2021 Mar 18
உலகளாவிய ரீதியில் கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக.அங்கீகரிக்கப்பட்டாலும், சில நாடுகளில் கேனபிஸ் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 50000 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேனபிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் வழமையாக 25000 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இலங்கையின் சிறைச்சாலைக் கைதிகளின் மொத்த தொகையில் 60% போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மரிஜுவானாவின் வரலாறு
இலங்கையில் ஆயுர்வேதம் என்பது மிகவும் பழமை வாய்ந்த, முக்கியத்துவம் மிக்க அங்கமாகும். இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேத மருத்துவமானது பரவலாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைவாக கேனபிஸ் தாவரமானது இம் மருத்துவத்துறையின் மூலகப் பொருட்களின் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
அதேவேளையில் இத் தாவரத்திற்கு வெவ்வேறு.பெயர்கள் சிங்கள மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகின்றது. அதே வேளையில் மரிஜுவானா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாவனையில் காணப்பட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. மேலும் பெங்கமுவெ நாளக தேரர் அவர்கள் புனித புத்தர் கூட பல்வேறு மருத்துவ நலன்களுக்காக உபயோகித்தார் என்று உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இக் கூற்றினை ஸ்தாபனத்தின் செயலாளர் Dr. Anil Jayaweera மற்றும் Dr. Sarath Kotteyawatte ஆகியோர் காப்புப் பிரதியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் கேனபிஸ் தாவரமானது மருத்துவ மூலப்பொருளாக பல்வேறு நூற்றாண்டுகளாக உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆயினும் காலனித்துவ ஆட்சி.காலங்களிலே கேனபிஸ் தடை செய்யப்பட்டு, மேலத்தைய மருத்துவ பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலத்தேய மருத்துவப் பொருட்களை விருத்தி செய்யவே கேனபிஸ் போன்ற பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தடை செய்யப்பட்டன.
இலங்கையை பொருத்த வரையில் கேனபிஸிற்கு மிகவும் பெருமதிக்க வரலாறு உண்டு. அதற்கமைவாக கேனபிஸ் தாவர பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் இத் தருணத்தில் கேனபிஸ் பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய சட்ட நிலவரக் கோர்வை
The Poisons, Opium and dangerous Drugs Act
போதைப் பொருள் தடுப்பு சட்டத்திற்கு அமைவாக எந்தவொரு நபரும் கேனபிஸ் வாங்குதல், விநியோகித்தல் மற்றும் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், மேலும் கேனபிஸ் தாவரத்தினூடாக கஞ்சா உற்பத்தி போன்றவை இலங்கையில் சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. ஆகவே கேனபிஸ் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதோ, அதன் தயாரிப்பில் பங்கு கொள்வதோ சட்ட விரோதமாகும். எனினும் மருத்துவ ரீதியாக இதன் பயிர்ச் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் கடுமையான சட்டங்கள் இதற்கு எதிராக கடைப்பிடிக்கப்படுகிறது. 5 kg இற்கு குறைவாக ஒருவரிடம் மரிஜுவானா காணப்பட்டால், அது சிறு குற்றமாக கருத்தில் கொள்ளப்படும். இதற்காக சிறு அளவிலான தண்டப் பணமும் அதே வேளையில் குறுகிய கால சிறை தண்டனையும் வழங்கப்படும். அதேவேளையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு மேலதிகமாக ஒருவரிடம் காணப்படுமாயின் அதிக தண்டப் பணமும் நீண்ட கால கடுஞ்சிறையும் வழங்கப்படும்.
மேலும் பாதுகாப்புச் செயலாளரின் நடவடிக்கையின் அடிப்படையில் 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ‘அண்ணளவாக இலங்கையின் போதைப் பொருள் பாவிப்போரின் எண்ணிக்கை 600,000 னை கடந்துள்ளது. இது இலங்கையின் மொத்த சனத் தொகையில் 2.5% ஆகும். அதேவேளையில் பெருமளவிலான நிலப்பகுதி சட்ட விரோத பயிர்ச் செய்கைக்காக பாவனையில் உள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக்கல் தொடர்பான தற்போதைய நிலவரம் மக்களில் ஒரு பங்கானோர் சட்ட பூர்வமாக்கலில் பெரிதும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தினூடாக, மருத்துவத்துறையின் விருத்திக்காக சட்டபூர்வமாக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவ் விடயத்திற்காக பல்வேறு நபர்களின் முயற்சி தூண்டுதலாக அமைகின்றன. குறிப்பாக Bengamuwe Nalaka தேரர் Dr. Wasantha Weliange அதேவேளையில் பாரம்பரிய மருத்துவ ஸ்தாபனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பல்வேறு நபர்கள் ஊன்றுதலாக உள்ளனர். குறிப்பாக இந்தப் பயிர்ச் செய்கையின் இறுதிப்.பொருள் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சட்டபூர்வமாக்கலிற்கு எதிர் விவாதங்களும் காணப்படுகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் மரிஜுவானா சட்டபூர்வாமாக அங்கீகரிக்கப்படுவதற்கு எதிராக உள்ளதாகவும், இதனை ஆதரிக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றத்துடன் கலந்துரையாடி, தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும் பிரதமர் தெரிவித்ததாக பிரத்தியேக குழுவொன்று அமைத்து, பிரிவு 8 சட்ட இல 11, 1984 – தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மரிஜுவானா/கேனபிஸ் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை ஆராய சிரேஷ்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் (COLOMBO OCT 7,2020)
ஏன் இலங்கையில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்?
கேனபிஸ் சட்ட விரோதமாக இருந்தாலும் மருத்துவ நலன் வேண்டி.அங்கிகரிக்க வேண்டும். மரிஜுவானா இயற்கையில் பல்வேறு நலன் கொண்ட தாவரமாகும். மேலும் அவை நூற்றுக்கும் அதிகமான canabinoids எனும் இயற்கை இரசாயன பொருட்களை கொண்டுள்ளது மேலும் இவ் இராசயன பொருட்களின் மனிதனின் பல்வேறு நோய்களுக்கான நிவாரணியாக அமைகின்றன. அதேவேளையில் புற்றுநோயைக் கூட நிவர்த்தி செய்யும் வல்லமை இதில் உள்ளது.
அதேவேளையில் நவலோக நிறுவனம் Ceyoka health care and pharmaceutical ஆவுஸ்திரேலிய கேனபிஸ்/மரிஜுவானா உற்பத்தி நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. Ceyoka Health Care நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி W. S. Premakumara தெரிவித்தது, கேனபிஸ் ஆனது விபத்தினால் அல்லது சத்திர சிகிச்சையினால் ஏற்படும் வேதனைக்கான வலி நிவாரணி ஆகும். அதேவேளையில் புற்றுநோய் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றும். அதேவேளையில் கேனபிஸ்ற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இவை சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட மருந்தகங்களில் மாத்திரமே கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத்துறையில் கேனபிஸ்ற்கு அதிகமான கேள்வி நிலவுவதாகவும், பல மருத்துவர்கள் மருத்துவத் தேவை வேண்டி உபயோகிக்கப்படும் கேனபிஸ் தனியார் பாவனைக்கு உகந்ததல்ல. மேலும் அவை பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டவை. மேலும் இந்த பறிமுதல் செய்யப்பட்ட கேனபிஸ் 4-5 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேலும் இறுதியாக கேனபிஸ் இல் அதிகமான மருத்துவ நலன்கள் உள்ளன. இவை இலங்கையில் அங்கீகரிக்கப்படுமாயின் இலங்கையின் மருத்துவத்துறைக்கு பெரும் ஊன்றுகோலாக விளங்கும்.
இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு எப்போதும் நாடி யுடன் இணைந்திருங்கள். கேனபிஸ் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்தினை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.