கலை கலாசாரத்தை நாடி இலங்கையின் புனித சொத்தான ‘நடுங்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

இலங்கையின் புனித சொத்தான ‘நடுங்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

2022 Mar 8

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக தடவைகள் சுமந்து சென்ற ‘நடுங்கமுவ ராஜா’ என்ற யானை தனது 69 ஆவது வயதில் நேற்று காலை உயிரிழந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பிரதாயமான யானை காலமானதைத் தொடர்ந்து நடுங்கமுவ ராஜா யானையை தேசிய பொக்கிஷமாக பிரகடனம் செய்தார்.

அரச தலைவர் புத்தசாசன, மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக யானையின் சடலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஆணை வெளியிட்டுள்ளது. கம்பஹா வெலிவேரியவில் உள்ள நெடுங்கமுவையில் யானை வாழ்ந்ததாக தேசிய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

நடுங்காமுவா ராஜா என்பது இலங்கையின் மிக உயரமான அடக்கப்பட்ட யானை ஆகும். 10.5 அடி (3.2 மீட்டர்) உயரம் கொண்ட பிரபலமான யானையாகவும் இந்த யானை கருதப்படுகின்றது. மேலும் சுமார் 12 வருடங்களாக கண்டி எசல பெரஹெராவில் புனித பல்லக்குக் கலசத்தை சுமந்து சென்றதன் மூலம் நாட்டின் புனிதமான சொத்துக்களில் ஒன்றாக இந்த யானை கருதப்படுகின்றது.

நடுங்கமுவ ராஜா என்ற யானை 1953 ஆம் ஆண்டில் இந்தியாவின் மைசூர் பகுதியில் பிறந்தது. பிலியந்தலையில் உள்ள நிலம்மஹர விகாரையின் மூத்த பௌத்த துறவியாக இருந்த ஆயர்வேத மருத்துவருக்கு மைசூர் மஹாராஹாவினால் பரிசாக வழங்கப்பட்ட யானைக்குட்டிதான் இந்த நடுகமுவ ராஜாவாகும். மைசூர் மஹாராஜாவின் உறவினர் ஒருவரின் நீண்டகால நோயினை குறித்த துறவி மருத்துவர் குணமாக்கியதற்காக அன்பளிப்பாகவே குறித்த யானை பரிசாக வழங்கப்பட்டது.

1978 இல் யானைக்கு 25 வயதாக இருக்கும்போது றேர்பத் விக்ரமசிங்க என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடுங்கமுவ ராஜாவை 75000 இலங்கை ரூபாய்கள் கொடுத்து வாங்கினார். றளஹமி என்ற ஆயர்வேத மருத்துவர் நடுங்கமுவ ராஜா யானையை பராமரித்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக நடுங்கமுவ ராஜாவை ஹர்ஷ தர்மவிஜய என்ற அவரது மகன் பராமரித்து வந்தார். அதன் பின்னர் சீமன் சோமா சிமொன் மற்றும் கலு மாமா ஆகியோர் பராமரித்து வந்தார்கள்.

இந்த கம்பீரமான யானை தீவு முழுவதும் சமய திருவிழாக்களில் கலந்துகொள்வதற்காக பிரதான வீதிகளில் வலம் வருவதால், அந்த யானைக்கு பாதுகாப்பு வழங்கவென அரசாங்கம் துருப்புக்களைக் கூட ஒதுக்கியிருந்தது. அந்த வகையில் தனக்கென சொந்த ஆயுதமேந்திய காவலர்களைக் கொண்டிருந்த விலங்கு என்ற பெறுமையையும் இந்த யானை கொண்டுள்ளது. இந்த யானையுடன் இரண்டு வழக்கமான காவலர்கள்; எப்போதும் கூடவே இருப்பார்கள். மேலும் விலங்குகள் நெரிசலான நாட்டுப்புறச் சாலைகளில் செல்லும்போது அதற்கான பாதையைத் சீராக்குவதற்கு என்று வேறாக காவல் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள்.

கண்டியில் உள்ள மிகவும் புனித தளதா மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெராவின் புனித நினைவுச்சின்ன கலசத்தை எடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட சில யானைகளில் இந்த யானையும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற தேசிய பொக்கிஷமாக இருந்தார். எசல பெரஹெரா நிகழ்விற்காக கண்டி நகருக்குள் 90 கிலோமீற்றர் தூரம் இந்த யானை நடந்து செல்லும். இரவில் குளிர்காலத்தில் இந்த யானை இவ்வாறு நடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php