2022 Mar 7
வானிலே செல்லும் விமானங்களை கீழிருந்து பார்க்கும்போது நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் அந்த விமானத்தை ஓட்டும் விமானிகள், அதில் பணிபுரியும் ஊழியர்கள்,பயணிக்கும் சாரதிகளுக்கும் எப்படியிருக்கும் என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?அதுவும் ஆபத்துகள் எப்போது எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது. விமானப் பயணம் விரிவடைந்து, விமானங்களின் சுமந்து செல்கையில் விமானத்தின் திறன் அதிகரித்ததால், விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்தன. நடைபெற்ற ஒவ்வொரு பேரழிவும் விமானப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய மேம்பாடுகள் மற்றும் தரநிலைப்படுத்தல்களுக்கு வழிவகுத்து இயன்றளவு எதிர்காலத்தில் இவ்வாறு நடக்கக்கூடாதென்பதற்கான புதிய மாற்றங்களை உருவாக்கியது. இயந்திரக் கோளாறு, மனிதனின் தவறு அல்லது தட்பவெப்ப நிலை ஆகியவற்றால் நடந்த 10 பயங்கரமான விமான விபத்துக்களை தெரிந்துகொள்வோம்.
டெனெரிப் விமான நிலைய பேரழிவு -Tenerife Airport Disaster (1977)
1977 மார்ச் 27 இல் ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா விமான நிலையத்தில் தொடர்ச்சியாக வெடித்த விமான விபத்தானது விமான வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பயங்கரமான விமான தாக்குதலிற்கு பின் பல விமானங்கள் டெனெரிப் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. KLM விமானம் 4805 மற்றும் Pan Am Flight 1736 ஆகிய இரு விமானங்களும் விபத்துக்குள்ளாகின. அடர்ந்த மூடுபனி, தரையில் ரேடார் இன்மை மற்றும் தவறான தகவல்தொடர்பு ஆகியவற்றின் விளைவாக, இரண்டு Boeing 7747 விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இந்த இரண்டு விமானங்களும் விபத்துக்குள்ளாகியதான் அதிலிந்த இருந்த 583 பயணிகளின் உயிர்களைக் கொன்றது, அதில் Pan Am விமானத்தில் இருந்து 61 பயணிகள் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 (1985) – Japan Airlines Flight 123 (1985)
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 இன் விபத்தானது விமான விபத்துக்கள் பதிவுகளிலும் வராலாறுகளிலும் இன்று வரை பேசப்படும் மிகவும் பயங்கரமான விபத்தாகும். 524 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 747 விமானமானது டோக்கியோவின் வடமேற்கில் உள்ள தகமகஹாரா மலையில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த பணியாளர்கள், பயனாளிகள் என பலரும் இறந்தனர். டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஒசாகா நோக்கி பயணித்திக்கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட 12 நிமிடங்களில், நினைத்துப் பார்க்க முடியாததொன்று நிகழ்ந்தது. அழுத்தம் குறைந்து விமானம் வெடிக்கும் நிலைக்குச்சென்றது. இதன் விளைவாக சுக்கான் மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகளின் செயலிழந்து விமானத்தை கட்டுப்படுத்தும் நிலை விமானி;க்கு கைமீறிப்போனது. இருப்பினும் குழுவினர் எப்படியாவது போராடி ,சரியாக அரை மணி நேரம் விமானத்தை காற்றில் பறக்கவைத்தனர். ஆனாலும் இந்த முயற்சி முடிவையே ஏற்படுத்தியது. இறுதியாக ஒரு மலைப்பாதையில் மோதி பயனாளிகளளுல் 520 இறந்ததாகவும் நான்கு பேர் 4 பேர் உயிர்தப்பிப்பிழைத்தனர் எனவும் தகவல்கள் வெளியடப்பட்டன.
சர்க்கி தாத்ரியில் நடுவானில் விமானங்கள் மோதல் (1996) – Charkhi Dadri Mid-Air Collision (1996)
சர்க்கி தாத்ரி என்பது புது டில்லியின் மேற்கில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். வானில் நடந்த மிகப்பெரும் பேரழிவின் காரணமாகவே இந்த ஊர் பிரபலமானது. சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் 763 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் 1907 ஆகியவை சர்க்கி தாத்ரியின் நடுவானில் மோதிக்கொண்டன. மிகவும் மோசமான பேரழிவாக இன்றும் இந்த நிகழ்வு அந்த கிராமத்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பேசப்படுகின்றது. புதுடில்லியில் இருந்து சவுதிஅரேபியாவின் விமானம் புறப்பட்ட உடனேயே, கஜகஸ்தான் விமானம் அதன் வருகைக்கு தயாராகிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டது. கஜகஸ்தான் விமானிகளின் ஆங்கிலத் தொடர்புத் திறன் குறைவாக இருந்ததாலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாம் நிலை கண்காணிப்பு ரேடார் இல்லாததாலும், விமானப் பாதைகளை விட்டு விலகி விமானிகளால் மோதலைத் தவிர்க்க முடியாமல் போனது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த 349 பேரும் மரணமடைந்தனர்.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 981 (1974)
வடிவமைப்புக் குறைபாடு மற்றும் ஆங்கிலம் மற்றும் துருக்கிய மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை விமானத்தை தயார்படுத்தும் moroccan baggage handlers சரியாகப் படித்துப் புரிந்து கொள்ளத் தவறியதால் பாரிஸில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 981 பாரிய விபத்திற்குள்ளானது. இதன் விளைவாக பின்புறம் அமைந்திருக்கும் சரக்குகளை களஞ்சியப்படுத்தும் ஹட்ச் விமானத்தின் நடுப்பகுதியில் திறக்கப்பட்டது. இது மிக வேகமாக அழுத்தத்தை குறைத்து கேபிள்களை துண்டித்தது. இனால் விமானிகளுக்கும், விமானத்திற்கிடையேயும் இருந்த கட்டுப்பாடு தளர்வுற்றது. McDonnell Douglas DC-10 விமானது, பிரான்சின் பாரிஸுக்கு சற்று வெளியே உள்ள ஹேர்மோன்வில்லே எனும் காட்டில் விழுந்து, சேதமாகியது. விமானத்திற்குள் இருந்த 346 பேர் இறந்தனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 191 (1979)
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 191 இன் விபத்தானது அமெரிக்காவின் மிக மோசமான விமான விபத்தாக இன்றும் பேசப்படுவதாகும். மேலும் இது மெக்டோனல் டக்ளஸ் DC-10 விமானத்திற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் இடது இறக்கையிலிருந்து எஞ்ஜின் ஒன்று விமானத்திலிருந்து பிரிந்து, இறக்கையின் மேற்பகுதி கவிழ்ந்ததனாலேயே இந்த பேரழிவு நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான விமானம் மிக வேகமாக உருண்டு அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. விமானப் பணியாளர்கள் பின்பற்றிய தவறான பராமரிப்பு நடைமுறைகளினாலேயே இந்த பேரழிவு ஏற்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. தரையில் இருந்த 2 பேருட்பட விமானத்தில் பயணித்த 273 பேரும் இவ் விபத்திற்கு பலியாகினர்.
ஏர் இந்தியா விமானம் 855 (1978)
1978 புத்தாண்டு தினத்தன்று, ஏர் இந்தியா விமானம் 855 மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டுக்கொண்டிருந்தது. 1971 இல் ஏர் இந்தியாவினால் முதன்முதலில் வாங்கப்பட்ட 747 விமானம் பயன்படுத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, விமானம் அதிக தூரம் பயணிக்கவில்லையென்றே கூறவேண்டும். மும்பையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடலில் இருள் சூழ்ந்திருப்பதால், இடஞ்சார்ந்த திசைதிருப்பல் மற்றும் AL கருவியின் அளவீடுகளை அடிவானத்துடன் சரிபார்க்க இயலாமை, உபகரணச் செயலிழப்பு மற்றும் பணியாளர்கள் சரியான முறையில் பதிலளிக்கத் தவறியது என போன்றவற்றின் விளைவாகவே ,இந்த பேரழிவு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது இந்த விமானத்தில் இருந்த 213 பேரும் உயிரிழந்துள்ளனர். இது இந்தியப் பகுதியில் நடந்த இரண்டாவது மிக மோசமான விமான விபத்து இதுவாகும்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 (2010)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 இந்திய மண்ணில் நிகழ்ந்த மூன்றாவது மிக மோசமான விமான விபத்தொன்றாகும். அட்டவணையின் டோப்பிலுள்ள ஓடுபாதைகளைக் கொண்ட நாட்டில் உள்ள மூன்று விமான நிலையங்களில் மங்களூர் விமான நிலையமும் ஒன்றாகும். அதாவது மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக இதன் ஓடுபாதையின் நீளம் குறைவானதாகும். விமானங்கள் தரையிறங்குவதற்கு மிகவும் துல்லியமான மற்றும் கூடிய விழிப்புணர்வு தேவை காரணம் இதன் பாதையின் ஒரு முனையில் பள்ளத்தாக்கு உள்ளது. துபாயில் இருந்து மங்கள10ரு நோக்கி பயணித்த விமானம் துரதிர்ஷ்டவசமாக தரையிறங்குவதைத் தவறாகக் கணக்கிட்ட விமானியின் தவறால் வழக்கமான தரையிறங்கும் புள்ளியைத் கடந்து தரையிறக்கப்பட்டதால் விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று குன்றின் மீது விழுந்து சிதைவுக்குள்ளாகி தீப்பிடித்தது. இவ் விபத்திலிருந்து 8 பேர் மட்டுமே உயிர்தப்பியதுடன் 158 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 587 (2001)
அமெரிக்காவில் நடந்த இரண்டாவது மோசமான விமான விபத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 587 விபத்துதான். இந்த விமானம் நியூயார்க் நகரத்தில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் மற்றும் டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையே பயணிக்கும் பொது விமானமாகும். 9/11 விமான தாக்குதல்கள் நடந்த சில மாதங்களிலேயே இந்த விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானமை பயங்கரவாத சந்தேகங்களை எழுப்பியது. ஆனாலும் விமானத்தை செலுத்திய விமானியின் தவறின் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புறப்பட்டுக்கொண்டிருக்கும் விமானத்தின் சுக்கான் அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக, செங்குத்து நிலைப்படுத்தியானது விமானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. மேலும் விமானம் தரையில் விழுவதற்கு சற்று முன்பு எஞ்ஜின்களும் பிரிந்தன. இந்த விமானம் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியதோடு விமானத்தில் இருந்த 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 (2014)
மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் காணாமல் போனது 2014 இல் உலகையே ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 2014 மார்ச் 8 ஆம் திகதி அன்று வானில் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது. சரியாக விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த வேளை எந்த எச்சரிக்கையும் இல்லாமல்,எந்தவொரு பிரச்சனையும் இல்லாதவிடத்து திடீரென்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அனைத்து தொடர்புகளையும் இழந்தது.தெற்கு இந்திய சமுத்திரத்தின் பல்வேறு நாடுகளால் விரிவான தேடுதல்கள் நடத்தப்பட்ட போதிலும், ஜூலை 2015 இல், முக்கிய தேடல் தளத்திலிருந்து சுமார் 3,700 Km தொலைவில் உள்ள ரீயூனியன் தீவில் விமானத்தின் இறக்கையிலுள்ள ஒரு பிளாபரான் கண்டறியப்படும் வரையில் விமானத்தின் எந்த தடயமும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த முயற்சிக்காக ஒரு சில மாதங்களுக்குள்ளேயே அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டன. விமானம் அறியப்படாத காரணங்களுக்காக பாதையை மாற்றியது மற்றும் எரிபொருள் தீரும் வரை அதன் பயணம் தொடர்ந்திருக்கும் என்பது நிபுணர்களின் கூற்று. மர்மமான முறையில் காணாமல் போன இந்த விமானத்தில் பயணித்த 239 பேரும் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.
சீனா ஏர்லைன்ஸ் விமானம் 140 (1994)
சீனா ஏர்லைன்ஸ் விமானம் 140, தைவானில் உள்ள தைபேயின் சியாங் காய்-ஷேக் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜப்பானின் நகோயாவின் நகோயா விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையே பயணிக்கும் விமானமாகும். 1994 ஏப்ரல் 26 அன்று எதிர்பாராதவிதமாக ஏர்பஸ் A300B4-622R நகோயாவில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பு, விமானத்தில் இருந்த முதல் அதிகாரி கவனக்குறைவாக TO/GA (Takeoff/Go-Around) பொத்தானை இயக்கியபோது, விமானிகளின் கட்டுப்பாட்டை முறியடித்து தன்னியக்கமாக செயல்பட்ட விமானம் கூர்மையாக காற்றின் வேகம் குறைந்ததால் ஸ்தம்பித்து போனது. விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் மரணித்தனர். இது சீனா ஏர்லைன்ஸின் மிக மோசமான விமான விபத்தாகவும் ஜப்பானிய மண்ணில் இரண்டாவது மோசமான விபத்தாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த கால தசாப்தங்களிக் வரலாற்றில் மிக மோசமான விமான விபத்துக்களை பற்றி நாங்கள் அறிந்துகொண்டோம். இதுபோன்ற விமான விபத்துகளால் ஏற்படும் மனித செலவை அளவிட முடியாது என்றாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் விமான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது என்பது நிச்சயம் உண்மை. ஆகையாலே தற்காலங்களில் இது போன்ற விமான விபத்துகள் நடைபெறுவது மிகவும் அரிதானதொன்றாக பார்க்கப்படுகிறது. இன்று நம் அனைவருக்கும் விமானப் பயணம் பாதுகாப்பாகவே உள்ளது.