நாடி Review IFFKவில் திரையிடப்படும் இலங்கையின் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’

IFFKவில் திரையிடப்படும் இலங்கையின் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’

2023 Aug 3


International Documentary & Short Film Festival of Kerala என்பது இந்தியாவின் கேரளாவில் நடக்கும் ஓர் முக்கியமான திரைப்படவிழா ஆகும். இந்த திரைப்படவிழா கடந்த பதினைந்து ஆண்டுகளாக கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதோடு, International Film Festival of Kerala (IFFK) திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக குறும்படம் மற்றும் ஆவண படத்துக்கு என்றும் விருதுகள் வழங்கப்படும். International Film Festival of Kerala (IFFK) என்பது இந்தியாவில் இருபத்தேழு ஆண்டுகளாக நடைபெறும் இரண்டாவது முக்கியமான ஒரு திரைப்பட விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடந்த IFFKவில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த, உலக சினிமாவில் மிக முக்கிய பங்கு ஆற்றிய பேலா டார் (Bela Tarr) கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

International Documentary & Short Film Festival of Keralaவில் வெவ்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றன. அதில் சர்வதேச பகுதி (International Section) என்பது இந்தியா அல்லாத மற்றைய நாட்டு குறும்படங்கள் கலந்து கொள்ளும் பகுதியாகும். இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக “எல்லையற்று விரிகிறதோர் இரவு” என்கிற குறும்படமும் தெரிவாகியுள்ளது.
இக் குறும்படத்தை முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இந்த குறும்படம் மிக சொற்பமான பொருட்செலவுடன், சில நண்பர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டது. எதிர்வரும் ஆகஸ்ட் நான்காம் திகதி கேரளாவில் உள்ள KAIRALI SREE NILA திரையங்கில், காலை பதினொரு மணிக்கு International Documentary & Short Film Festival of Kerala சார்பில் திரையிடப்பட இருக்கிறது.

Director – வேல்ராஜா சோபன்இந்த குறும்படம் வேலை முடிந்து இரவில் கணவனுக்காக வீதியில் காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் மனதளவிலான பாதிப்புகள் பற்றியது. இந்த குறும்படத்தில் இராசையா லோகாநந்தன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முக்கிய காதாபாத்திரங்களாக நடித்து இருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குனர் மற்றும் இணை எழுத்தாளராக புவனேஷ்வரன் பிரஷாந்த என்பவரும், இரண்டாவது உதவி இயக்குனாராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் மற்றும் கிரிஷாந் ஆகியோரும், Foley & Sound Mix புவனேந்திரன் பிரணவனும், கள ஒலிப்பதிவை வாகீசனும் செய்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் பல படைப்புகள் இலங்கையில் வெளிவந்த வண்ணமாய் இருந்தாலும், சர்வதேச அளவில் எமது மண்ணின் படைப்புகளை கொண்டு சேர்த்த “எல்லையற்று விரிகிறதோர் இரவு” (A NIGHT EXPANDS INTO THE INFINITE) திரைப்பட குழுவுக்கு நாடியின் வாழ்த்துக்கள்!

Source – Priya Ramanathan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php