அனைத்தையும் நாடி  இலங்கையில் செல்லப் பிராணிகளுடன் தங்குவதற்கான இடங்கள்

இலங்கையில் செல்லப் பிராணிகளுடன் தங்குவதற்கான இடங்கள்

2022 May 31

செல்லபிராணிகளை வளர்ப்பது என்பது அவற்றுக்கு உணவளிப்பதற்கும் அப்பால் அவற்றுடனான நல்ல பிணைப்பை உருவாக்குவதுமாகும். அவ்வாறு ஏற்படும் பிணைப்பினால் தமது உரிமையாளர்களின் சிறு பிரிவினையும் அவற்றால் தாங்க முடியாதளவு மன அழுத்ததிற்கு ஆளாகி விடும். அது நம்முள்ளும் ஒரு வகையான அழுத்தத்தை கொடுக்கும்.

உங்களது செல்லபிராணிகள் இல்லாமல் உங்களுடைய வெகேஷனுக்கான திட்டங்களை உருவாக்குவது உங்களுக்குள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தான் இலங்கையிலுள்ள  செல்லபிராணிகளை அனுமதிக்க கூடிய ஹோட்டல்களின் பட்டியலை தயாரித்துள்ளோம்.

கொழும்பு ஹில்டன்

கொழும்பில் வசிப்பவர்களுக்கு ஹில்டன் ஹோட்டல் புதியதல்ல. அதன் பிரமாண்ட  ‘H’ என்ற அமைப்பு இதனை கண்டறிவதற்கான லேன்ட் மார்க்காக உள்ளது. இந்த ஹோட்டல் உங்களது செல்லபிராணிகளையும் அனுமதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? இனி நீங்கள் செல்லும் போது உங்கள் செல்லபிராணிகளையும் அழைத்து செல்லுங்கள்.

இடம் – 200, யூனியன் ப்ளேஸ், கொழும்பு 02

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு – 011 534 4644

 Foozoo Mantra – Lake Gardens

றோயல் கொழும்பு கோல்ப் க்ளப்பிற்க்கு அருகாமையில் அமைந்துள்ள Foozoo ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸாகும். இது உங்களது விடுமுறை காலத்தினை தனித்துவமான அனுபவத்தினால் நிரப்பும்.

இடம் – 40/12, லேக் கார்டன்ஸ் ஓப் லேக் ட்ரைவ், கொழும்பு 08

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு – 076 044 5030

Plumeria Luxury Villas – Udawalawa

இந்த வில்லா உடவலவ தேசிய பூங்காவில் இருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் வசதிகளுடன் கூடிய அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

இடம் – 194/3, மத்யம அதோலுவ, உடவலவ

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு – 076 305 0918

O2 Villas – Weligama

உங்களுடைய செல்லபிராணிகளுடன் பொழுதினை கழிப்பதற்கான அழகிய மற்றும் பெருமூச்சிழைக்க வைக்கும் அழகிய சூழலுடையது. இங்குள்ள பர்பிக்யூ வசதிகளுடன் கூடிய தோட்டம் மற்றும் மொட்டைமாடி ஆகியன இரண்டு வேறுபட்ட உணர்வுகளை பெற்றுத் தரும்.

இடம் – கால்டரம வத்த, வெலிகம

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு –  077 729 6051

Roseland Cottages – Bandarawela

அழகிய மலைக்காட்சிகள் சூழப்பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு அற்புதமான உணவகம் மற்றும் சிறப்பான அறை சேவையுடன் உங்கள் செல்லபிராணிகளை அழைத்து செல்வதற்கான அனுமதியும் உண்டு.

இடம் – ரோஸ்லேன்ட் எஸ்டேட், அம்பதண்டேகம, பண்டாரவளை

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு –  077 333 0950

Beach Wave Hotel – Arugam Bay

அருகம் பே சர்ப் பொயிண்டிற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் நீங்களும் உங்கள் செல்லப்பிராணியும் இணைந்து கடற்கரை அழகில் உங்களது விடுமுறை நாட்களை சிறப்பானதாக கழிக்க முடியும்.

இடம் – வாட்டர் மியூசிக் வீதி, சின்ன உல்லை, அருகம் பே

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு – 075 273 3380

Highbury Colombo

கொழும்பின் ஹஸ்டல் மற்றும் பஸ்டலை நீங்கள் இழக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கான சிறந்த தெரிவாக கொழும்பின் மத்தியில் அமைந்துள்ள ஹைபரி இருக்கும். இங்கு நீங்கள் உங்களது செல்லபிராணிகளையும் அழைத்து செல்லலாம்.

இடம் – 14, ஸ்கெலிடன் வீதி, கொழும்பு 03

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – USD 10

தொடர்புகளுக்கு – 077 436 6273

Dots Bay House – Dikwella

இங்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல தரப்பட்ட வசதிகளை நீங்களும் உங்கள் செல்லபிராணிகளும் இணைந்து என்ஜோய் செய்யலாம்.

இடம் – ஹிரிகிட்டிய கடற்கரை, திக்வெல்ல

செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை

தொடர்புகளுக்கு – 077 770 0926

உங்களுடைய ப்ரி நண்பனும் நீங்களும் சேர்ந்து விடுமுறை நாட்களை கழிக்கக்கூடிய இடங்கள் பற்றிய பட்டியலில் நாங்கள் ஏதேனும் இடத்தினை குறிப்பிடாதிருந்தால் கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here