அனைத்தையும் நாடி  இலங்கையில் வாழ்வது எப்படி? நீங்களும் சர்வைவர்தான்.

இலங்கையில் வாழ்வது எப்படி? நீங்களும் சர்வைவர்தான்.

2021 Nov 12

கொரோனா, ஊரடங்கு, பயணக்கட்டுபாடு, பொருட்கள் தட்டுபாடு, விலையுயர்வு இவையெல்லாம் இலங்கைக்கு ஒன்றும் புதிதில்லை. நாளுக்கு நாள் பொருட்கள் விலையேற்றம், தட்டுபாடு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிவர மக்கள் இலங்கையில் வாழவே பீதியடைகின்றனர். இவ் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று சிலருக்கு குழப்பம். அதிலும் உஷாரானவர்கள் தம் பெட்டி படுக்கைகள் எல்லாம் கட்டிக்கொண்டு நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் பிழைத்துக்கொள்கின்றனர். அப்படியென்றால் நம் நிலைமை? இது போன்ற நிலைமைகளுக்கு காரணம் யார்?
ஓட்டு போட்ட நாங்களா? வெற்றி பெற்ற அரசாங்கமா? அல்லது இந்த ஒட்டுமொத்த சமுதாயமா? இதைக் கேட்டவுடன் சிலருக்கு மனக்குமுறல்களும் தோன்றும். இலங்கையின் நிலை தான் என்ன? இதை கேட்கும் போது எனக்கு ஒரு மீம் (meme) நினைவிற்கு வருகிறது.

“கொரோனா வந்ததால்
பள்ளியில்லை, படிப்பில்லை,
படித்தபின் வேலையில்லை,
வேலையிருந்தால் சம்பளமில்லை,
சம்பளம் கிடைத்தால் கையில் காசில்லை,
காசிருந்தும் வாங்க பொருளில்லை,
சமைக்க கேஸ் இல்லை,
கறிக்கு மஞ்சள் இல்லை,
சமையலுக்கு அரிசி இல்லை,
சாப்பிட வழியில்லை,
தேநீர் அருந்த பால்மா இல்லை,
தேவையிருந்தும் பெற்றோல் இல்லை,
பெற்றோல் வாங்க டொலர் இல்லை,
கடன் கேட்க நாடுகளுமில்லை,
நம் நாட்டுக்கே கடன் தொல்லை
என்னடா ஆச்சு நம்ம நாட்டுக்கு?
நாட்ட சிங்கப்பூராக்குவனு நெனச்சி ஓட்டு போட்டா கடைசியில சிங்கிள் டீக்கு கூட வழியில்லாம ஆக்கிபுட்டிங்களே..”

கேட்கவே சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்கவேண்டிய விடயம்தான். அபிவிருத்தியடைந்து வரும் நாடாக உருமாறி வரும் நம் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளால் மக்கள் மனமுடைந்துபோகின்றனர். ஏறி வரும் விலைவாசி காரணமாக செய்வதறியாது தடுமாறுகின்றனர். வரவு குறையவே செலவு அதிகரிக்கிறது. போக போக விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. இதற்கு தீர்வு தான் என்ன? என்பதை பற்றி யோசிப்போம். இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கையில் எவ்வாறு வாழ்வது என்பது பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இதில் அரசாங்கத்தின் மீதோ சமுதாயத்தின் மீதோ யார் மீதும் பழிபோட்டும் நடக்கப்போவதொன்றுமில்லை. இவற்றை நன்கு அறிந்துகொண்டு தேவைக்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்வதே சிறந்தது. உதாரணத்திற்கு பால்மா இல்லையென்றால் ப்ளேன்டீ அல்லது க்ரீன் டீ அல்லது இம்யுனிடி டீ இவற்றை அருந்தப்பழகுங்கள். ஒருபுறம் இவை உடலுக்கு ஆரோக்கியத்தையளித்து மறுபுறம் இந்த பால்மா பிரச்சனைக்கும் உங்களுக்கு தீர்வாக அமையும். பெற்றோல் தட்டுபாடு இருப்பதன் காரணமாக நீங்கள் முடிந்தவரையில் பொதுபோக்குவரத்து வசதியை பயன்படுத்துவது உங்கள் பயணத்தையும் இலகுவாக்கும். பணத்தையும் மிச்சப்படுத்தும். இப்போது அனைத்து வீடுகளிலும் இருக்கும் பிரச்சளை கேஸ் பிரச்சனை. லீற்றருக்கு ஆயிரம் கணக்கில் விலை எகிறிக்கொண்டு போகிறது. கேஸ் தீர்ந்தால் என்ன வீடுகளில் வேறு அடுப்புகளே இல்லையா? கேஸ் விலை குறையும் வரை மண்ணெண்ணெய் அடுப்பு, விறகடுப்பு, மின்சார அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இன்று பலர் படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வேலை தேடி அலைந்தே பலருக்கு பாதி முடியும் பழுத்துவிட்டிருக்கும். வேலையில்லாமல் வாழ்வை எவ்வாறு கொண்டுசெல்வது. இதில் சிலர் சாமர்த்தியசாலிகள் வீட்டிலிருந்து சிறு சிறு சொந்ததொழில்கள் செய்கின்றனர். இதன் மூலம் வேலைகிடைக்கும் வரை அவர்களுக்கு வீட்டிலிருந்தே வருமானம் கிடைக்கிறது. Freelancer ஆக சிலர் வேலை செய்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் கூட அவர்களால் வருமானமீட்டமுடியும். இதுபோன்று நீங்களும் முயற்சிக்கலாம். இப்பொழுதெல்லாம் வெளிநாடு செல்ல எக்கச்செக்கமான விசாக்கள் குவிகின்றன. இங்கு இருப்பதைவிட இங்கு படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச்சென்று குடியேறுவதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியே எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றால் நம் நாட்டு நிலை என்ன? இங்கிருந்துகொண்டே நம் அறிவுத்திறமையும் தூரநோக்கு சிந்தனையும் கொண்டு நாட்டை சிறந்தமுறையில் கட்டியெழுப்பவேண்டும். கல்வி கற்று அதன் யுத்திகளை நம் நாட்டிலும் பயன்படுத்தவேண்டும். இலங்கையில் ரசிக்கக்கூடிய, அனுபவித்து மகிழக்கூடிய விடயங்கள் எண்ணிலடங்கா. அவற்றை பற்றி அறியாததால் தான் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் உயர்ந்த கூற்று உணர்த்தும் உண்மைபோல மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்போம்
நாளை நமக்காக
நம் நாட்டின் தலைமுறைக்காக..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php