2021 Nov 16
இலங்கை பெற்றோர்கள். நாம் அவர்களின் கண்மணிகள். அவர்களின் பெருமை, மகிழ்ச்சி, பொய் மற்றும் வெறுப்பு தரும் மற்றும் ஏமாற்றும் சந்ததியா நாங்கள்?;
சரி பார்ப்போம்.
நாம் செய்ய வேண்டியவற்றை நிச்சயம் நாம் செய்தாக வேண்டும். அதுவும் புத்திசாலியான குழந்தைகளாகிய நாங்கள் அதை மிக நேர்த்தியுடன் செய்கிறோம்.
ஒவ்வொரு இலங்கைக் குழந்தையும் தங்களது தந்திரமான பெற்றோரை சமாளிப்பதற்கு சின்ன சின்ன நம்பதகுந்த பொய்களைக் கூற வேண்டியது அவசியமாகிவிட்டது. (குறிப்பாக நாம் அதனை மிக விரைவாகவேக் கற்றுக்கொள்கிறோம்). இதை நாம் எதிர்கொள்ளவேண்டும். நமக்கு வயதாகினாலும் கூட இந்த பொய்கள் மறைந்துவிடாது. அவை தொடர்ந்தும் உருவாகிவரும். எங்கள் பள்ளி பருவத்தின் போது முதல் சில வருட காலத்தில் பல்வேறு கலகங்களை புரியும் பதின்ம இளம் வயது வரையில், பல ஆண்டுகளுக்கும் மேலாக நம் பெற்றோரிடம் நாம் சொல்லும் பொதுவான பொய்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
பாடசாலையில் இன்னும் மதிப்பெண்கள் கொடுக்கப்படவில்லை.
ஆம், நீங்கள் மீண்டும் கணித பாடத்தில் கோட்டை விட்டுவிட்டீர்கள். ஒருவேளை மேலதிக டியூசன் வகுப்புகளை தவிர்த்தற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருந்திருக்குமா? முடிவுகள் கிடைக்கப்போகும் நாள் பற்றிய கவலை எப்போதும் நம் நியாபகத்தில் சுழன்றுக்கொண்டிருக்கும். உயிர் வாழ நாம் எதையும் செய்வோம்.
எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருக்கும் அடுத்தவர் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அத்தை, ‘கணிதத் தேர்வில் என் மகன் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தான்! உங்களுக்கு என்ன கிடைத்தது? என்று கேட்கும் வரையில்.
அம்மா, அப்பா என்னால் முடியும் என்றார்.
ஒரு விடயத்திற்காக அனுமதி கேட்டு பெற்றோருக்கு இடையே கலக்கம் செய்துவிட்டு ஒரு கட்டத்தில் நாங்கள் அனைவரும் சோர்வடைந்துவிடுவோம். நம்மில் உள்ள புத்திசாலிகள் சிலர் இந்த இக்கட்டான நிலைக்கு எளிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.
‘அம்மா, அப்பா என்னால் முடியும் என்று கூறினார்கள்’
விடயம் எதை சார்ந்திருக்கிறது என்பதை பொறுத்தே அதற்கான வாய்ப்பும் அதிகம்.
அவன், அவள் எனக்கொரு நண்பர் மட்டுமே.
சிலசமயம் அது உங்கள் உயர்நிலைப் பள்ளியில் தோன்றிய ரகசிய காதலாக இருக்கலாம். அல்லது ‘எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்’ என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு நீங்கள் மறைத்து வைத்திருக்கும் பதில் உங்கள் 5 வருட காதலனாக இருக்கலாம்.
கதைக்கரு திருப்பம்: அவர்களுக்கு ஏற்கனவே இந்த உண்மை தெரியும். உங்கள் படுக்கைக்கு அடியில் காதல் கடிதங்கள் குவிந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம். அத்தைகள் உங்கள் அம்மாவை அழைத்து, ஒன் கோல் ஃபேசில்(One Galle Face) நீங்கள் அந்த நபரை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.
அவர் ஒரு உபர்(Uber) டிரைவர் மட்டுமே.
அதே வெள்ளை நிற மினி கூப்பர் தினமும் உங்களை சாலையின் ஓரத்திலிருந்து மீண்டும் மீண்டும் அழைத்துச் செல்கிறதா? பெண்ணே, கவனம்.
இரவு 11 மணியாவதற்கு முன் வீட்டுக்கு வந்துவிடுவேன்.
ஒவ்வொரு வாரத்திற்கும் அடிப்படையில் ஒவ்வொரு பெண், ஆணின் வாயிலிருந்து வருவது பொய்தான். உங்கள் ஹை ஹீல்ஸ் (Tip toe) அல்லது உங்கள் ஆக்ஸ்(Axe) வாசனைத்திரவியத்தை அவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கவனிக்கிறார்கள். அதிகாலை 2 மணி என்பதை உணரும் வரை நீங்கள் சிறிது பானங்கள் அருந்தி ஓய்வெடுத்திருந்திருக்கலாம். நீங்கள் வரும்முன் அவர்கள் உறங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் அச்சத்தோடு வார்த்தைகளை உச்சரித்து விட்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிடுவீர்கள். நீங்கள் டிப்டொப்பாக இருப்பதை வழக்கமாக்கிக்கொண்டு மீண்டும் ரகசியமாக பதுங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பீர்கள். இதனால் நீங்கள் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அதுவும் ‘மகனே……’ என்ற சத்தம் கேட்கும் வரையில்.
நான் புகைபிடிப்பதில்லை. ஆனால் என் நண்பர்கள் செய்கிறார்கள்.
அந்த ஏழை நண்பர்கள் இதற்குள் மாட்டி தவிக்கின்றனர். உங்கள் கைப்பையில் அல்லது ஜீன்ஸ் பொக்கெட்டில் ஒரு பெக் கிடைக்கும் வரை நீங்கள் அனைவரும் ஒருபோதும் இதனை கற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது போல ஊமையாக இருப்பீர்கள்.
நான் சிறிது சோர்வாகதான் இருக்கிறேன். குடிபோதையில் இல்லை.
சிவந்த கண்கள், அந்த மலிவான புதினாவின் வாசனையுடன் சாராய மணம் கலந்த சுவாசம், தடுமாறிய நிலையிலிருக்கும் ‘நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா’? நம் பெற்றோர்கள் ஏற்கனவே நம் வயதைக் கடந்துவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சியுங்கள். குடிப்பழக்கத்தில் நமது இலங்கை அப்பாக்கள் எல்லாம் கைதேர்ந்தவர்கள்.
நான் நலமாக இருக்கிறேன்.
குறிப்பாக தாய்மார்களுக்கு பகுத்தறிவு அதிகமாகவே உள்ளது. நீங்கள் அமைதியாக பெருமூச்சு விட்டாலோ அல்லது உங்கள் தட்டில் நீங்கள் உண்ணும் உணவை அரைவாசியில் விட்டுச் சென்றாலோ அவர்கள் அதனை நன்றாக கவனித்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களின் நலனுக்காக நீங்கள் பொய் சொல்லும் ஒரு முறையாகவும் இது இருக்கலாம். உங்களை காயப்பட்டிருப்படுத்துவதை பார்க்க அவர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு இன்னும் பத்து மடங்கு வலியை ஏற்படுத்தும். ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று கூறுவது பெரும்பாலும் சோகம் கலந்த பொய்யாகவும், இதுவரையில் இல்லாத நம் இதயத்திற்கு பெரும் பாரமாகவுமிருக்கும்.
என் கையடக்கத் தொலைபேசி செயலிழந்துவிட்டது
இல்லை, நிச்சயமாக இல்லை. உங்களுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் உங்கள் திரையை ஒளிரச் செய்யும். நிச்சயம் நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள். பார்த்துவிட்டு ரிங்கரை அணைத்திருப்பீர்கள் அல்லது விமானப் பயன்முறையை (Flight mode) ஐ on செய்திருப்பீர்கள்.
நான் உங்களை சமூக ஊடகங்களில் block செய்யவில்லை. நான் டிஜிட்டல் நீக்கம் செய்தேன்.
எனவே இவற்றில் ஏதாவது ஒன்று உங்களிடமிருந்திருக்கும்! உங்கள் பெற்றோரிடம் என்ன பொய் சொன்னீர்கள்? உங்கள் கருத்துகளின் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!