ஈகல் 99

2021 Nov 12

“டப்பா கார்”

என்று அதை யாராவது சொன்னால் அந்தோனிக்கு கண்கள் சிவந்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவனது மனைவி மரியத்தின் தாய் அதாவது அந்தோனியின் மாமியார் ஒரு பொருட்டாகவே நினைத்தில்லை. அவனையும் அந்த காரையும் திட்டி தீர்ப்பதே அவளது வேலை.

அந்தோனி ஒரு தோல்வி அடைந்த கார் ஓட்ட பந்தைய வீரன். ஒரு காலத்தில் அந்த பிரதேசத்தின் சிறந்த கார் பந்தைய வீரனாக அவன் தான் இருந்தான். ஆனால் அது ரொம்ப காலம் நிலைக்கவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்தான்.  அவனது ஈகல் 99 காரை காட்டிலும் அதி நவீன கார்களும் வெளிநாட்டு வீரர்களும் கார் பந்தையத்துக்குள் நுழைந்தார்கள். கொடி கட்டி பறந்துக்கொண்டிருந்த அவன் படு குழியில் வீழ்ந்தான்.

அந்தோனி பலசாலி. ஆனால் அதிவேகமாக கார் ஓட்டுவதை தாண்டி அவனுக்கு எதுவும் தெரியாது. பெரிதாக படிக்கவில்லை. மனைவியையும் மூன்று மகள்மாரையும் பார்த்துக்கொள்ள சிரமப்பட்டான். கடனையும் அதினால் ஏற்படும் வரியையும் கட்டமுடியாமல் தாய் கிழவியின் பண்ணை வீட்டுக்கு வந்து சேர வேண்டி நேர்ந்தது. அங்கு இருக்கும் ஆடு, மாடுகளை பராமறித்து அவற்றை சந்தியில் விற்கும் வேலையினை அவன் செய்து வந்தான்.

அந்த வீடு மரியத்தின் தாய் பெயரில் இருந்தது. அங்கிருந்த மாட்டு பண்ணையும் அவளுக்கு சொந்தமானது தான். அங்கே எல்லாம் அவள் தான் என்ற எண்ணம் மரியத்தின் தாயாரிடம் இருப்பதாக அந்தோனி மரியத்திடம் சொல்லிக்கொண்டே இருப்பான். தாய் கிழவி என்று தான் அவளை அழைப்பான்.

ஆனால் என்ன ஆனாலும்  அவனது ஈகல் 99 காரை அவன் விடவில்லை. கையோடு அதையும் கொண்டு வந்து அதை பழுது பார்த்து கவனித்து வந்தான். என்ன நடந்தாலும் அதில்  ஆடு, மாடுகளை அவன் ஏற்றுவது இல்லை. என்னைக்கு இருந்தாலும் இந்த காரை நான் கொழுத்திவிடுவேன் என தாய் கிழவி சொல்லிக்கொண்டே தான் திரிவாள். இந்த காரினால் தான் அவன் நாசமாக போனான் என்பது அவளது கூற்று.

அந்தோனி அந்த காரை அவளிடம் இருந்து பாதுகாத்து வந்தான். அவ்வப்போது அந்த காரில் பக்கத்தில் எங்காவது சென்றுவருவான். ஒரு நண்பனை போல அதனிடம் அன்பு காட்டினான். மரியத்துக்கு இதெல்லாம் புரியும். அவனை ஒரு கார் சாம்பியனான பார்த்து தான் அவள் காதலில் விழுந்தாள்.  ஆனால் அதுவே அவனுக்கு வினையாகும் என அவள் ஒரு போது நினைக்கவில்லை. என்ன இருந்த போதும் அந்தோனியின் மீது அவள் வைத்திருந்த காதலை அவள் விடவில்லை.

ஒரு நாள் விடியகாலை பண்ணையில் இருந்த மாட்டுக்கு வெறி ஏற்பட்டு அது அந்தோனி மீது மோதியலில் அவனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சத்திரசிகிச்சை செய்தாகவேண்டிய நிலை. வீட்டில் அப்போது எந்த சேமிப்பும் இருக்கவில்லை. வரவேண்டிய பணமும் சரியாக வந்து சேரவில்லை. இருந்த ஒரே  வாய்ப்பு ஈகில் 99ஐ விற்பது தான். ஆனால் அதற்கு அந்தோனி ஒத்துக்கொள்ளவே இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் சிகிச்சையை செய்ய முடியாவில்லை என்றால் அது ஆபத்தாகிவிடும். அவனுக்கு காரின் மீது இருந்த பிரியம் மரியத்துக்கு தெரியும் இருந்தும் அவளே முன் வந்து காரை விற்று விடுவோம் என கேட்ட போதும் பிடிவாதமாக இருந்தான் அந்தோனி. கடைசியாக அவன் விளையாடி வென்ற சில பதக்கங்களை விற்று தான் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கிழவியின் பேச்சு எல்லையற்று போனது. உனக்கு பொண்டாட்டி என் மவளா இல்ல இந்த காரா என கடிந்துக்கொண்டாள்.

காரை ஏசுவதையே அவள் வேலையாக கொண்டிருந்தாள்.  அந்தோனி இரண்டு வாரங்களுக்கு படுக்கையிலேயே கிடந்தான். ஒரு மாதத்திற்கு அவன் அமர்ந்து காரோ அல்லது எந்த வாகனமோ ஓட்ட கூடாது என டாக்டர் சொல்லி இருந்தார்.

நாற்கள் மெல்ல சென்றுகொண்டு இருந்தது. அந்தோனிக்கு படுக்கையிலேயே கிடப்பது மிகப்பெரிய அழுப்பை உண்டாக்கியது. அத்தோடு வீட்டில் இன்னொரு விசேஷமும் ஏற்பாடாகியது. தாய் கிழவி 90வது வயதை இரண்டு நாட்களில் எட்ட இருந்தாள். மரியம் அவளது இந்த பிறந்த நாளை மிக சிறப்பாக செய்துவிடவேண்டும் என ஏற்பாடுகள் செய்தாள். கிழவி உறுதியாக தான் இருக்கிறாள். ஆனால் அவள் 100 தொடுவது கடினம் என்பதால் இந்த 90வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாக வீடு ஏற்பாடானது.

பிறந்த நாளுக்கு முதல் நாள் காலையில் விடிந்தும் கிழவி எழும்பாதது பெரிய பயத்தை கிழப்பியது. அருகில் சென்று தட்டி பார்த்தபோது அவள் பேச்சு மூச்சின்றி கிடந்தாள். இப்படி பிறந்த நாளை பார்க்காமலேயே கிழவி போய் விடுவாளோ என பயந்து அவளை கட்டிலோடு தூக்கிக்கொண்டு அருகில் இருந்த உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றார்கள்.

கிழவி அபாயத்தில் இருந்தாள். திடீர் என கிழவியின் ஒட்சிசன் அளவு உடலில் குறைந்துவிட்டு இருக்கிறது. செயற்கை சுவாசம் செலுத்தவேண்டும் அதற்கு வசதி இங்கு இல்லை என உள்ளூர் மருத்துவர் கைவிரித்தார். கண்டிப்பாக பிரதான வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் மட்டுமே கிழவியை காப்பாற்ற முடியும் அதுவும் பத்து நிமிடத்திற்குள் கொண்டு சேர்க்க வேண்டும் அரை மணி நேர தூரத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு பத்தே நிமிடத்தில் போவதென்பது முடியாத காரியம். ஆகவே வருவதை எதிக்கொள்ள தயாராகிவிடுங்கள் என்றார் வைத்தியர்.

அந்தோனிக்கு பொறி தட்டியது. முப்பது நிமிட தூரத்தை பத்து நிமிடத்தில் கடக்கவேண்டும். கண்களை இறுக மூடிக்கொண்டான். ஒரு செக்கனில் முடிவெடுத்தான். மரியத்தை அழைத்து தாய் கிழவியை அழைத்துக்கொண்டு பின்னால் வரும்படி கூறினான்.

கராஜிற்கு சென்று ஒரு மாதமாக மூடி வைத்திருந்த அவனது ஈகல் 99காரை மூடி இருந்த போர்வையை தூக்கி எரிந்தான். தூசி பறக்க அந்த போர்வை பறந்து விழுந்தது. நூறு போட்டிகளுக்கு மேல் பார்த்த ஈகல் 99 கம்பீரமாக அவனது ஓட்டுனரை பார்த்து நின்றது.

“ உள்ளே போ” என மரியத்தை கையசைத்தான். கிழவியை பத்திரமாக பிடித்துக்கொள் முடிந்தால் கண்களை மூடிக்கொள் என வண்டியை திருகி கியரை இழுத்தான். பின்னால் வந்தவர்களுக்கு வண்டி அங்கிருந்த கிளம்பியபோது ஏற்படுத்திய புழுதி மட்டுமே தெரிந்தது.  கண்களில் வெறியோடு வண்டியை செலுத்தினான் அந்தோனி. ஈகல் எந்த காரையும் எந்த சிக்னலையும் மதிக்காமல் உச்ச கதியில் பறந்தது. பத்து நிமிடத்தை எட்டு நிமிடமாக மனதில் கொண்டான் அந்தோனி அது அவனது ஓட்ட பந்தைய உத்திகளில் ஒன்று. அந்த எட்டு நிமிடத்தில் அவன் எத்தனை முறை கண் சிமிட்டி இருப்பான் என தெரியவில்லை. புயலாக பறந்தான். பின்னால் தாய் கிழியின் நிலையை பற்றியும் மரியத்தின் நிலையை பற்றியும் அவன் கணக்கில் கொண்டதாக தெரிவில்லை.  காரின் வேகத்தில் அவர்கள் காருக்குள்ளேயே தூக்கியெரியப்பட்டார்கள்.

எட்டாவது நிமிடம் கார் ஹாஸ்பிட்டல் வாசலை வந்தடைந்தது. உடனடியாக தாய் கிழவி கிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டாள். பின்னால் தாமதமாக வீட்டின் மற்ற உறுப்பினர்களும் வந்து சேர்ந்தார்கள்.  நீண்ட நேர போராட்டத்து பின் அவள் பிழைத்துக்கொண்டாள். டாக்டர் நல்ல வேலையாக சரியாக நேரத்துக்கு வந்தீர்கள் என மறுபடி மறுபடி சென்னபோது அந்தோனிக்கு அது ஒரு வெற்றிக்கேடயமாக இருந்தது.  அவனது கார் அன்று ஒரு உயிரை காப்பாற்றியது. வெளியே வந்து வெற்றிச்சிரிப்போது அவனது ஈகர் 99ஐ பார்த்தான். தன்னுடைய இத்தனை வருட பயிற்சியும் இந்த தாய் கிழவியை காப்பாற்ற தானா என நினைத்து சிரித்துக்கொண்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php