அனைத்தையும் நாடி  நீங்கள் பயன்படுத்தும் கைபேசி உங்கள் நண்பனா? எதிரியா?

நீங்கள் பயன்படுத்தும் கைபேசி உங்கள் நண்பனா? எதிரியா?

2022 Mar 1

பண்டைய காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தந்தி, கடிதம்,வானொலி எனப்பல ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டபோதும் இவற்றை தாண்டியும் தகவல் பரிமாற்றத்தை உன்னத வளர்ச்சியடையச் செய்ததுதான் இன்று நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைப்பேசிதான். இயந்திரத்தை மனிதனாக்க மனிதன் இயந்திரமாய் சிந்திக்கிறான். ஒட்டுமொத்த உலகத்தையுமே வெறும் 150 கிராம் பெட்டிக்குள் அடக்கிவிட மனிதனால் இயன்றதென்றால் இவ்வுலகம் சிறியதல்ல. மனிதனின் அறிவு பெரிது என்றே கூறவேண்டும். மனிதன் அறிவால் ஆக்கப்பட்டவைக்கு அழிவென்பது கிடையாது. இதனையே ‘கருவில் பிறக்கும் எல்லாம் மரிக்கும். அறிவில் பிறந்தது மரிப்பதேயில்லை’ என கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அதுபோலத்தான் மனிதன் அறிவில் பிறந்த கைபேசிகளும் மேலும் மேலும் வளர்ச்சியடையுமே தவிர அழியாது.

தொழினுட்பம் வளர்ச்சியடைவது தவறல்ல. ஆனால் தொழினுட்பமே வாழ்க்கையாகிவிடக்கூடாது. நம் தாத்தா பாட்டிகள் வாழ்ந்த அக்காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சி வீதிக்கு ஒரு தொலைபேசியென இருந்துவந்தது. ஆனால் இன்று தொலைக்காட்சியில்லாத வீடுகளுமில்லை. தொலைபேசியைப் பயன்படுத்தா மனிதனும் இல்லை. நீங்கள் கைபேசியை பயன்படுத்தியபோது நாம் ஏனையவர்களுடன் செலவிடும் நேரத்தை காட்டிலும் கைபேசிகளுடனே அதிக நேரத்தை செலவிடுகிறோம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? எதற்கு பயன்படுத்த வேண்டும், எதனை செய்யக்கூடாது என்பதே அறியாமல் அவரவர் சுயவிருப்பின் படி கைபேசியை பயன்படுத்ததொடங்கிவிட்டோம்.

அன்று தகவல் பரிமாற்றத்தில் காதுகேளாதவருக்கும் வாய்பேச இயலாதவருக்கும் ஏதாவது செய்யவேண்டுமென கிரஹம்பெல் சிந்தித்த காரணத்தால் கண்டுபிடிக்கப்பட்ட படைப்பு தான் இந்த தொலைபேசி. ஆனால் இன்று இதன் பாவனையால் மனிதன் கண்கள் இருந்தும் குருடனாய்,காதுகள் இருந்தும் செவிடனாய்,பேசத் தெரிந்தும் ஊமையாய் மாறிவிட்டான். இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறியச்செய்யும் தொலைபேசிதான் இன்று மனிதனுக்கு உற்றநண்பன். ஏனெனில் மனிதன் தன் வாழ்நாளில் அதிக நேரத்தை தொலைபேசிகளுடனே செலவிடுகிறான்.

அழைப்பினை மேற்கொள்ளவும் குறுந்தகவல் பரிமாற்றத்துக்குமே அக்காலத்தில் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்று ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றாற்போல கைபேசியை பயன்படுத்துகின்றனர். காரணம் என்ன தெரியுமா? பட்டுனிலிருந்து ஸ்மார்ட் கைப்பேசிக்கு தொழில்நுட்பம் வளர்ந்தது தான். உண்மையிலயே இந்த பட்டுன் போன் நம்மிடமிருக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லை. தேவைக்கு மட்டுமே பயன்படும். அத்தோடு அழைப்புகளை ஏற்படுத்தவும் குறுஞ்செய்தி அனுப்பவும் முடிவதோடு எவரும் இலகுவாக பயன்படுத்தலாம். விலையும் குறைவு. கீழே விழுந்தாலும் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் இந்த ஸ்மார்ட் போன்கள்; செய்யும் வேலைகள் ஒன்றா இரண்டா? அழைப்புகளில் செவிகளால் கேட்டு நிகழ்ந்த உரையாடல் இப்போது முகம்பார்த்து உரையாடுவதாகிற்று. ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் அதற்கு மறுசெய்தி வர காலதாமதமாகும் நிலை சென்று உடனுக்குடன் கணநேரத்தில் ‘டக் டக்’ என்று குறுஞ்செய்திகள் பகிரப்படுகின்றன. வெறும் 32 ஜி.பி தேக்க அளவை வைத்துக்கொண்டு எக்கச்செக்க செயலிகள் இருக்கும். குறிப்பாக ஸ்மார்ட் போனிலிருந்து பிரசித்தி பெற்ற கெமரா தொழில்நுட்பம் வந்ததால் இடமே நிறைந்து போகுமளவிற்கு புகைப்படங்கள் வேறு. அதிலும் தன் முகத்தை தானே பார்த்த வண்ணம் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தின் மற்றுமொரு எந்திர சிந்தனை தான் செல்பி. அதுவரை பின்னால் இருந்த கெமரா முன்னால் வந்தது தான் இதற்கு காரணம். அதைத்தான் குசழவெ ஊயஅநசய என்று சொல்கிறோம்.சிலர் நல்ல தரமான புகைப்படங்களை எடுப்பதற்காகவே புகைப்படத்திற்கென தயாரிக்கப்படும் கைபேசிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியே வாங்கினாலும் அதில் அழகு செயலிகள் கட்டாயமாக இருக்கும். சிலர் அதற்காகவே ஐந்தாறு செயலிகள் வைத்திருப்பார்கள்.

கைபேசியினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என நாம் எடுத்துக்கொண்டால் தொடர்பாடலுக்கு மிகச்சிறந்த ஊடகமாக கைபேசிகள் திகழ்கின்றன என்று கூறலாம்;. அவசர நிலைகளில் இருக்கும்போது நேரடியாக செல்லாமலே அழைப்பினை ஏற்படுத்திக்கொள்ளமுடியும். அத்தோடு ஒரு நபருடன் கைபேசியில் கதைக்காமலும் கூட எழுத்து,குரல்,புகைப்படம் மற்றும் கானொலிகள் மூலம் தகவலை மிக விரைவில் இலகுவாகப் பரிமாரிக்கொள்ளலாம். கைபேசியினால் அனைவரும் ஏதாவது ஒரு முறையில் ஒன்றோடொன்று தொடர்புபட்ட வண்ணம் இருப்பதால் உலகம் பூகோளமயமாக்கப்பட்டு ஒரு வலையமைப்பு எனும் குடையின் கீழ் அடங்கிவிட்டது.

ஆயினும் தீமைகளும் இதில் அடங்கியுள்ளது. அந்தவகையில் தீமைகளைப் பற்றி பேசும் முன் உங்களிடன் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். நண்பர்களே! நீங்கள் கைபேசியை கட்டுப்படுத்துகிறீர்களா? அல்லது கைபேசி உங்களை கட்டுபடுத்துகிறதா? சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கைபேசி தான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது. உங்களைப் பற்றி நீங்கள் அறிந்ததை விட அதிகமாய் உங்கள் கைப்பேசி அறிந்துகொள்கிறது. நீங்கள் அலைபேசியில் பயன்படுத்தும் ஒவ்வொரு வலைத்தளங்களும் ஒவ்வொரு செயலிகள் உங்களைப்பற்றிய தரவுகளை சேமிக்கிறது. சிலசமயம் நீங்கள் பயன்படுத்தும் கைபேசியே உங்களுக்கு எமனாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி கைபேசி பாவனையால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. பல தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் உட்படுகின்றனர். தவறான அழைப்புகள் தவறான குறுஞ்செய்திகள் போன்ற போலி தகவல்கள் கைபேசிக்கு வந்தடைவதால் சிலசமயங்களில் நாம் ஏமாற்றமடைய ஏற்படவாய்ப்புமுள்ளது. அதுமட்டுமன்றி நம் கைபேசி இதன் மூலம் செய்யப்படுகிறது.

அத்தோடு கைப்பேசியை அதிக மணிநேரம் பயன்படுத்துவது கண்களை சேதமாக்கும். குனிந்த நிலையில் அலைப்பேசியை வெகு நேரம் பயன்படுத்துவது முதுகு தண்டு மற்றும் பின்புற கழுத்துப்பகுதிக்கு அபாயம் விளைவிக்கின்றது. அதுமட்டுமா? கைபேசி கையிலிருந்தால் தூக்கம் வராது சிலருக்கு பசியே வராது. ஆகவே இக் கைபேசிகள் உளத்தையும் உடலையும் பாதிக்கின்றன என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நீங்கள் கண்களால் பார்க்கும் காதால் கேட்கும் சமூக சீர்கேடுகளெல்லாம் பெரும்பாலும் அலைபேசி பாவணையால்தான் நிகழ்கிறது. அதிலும் சிறுவர்கள் தற்காலங்களில் பெரும்பாலும் கைபேசிகளில் விளையாடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.அதற்கு பெயர் போனது தான் சிறுவர்கள் விளையாடும் குசநந குசைந விளையாட்டு.இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இவ் விளையாட்டினால் நிறைய சிறுவர்களின் வாழக்கை சீர்கேடாகியுள்ளமையை நாங்கள் செய்திகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது பழமொழி. ஆனால் இப்போதுள்ள குழந்தை கைபேசியை பார்த்தால் தான் அழுகையையே நிறுத்துகின்றது. நீங்கள் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகள் அதனைப் பார்த்து கைபேசியை பயன்படுத்த பழகிவிடுவார்கள். ஆகவே இவை குறித்து கவனம் செலுத்துங்கள். உங்களைப் பார்த்தே அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்கின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆகவே பாலும் நீரும் சேர்ந்திருக்க வேறுபிரித்தறிந்து பாலை உண்ணும் அன்னப்பட்சிப்போலவே மனிதர்களாகிய நாமும் நல்லன எது தீயன எதுவென அறிந்து செயலாற்றுவது சிறப்பு. நன்மைக்காக மட்டும் கைபேசியை பயன்படுத்தினோமானால் பயனைப் பெறலாம். ஆகவே கைபேசி பாவனையாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் தீயவற்றை ஒதுக்கி நல்ல விடயத்திற்கு மட்டும் பயன்படுத்துவோமாக…

சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php