அனைத்தையும் நாடி  இம்மாதம் முதல் Pick Me சேவை யாழ்ப்பாணத்தில்

இம்மாதம் முதல் Pick Me சேவை யாழ்ப்பாணத்தில்

2023 Aug 3

மிக நீண்ட சாலைகளை இணைக்கும் போக்குவரத்து சாதனம் ” pick me “. கூப்பிட்ட குரலுக்கு வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் , பிக்கப் & ட்ரோப் என்கிற இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான முழு முகவரியையும் விரிவாய்த் தரும் google map ,சொந்தக் காசை முதலீடாக்கி ,ஆட்டோ அல்லது கார் வாங்கி நம்மை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுனர்கள் !

ஆம் , பேரூந்துக்கட்டண உயர்வு , அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்கள் , குறித்த நேரத்தில் அவற்றை பயன்படுத்தமுடியாமை போன்ற காரணங்களால் pick me மீது மக்களின் பார்வை திரும்பி சில காலமாயிற்று என்றேகூட சொல்லலாம் .வெகுஜன மக்களின் பயணநேரம் , இருக்கை வசதி , Ac உற்பட அனைத்தையும் கொடுத்து குறைந்த கட்டணத்தில் வாருங்கள் பயணிப்போம் என வரிசை கட்டி நிற்பதுடன் , மக்களும் அந்த சௌகரியங்களை விரும்புவதால் இந்த Pick me செயலியானது இன்று அநேகரது கையடக்கத் தொலைபேசிகளிலும் இடம்பிடித்திருக்கும் ஓர் முக்கிய செயலி என்றாலும் மிகையில்லை
.
Pick Me செயலியின் செயற்பாடானது இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் காணப்பட்டபோதிலும் , யாழ்ப்பாணத்தில் இம்மாதம் முதலே ( ஓகஸ்ட் முதலாம் திகதி) வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என Pick Me செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார் . மேலும் இவரது கூற்றின்படி ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து இதற்கான பரிட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் , அதற்கான உரிய வரவேற்பானது கிடைக்கப்பெறாமையினால் , இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பல நல்ல திட்டங்களை உள்ளடக்கியவகையில் இம்மாதம் முதல் Pick Me செயலியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என மிகவும் மகிழ்ச்சியுடனும் , ஆர்வத்துடனும் எம்மோடு கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தார் .

முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகள் தங்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துபவர் என்றால், குறித்த செயலி மூலம் இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும் எனக்கூறும் தவதீஸன்,
பதிவு செய்துகொள்வதற்காக வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கம் , கரை பக்கம் மற்றும் உற்புறம் தெளிவாகத் தெரியும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் , தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன வரி பத்திரம், வாகன காப்புறுதி பத்திர புகைப்படம், சாரதியின் புகைப்படம் போன்றவற்றை வட்ஸப் (WhatsApp) மூலம் அனுப்பிவைக்கப்படும்போது , அவை நிறுவனத்தினால் உரியமுறையில் பதிவேற்றப்பட்ட பின்னர் சாரதிகளுக்கு ஒரு செயலி வழங்கப்படும். அதில் அவர்களுக்கான இரகசிய குறியீட்டின் மூலம் ஒன்லைனில் இருந்தால் போதும். ஓட்டுனர்கள் தங்களுக்கான சவாரி கிடைக்கும் வரையில் பாதையோரம் காத்திருக்கவேண்டிய தேவையும்கூட இனியிராது , அவர்களது வீட்டில் இருந்தவாறே செயலியின்மூலம் சவாரி கிடைக்கும்போது கடமைக்கு சென்றால் போதுமானதாக இருக்கும் . அதுமட்டுமன்றி வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு மேலதிகமான வருமானமாகவும் நிச்சயம் இருக்கும் .
பொதுமக்கள்,வாடிக்கையாளர்கள் சாரதிகளிடம் தாம் செல்லவேண்டிய இடத்தை செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் .
(சாரதிகள் வாகனங்களை பதிந்துகொள்ள 0774737737,
070 374 4444 இலக்கம் மூலமும் வட்ஸப் மூலமும் தொடர்புகொள்ளலாம்)

சாரதிகளாக கடமையாற்ற முன்வருபவர்களுக்கு pick me நிறுவனத்தின் மூலம் பல சலுகைகள் வழங்கப்படும் எனக்கூறும் தவதீஸன் , தினசரி நிரந்தர வருமானம் என்பது இந்த செயலியினால் நிச்சயம் கிடைக்கும் என்பதுடன் , கடமையில் இருக்கும் ஓட்டுநர் விபத்தினால் இறந்தாலோ அல்லது நிரந்தர உடல் ஊனம் ஏதேனும் ஏற்படுமாயின் நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படும் அதேவேளையில் , விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு ஓட்டுநருக்கான தினசரி காப்பீடாக ரூபாய் மூவாயிரம் ( மொத்த மருத்துவ காப்பீட்டுத்தொகை ரூபாய் முப்பதாயிரம் ) வழங்கப்படும் .
ஆட்டோவிற்காக காத்திருந்து , பேரம் பேசி செல்லவேண்டிய தேவையோ அல்லது குறிப்பிட்ட தூரத்தை கடந்த பின்னர் இவ்வளவு வேண்டும் அல்லது இவ்வளவுதான் கொடுப்போம் என்கிற ஓட்டுனர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான முரண்பாடோ இனி ஏற்படப்போவதில்லை pick me செயலியினால் . வழமையாக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகப்படியாக கொடுக்கவேண்டியிருக்கும் நிலமையில் , pick me பயன்பாடானது நுகர்வோருக்கு மிக குறைந்த செலவில் சேவையினை வழங்கக்கூடிய ஓன்று என்பதுடன் , பாதுகாப்பு என்பது இந்த செயலியின் மூலம் நூறுவீதம் உறுதிப்படுத்தப்பட்டது . இந்த செயலியில் உள்ள SOS button GSP சிஸ்டம் மூலம் வாடிக்கையாளர்களது பாதுகாப்பு மட்டுமன்றி ஓட்டுனர்களது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது விசேடமான ஓன்று .

எழுத்து : பிரியா ராமநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php