் திருமணம்( bigamy) ஆக கருதப்பட்டு குற்றவியல் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும்.

12. ஒரு கண்டியன், கண்டியன் சட்டத்தை விடுத்து பொதுச் சட்டத்தின் மூலம் திருமணத்தை மேற்கொள்ள முடியுமா?

முடியும். குறித்த கண்டிய தம்பதி தங்கள் திருமணத்தை பொதுச் சட்டத்தின் மூலம் பதிவு செய்வதன் மூலம் அவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து ரீதியான தரவுகள் MRO சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்.

 

குறித்த சட்டங்கள் எதிர்கால முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தினால் மாற்றமடயலாம்.

ஸியிநாத் சாகிர்

Pro bono செயலாளர் 2020-2021

மொழிபெயர்ப்பு,

கிருத்திஷா மதிவண்ணன்

தன்னார்வ எழுத்தாளர் Pro bono கமிட்டி.

 

முழுமையான உரையாடல் இலங்கை சட்ட மாணவர்கள் சங்க youtube பக்கத்தில் மூன்று மொழிகளிலும் காணக் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php