மனிதர்களை நாடி உலகை மாற்றும் இலங்கையர்கள் யார்?

உலகை மாற்றும் இலங்கையர்கள் யார்?

2021 Nov 15

நமது இலங்கையர்கள் எவ்வளவு புதுமையானவர்கள்? அவர்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை  சமூகமாற்றுவதற்கும் இச் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இலங்கையின் இக்  கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆர்வம், திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தி  சர்வதேச அரங்கத்தில்  தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். அவ்வாறு  ஆட்டத்தை  மாற்றி சரித்திரம் படைத்த இலங்கையின் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியல் இதோ!

சுரங்க நாணயக்கார

சுரங்க 2011 இல் “ஆக்மென்ட் மனித ஆய்வகத்தை” (https://ahlab.org/) நிறுவினார். அதில்  புலனுணர்வு மற்றும் அறிவாற்றல் திறன்களை   விரிவுபடுத்தும் அறிவார்ந்த மனித-கணினி இடைமுகங்களை வடிவமைப்பதை  அவர்  ஆராய்ச்சி செய்கிறார். செவித்திறன் அல்லது பார்வை போன்றவற்றில்  புலன் குறைபாடுகள் காரணமாக உலக  செயற்பாடுகளில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு அவரது பணி அளப்பரியதாகும்.

EyeRing – சைகைகள் போன்ற தடையற்ற தொடர்புகளுக்கு விரல் அணிந்த இடைமுகம்; Hoptic chair – காதுகேளாதவர்களுக்கு மிகவும் திருப்திகரமான இசை அனுபவத்தை வழங்கும் செவிப்புல  அமைப்பு மற்றும் StickEars – அன்றாட பொருட்களை அணுகக்கூடியதாக மாற்றும் சாதனம் போன்ற ஒலி அடிப்படையிலான குறிப்புகளை எடுப்பது  போன்ற கண்டுபிடிப்புகளுக்காக  பணியாற்றியுள்ளார்.  ஒவ்வொரு StickEar சென்சார் முனையும் ஒலி அடிப்படையிலான உள்ளீடு/வெளியீட்டு திறன்களை வழங்க ஒரு சிறிய  ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியை  கொண்டுள்ளது.

MIT TechReview இனால் வழங்கப்பட்ட ஆசிய பசுபிக் பகுதியின்  Young Inventor Under 35 (TR35 award)  விருது , இலங்கையின் சிறந்த இளம் நபர்கள் (Young Persons of Sri Lanka -TOYP) விருது  மற்றும் INK Fellowship  2016  உட்பட  பல விருதுகளை தனதாக்கி கொண்டார்.

ரங்கா டயஸ்

டாக்டர். டயஸ் ஒரு சர்வதேச அளவில் அங்கீகரம் பெற்ற ஒரு  விஞ்ஞானி ஆவார், அவருடைய ஆராய்ச்சி அதிகூடிய  அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைக தொகுதிகளின் நிகழ்வுகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்துகிறது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பூமியில் உள்ள அரிதான உலோகமான அணு உலோக ஐதரசன்  H2 (திண்மம் ) கண்டுபிடிப்பில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இசாக் சில்வேரா மற்றும் ரங்கா டயஸ் ஆகியோரின் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் ரங்கா டயஸ் தலைமையிலான குழுவே  உலகின் முதல் அறை வெப்பநிலை அதியியக்கியை (room-temperature superconductor) கண்டுபிடித்தது. அறை வெப்பநிலையில் ஒரு அதியியக்கியை  உருவாக்கவேண்டும் என்ற இயற்பியலாளர்களின் நீண்டகால போராட்டத்தின் விளைவாக இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு இயற்பியலில் சாதனை படைத்துள்ளது.

ரகித மாலேவன

பெரும்பாலும் மருத்துவம் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதே ரகித மாலேவானவின் பணியாகும்.எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் லுகேமியா நோய்களுக்கு எதிரான வெற்றிகரமான சிகிச்சைகளில்  ஈடுபட்டமைக்காக விருதை பெற்றுக்கொண்டதால்  ரகிதா அவர்கள் புகழ் பெற்றார்.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திட்ட ஒலிம்பியாட்டில் , மனித லுகேமிக் செல்கள் மீதான செயல்பாட்டு சிகிச்சை மருந்தாக நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி வெண்கலப் பதக்கத்தை  வென்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம்  ஆண்டு நீர்பாசன பாதுகாப்புக்கான தனித்துவமான முறையை இவர்  கண்டுபிடித்தார். இது ஸ்டாக்ஹோம் ஜூனியர் வாட்டர் ப்ரைஸ் ( Stockholm Junior Water Prize ) தேசிய போட்டியில் தகுதி விருதை வென்றது.

2016 ஆம் ஆண்டு எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தாக்கியுள்ள  சமூகத்திற்காக  அவர் செய்த சமூகப் பணிக்காக ராயல் காமன்வெல்த் சொசைட்டியின் ( Royal Commonwealth Society )மதிப்புமிக்க குயின்ஸ் யங் லீடர்ஸ் ( Queen’s Young Leaders) விருதையும்  வென்றார்.


மஞ்சு குணவர்தன

சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானிகளில் ஒருவர்  மாத்தறையை சேர்ந்த மஞ்சு குணவர்தன. அவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று  நானோ  மின்குமிழை  கண்டுபிடித்து நோய் கிருமிகள் பரவுவதைத்  தடுக்கும்  தீர்வை கண்டறிந்தமையாகும் .

விருது பெற்ற இலங்கை ஆராய்ச்சியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் கொரோனா வைரஸ் மற்றும் வேறுபட்ட காற்றால் பரவும்  நோய்களுக்கும் தன்னிடம் சாத்தியமான தீர்வு இருப்பதாக வலியுறுத்துகிறார்.

நானோ துகள்கள் கொண்ட மின்குமிழ்  வளிமண்டலத்தில் உள்ள நச்சுத் துகள்கள், பற்றீறியா  மற்றும் வைரஸ்களை நீக்குகிறது. இந்த கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா வழங்கிய காப்புரிமை குணவர்தனவிடம் அவர்களிடம்  உள்ளது.

நானோ துகள்களுடனான  வெளிப்புற மேற்பரப்புடன் கூடிய நானோ மின்குமிழை  குளியலறையிலோ அல்லது சமையலறையிலோ பொருத்தி கிருமிகளை அழிக்கலாம்.


தினேஷ்
கடுகம்பல

தினேஷ் கடுகம்பலஉலகின்  முதல் ரேடியஸ் மீட்டரை  (radius meter) அதாவது எந்தவொரு கோளம் அல்லது பரிதியின்  ஆரையை  கண்டறியும் சாதனத்தை கண்டுபிடித்தார்.

இச் சாதனத்தை உருவாக்குவதற்கு முன், கடுகம்பலா ஒரு வட்டத்தின் ஒரு பகுதியின் ஆரையை  அளவிட ஒரு கணித சூத்திரத்தை முன்வைத்தார். அவரது கணித வழித்தோன்றல் சூத்திரமானது  சதுர இரட்டை தேற்றம் என்று அழைக்கப்படுகிறது.  மற்றும் அச் சூத்திரமானது  ரேடியஸ் மீற்றருக்கு அடிப்படையாக திகழ்கிறது.

2009 ஆம் ஆண்டு  படைப்பு மற்றும் கணித சூத்திரம் இரண்டிற்குமான தனது காப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அவரின்   சதுர இரட்டை தேற்றம் கணித பாடப்புத்தகங்களில்  சேர்க்கப்பட்டு பாடசாலைகளில்  கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2008 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (National Diploma in Technology – NDT) பயின்று கொண்டிருக்கும்  காலப்பகுதியிலேயே  அவர் இந்த கருவியை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

டாக்டர் அனுபா ஹேரத்

2017 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் டாக்டர் ஹேரத் அவரது குரல்வளை  பதிப்பிற்காக தங்கப் பதக்கத்தை வென்றார், மேலும் அதில் தலைமை தங்கிய  நடுவர்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றார்.  அவர் தயாரித்த ‘ விரிவாக்கப்பட்ட செயல்பாடுகளுடன் கூடிய   காணொளி  குரல்வளை (Video-Laryngoscope with Extended Functions) ’ ஊடுருவலை எளிதாக்கி  பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

இந்த இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் கடின உழைப்பின் மூலமாக இவ் உலகில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்து  தனித்துவமாய் திகழ்கின்றனர். எவ்வாறாயினும் இறுதியாக  இவர்களின்  தயாரிப்பையும் கண்டுபிடிப்புகளையும் மட்டுமே நாம் பார்க்கிறோம்.  அதனை கண்டுபிடிக்க அல்லது தயாரிக்க அவர்கள் ஒவ்வொருவரும் இந்த வெற்றியை அடைய எவ்வளவு போராடினார்கள் என்பதைப் பற்றிய தனிப்பட்ட கதைகளையும்  நாம் பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. அவர்களின் கடந்தகால கண்டுபிடிப்புகளாலும்  இன்னும் புதிதாக கண்டுபிடிக்கப்படவுள்ள கண்டுபிடிப்புகளினாலும் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றமொன்று நிச்சயம் நிகழலாம்.  இவை  அவசியம் போற்றப்படவேண்டியதொன்றே. உண்மையில், நமது சிறந்த கண்டுபிடிப்பாளர்களும் விஞ்ஞானிகள் இல்லையென்றால் இவ் உலகம் மிகவும் இருண்டு போயிருக்கும்  அல்லவா? பல பிரச்சனைகளைத் தீர்த்து உலகை மிகச் சிறந்த வாழ்விடமாய் மாற்றிய எங்களின் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் மிகப்பெரிய நன்றிகள் உரித்தாகட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php