அழகை நாடி அக்குளின் கருமையை போக்க இலகுவான வழிமுறைகள்

அக்குளின் கருமையை போக்க இலகுவான வழிமுறைகள்

2022 Feb 8

உடலின் மற்ற பாகங்களைப் போலவே அக்குள்களின் தோலும் கருமையாகவோ அல்லது நிறம் மாற்றமாகவோ இருக்கலாம். மற்ற தோலை விட கருமையாக இருக்கும் அக்குள் தோல் சிலரை ஸ்லீவ்லெஸ், ஷர்ட் அணிவதிலிருந்தும் பொது இடங்களில் குளியல் உடைகளை அணிவதிலிருந்தும் விளையாட்டுக்களில் பங்கேற்பதிலிருந்தும் விலகியிருக்குடம் மனநிலையை ஏற்படுத்துகின்றது. அக்குள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதைப் போலவே அதற்கு பல்வேறு சிகிச்சை முறைகளும் இருக்கின்றன.

அக்குள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள்
• டியோட்ரண்டுகள் (Deodorant) மற்றும் ஆன்டிஸ்பெர்ஸ்பிரண்ட்களில் (Antiperspirant) இரசாயன எரிச்சல்.
• ஷேவிங்கினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிராய்ப்பு.
• அரிதாக தோல் உரிதல் காரணமாக இறந்த சரும செல்கள் குவிதல் (dead cells).
• இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் உராய்வு.
• மெலனின் (melanin) அதிகரிப்பு போன்ற ஹைப்பர் பிக்மென்டேஷன்.

நீங்கள் வெண்மையான அக்குள்களை விரும்பினால் அக்குள் கருமைக்கான சில அடிப்படை காரணங்களைத் தீர்க்க நீங்கள் எடுக்கக்கூடிய முதற்படிகளை தொடர்ந்து வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
• உங்கள் டியோட்ரண்ட் அல்லது ஆண்டிபெர்ஸ்பிரண்டை மாற்றவும். வேறு பிராண்டைத் தேடுங்கள்.
• பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற இயற்கையான மாற்று வழிகளை தேடி அடைந்துகொள்ளுங்கள்.

எக்ஸ்போலியேட் (Exfoliant)

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை அக்குளில் மென்மையான ஸ்க்ரப் (scrub) அல்லது எக்ஸ்போலியண்ட் ஒன்றை பயன்படுத்தவும். அக்குள் தோல் மெல்லியதாகவும் மென்மையாகவும் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்போலியண்ட்டை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேஸ் எக்ஸ்போலியண்ட்டையும் பயன்படுத்தலாம்.

  • அக்குள் கருமைக்கு இயற்கை வைத்தியம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கைத் துருவி அரைத்த உருளைக்கிழங்கிலிருந்து சாற்றைப் பிழிந்து அந்தச் சாற்றை உங்கள் அக்குள்களில் தடவவும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.

பால், பண்ணீர் (Rose Water) மற்றும் தோடம்பழத் தோல்

பால், பண்ணீர் (Rose Water) மற்றும் தோடம்பழத் தோல் என்பவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மேசைக்கரண்டி பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி பண்ணீருடன் போதுமான அளவு தூலாக்கிய தோடம்பழத் தோலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட் ஒன்றை உருவாக்குங்கள். பேஸ்ட்டைக் கொண்டு உங்கள் அக்குள்களை மெதுவாக ஸ்க்ரப் செய்து பின்னர் பதினைந்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இதை பின்தொடருங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சையின் கனமான துண்டுகளை வெட்டி அந்தத் துண்டுகளை உங்கள் அக்குள்களில் தேய்க்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் அக்குள்களை குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்திய பின்னர் மாய்ஸ்சரஸ் (Moisturizer) ஒன்றை பயன்படுத்தவும்.

மஞ்சள் மற்றும் எலுமிச்சை

ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாற்றை போதுமான மஞ்சளுடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயாரிக்கவும். பேஸ்ட்டை உங்கள் அக்குள்களில் சம அளவில் தடவவும். முப்பது நிமிடங்களுக்குப் பிறகு பேஸ்ட்டை கழுவவும்.

முட்டையின் மஞ்சள் கரு எண்ணெய்

தூங்குவதற்கு முன்னர் முட்டையின் மஞ்சள் கரு எண்ணெய்யை உங்கள் அக்குள்களில் தடவி மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் உங்கள் அக்குள்களை டிழனல றயளா அல்லது சவர்க்காரத்தினால் கழுவவும்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய். ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் 8 அவுன்ஸ் தண்ணீருடன் 5 துளிகள் தேயிலை எண்ணெயை கலக்கவும். ஒவ்வொரு நாளும் குளித்து உலர்த்திய பிறகு கலவையை உங்கள் அக்குள்களில் தெளிக்கவும். இயற்கையாக உலர விடவும்.

வெள்ளரிகள்

வெள்ளரி என்பது சிறந்த பளிச்சிடும் பண்புகளுடன் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் அதன் வலிமை நிறைந்துள்ளது. சில வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் கருமையான அக்குளில் இரண்டு நிமிடங்களுக்கு தேய்த்துவிட்டு பத்து நிமிடங்கள் வரை காத்திருங்கள். அதன் பின்னர் தண்ணீரில் கழுவவும். நீங்கள் தினமும் முறையாக ஒரு முறை இதைச் செய்தால் அக்குள் சருமத்தின் கருமையை குறைக்க முடியும் என்பதுடன் இது ஒரு சிறந்த தெரிவாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php