கலை கலாசாரத்தை நாடி இலங்கையர்கள் கொரிய நாடகங்களை முயற்சிக்க 5 காரணங்கள்

இலங்கையர்கள் கொரிய நாடகங்களை முயற்சிக்க 5 காரணங்கள்

2021 Aug 9

நானும் எனது நண்பர்களும் எங்களுக்கு கொரியன் நாடகங்கள் பிடிக்கும் என பிறரிடம் கூறும் போது “அவர்களுக்கு சிங்கியான கண்கள் தானே?” என்ற கேள்வியையும் “ஏன் உங்களுக்கு அதை விட வேறெந்த சிறப்பான நாடகங்களும் கண்களுக்கு தென்படவில்லையா?” என்ற கேள்வியையுமே பிறரிடமிருந்து பெறுகிறோம். இந்த மாதிரியான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்ப்பதற்காகவே இலங்கையர்கள் ஏன் கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும் என்ற இந்த பதிவினை எழுதுகிறேன்.

1.குறுகிய கால எல்லை

பொதுவாக இலங்கை தொலைகாட்சிகளால் ஔிபரப்பப்படும் நாடகங்கள் குறைந்தது 200 எபிசோட்களாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அதுவும் நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் மகன், பேரன் என அவரது தலைமுறையே அடுத்தடுத்த எபிசோட்களை பொறுப்பேற்று நடிக்க வந்து விடுகின்றனர். நீங்களும் பொறுமையாக காத்திருந்து நாடகத்தின் முடிவிற்காக ஏங்க நேரிடுகிறது. சரி அப்படியே காத்திருந்து நாடகத்தின் இறுதி வரை வந்தாலும் கதாநாயகன் குத்துபட்டு இறக்கும் போது திரையினை கருப்பு நிறமாக மாற்றி விடுகின்றனர். அதற்கு பிறகு கதாநாயகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை பார்ப்பதற்காக மேலும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதை எல்லாம் எழுதும் போதே எனக்கு பெருமூச்சு வருகிறது. ஆனால் கொரியன் நாடகங்களில் இந்த மாதிரியான எந்த ஒரு சிக்கலும் இல்லை.  இடைவெளி இல்லாத 16இலிருந்து 20 எபிசோட்களோடு நாடகம் முடிந்து விடுகிறது. கதாநாயகன், கதைகளம் என அனைத்துமே சிறப்பான முறையில் அமையப் பெற்றிருக்கும். உங்களை திகைப்பில் மூழ்கடிக்கக் கூடிய பல திருப்பங்களும் சுவாரஷ்யமான கதாபாத்திரங்களும் என அனைத்தும் அடங்கிய ஓர் நல்ல அனுபவத்தினை பெற்றுத் தரக் கூடிய ஓர் மந்திர ஜாலமாகவே கொரியன் நாடகங்கள் திகழ்கின்றன.

  1. சீஸி காதல்

பொதுவாக காதல் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகளை ஒரு முறை நினைத்துப் பாருங்கள். ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கின்றனர் ஆனால் சந்தித்த அந்த நாளிலேயே அவர்கள் படுக்கை வரை செல்வதில்லை. அவ்வளவு தான். இதே காட்சிகளையே மாறி மாறி ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுகின்றனர். நீங்கள் வித்தியாசமான மற்றும் அழகான காதல் காட்சிகளை பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் நபராக இருப்பின் கொரியன் நாடகங்களை பார்ப்பது சிறந்த ஓர் தெரிவாக இருக்கும்.  அது ஏனெனில் அழகான டேட்டிங்ஸ், மெய்சிலிர்க்க வைக்கும் காதல் காட்சிகள், நம்பிக்கையூட்டக் கூடிய காதல் வசனங்கள் மற்றும் சீஸியான ரொமான்ஸ் காட்சிகள் என உங்கள் இதயத்தை காதலால் கதகதப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பெக்காகவே கொரியன் நாடகங்களில் காதல் என்ற உணர்வு வடிவமைக்கப்படுகிறது.

  1. நடிகர்கள்

இது ஒரு ஏற்கக் கூடிய காரணம் என்று தெரியும். எது எவ்வாறாக இருப்பினும் கொரியன் நாடக நடிகர்கள் நடமாடும் கலையம்சம் மிக்க ஓவியங்கள். அந்த கண்கள், கன்னத்தின் அமைப்புகள் எல்லாம் இதயத்தினை திருடக் கூடியவை (அவர்கள் தமது உடலில் அங்கு இங்கு என பிளாஸ்திக் சர்ஜரி செய்வதால் இப்போது என்ன ஆகிவிடப் போகிறது? எப்படியிருந்தாலும் அது  PERFECTION தானே). இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இவர்களுக்கு வயதாகுவது தெரிவதே இல்லை. பெண்களே கூகுளுக்கு சென்று பை ரெயின் என்ற பெயரினை டைப் செய்து தேடிப் பாருங்கள் (இலங்கையை கவர்ந்திழுத்த புல் ஹவுஸ் நாடகத்தில் வரும் பூ சிறுவன்). இந்த பெயரினை தேடிப் பார்ப்பதனூடாக 2004 இலிருந்து இப்போது வரை அவருக்கு வயதாகவில்லை என்பதை புரிந்துக் கொள்வீர்கள். இவர்கள் வெறும் அழகினால் மட்டுமன்றி அவர்களது ஆடல், பாடல் மற்றும் மொடலிங் திறமைகளாலும் உங்களை தன்வசப்படுத்தக் கூடியவர்கள். உண்மையாகவே இவர்களை பிடிக்காமல் போவதற்கு என்ன தான் காரணம் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.

  1. புதிய கலாச்சாரம் ஒன்றை அனுபவிக்கலாம்

அமெரிக்க திரைப்படங்களினூடாக அமெரிக்கர்களின் துரித உணவு சாப்பிடும் வழக்கம் மற்றும் சிறிதளவு இன ரீதியான பிரிவுகள் போன்றவை அவர்களது கலாச்சாரத்தில் இருப்பதை எம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது. சரி! இப்போது நாம் வேறொரு புதிய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய நேரமிது. அதுவும் ஃபேஷன், பொப் இசை மற்றும் சாம்சங் மீதான தீராத அன்புடைய சுவாரஸ்யமான கொரியன் கலாச்சாரம். இவர்களது கலாச்சாரத்தில் உலகளாவிய ரீதியில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய பாகமான உணவினை பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கொரியன் நாடகத்திலும் குறைந்தது ஐந்து உணவு வேளைகள் காட்சிகளாக்கப்படுகின்றன. சாப்பாட்டு பிரியர்களே வாயில் எச்சிலூறிய படி கொரியன் நாடக எபிசோட்களை நீ்ங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய நேரமிது.

  1. வாழ்க்கை தத்துவங்கள்

நாம் இதுவரை பார்த்த காரணங்கள் அனைத்தையும் விட கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாக இங்கு காட்சிப்படுத்தப்படும் வாழ்க்கை தத்துவங்கள் காணப்படுகின்றன. காதல், நட்பு, பள்ளி மற்றும் அரசியல் போன்றவற்றை பற்றி, நாம் வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளக் கூடிய தத்துவங்களை கொரியன் நாடகங்கள் சிறப்பான முறையில் காட்சிகளாக்குகின்றன. உதாரணமாக கோட் ஒஃப் ஸ்டடி என்ற கொரியன் நாடகமானது பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவே எடுக்கப்பட்ட ஓர் நாடகமாகும் மற்றும் கிங் 2 ஹார்ட்ஸ் என்ற நாடகம் அளவுக்கடங்காத அன்பினை சித்தரிப்பதாகவும் வட-தென் கொரியாவினை ஒன்றாக இணைக்கும் தேசிய கனவினை சித்தரிப்பதாகவும் எடுக்கப்பட்ட ஓர் நாடகமாகும். நீங்கள் அனைவரும் நினைப்பதுப் போல் கொரியன் நாடகங்கள் வெறும் காதல் மற்றும் நட்பினை சித்தரிப்பவை கிடையாது மாறாக மக்களுக்கு தேவையான வாழ்க்கை தத்துவங்களை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவையாகவும் விளங்குகின்றன.

“நீங்கள் தினசரி பிரச்சினைகளை அமைதியான முறையில் கையாள விரும்பினால், கொரியன் நாடகங்களைப் பாருங்கள். அவை பெரிதும் துணை புரியும்”

– திருனி ஜி.(இலங்கை)

“கொரியன் நாடகங்கள் உங்களை கதகதப்பாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளக் கூடியவை. மன அழுத்தத்தில் இருக்கும் நம் அனைவருக்குமே கொரியன் நாடகங்கள் அவசயமாகும்”

நவிந்தி டபிள்யூ.(இலங்கை)

“கொரியன் நாடகங்கள் எனது நாட்டின் வரலாற்றை ஆக்கபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான வழியில் காட்சிப்படுத்துகின்றன. உண்மையில் இது போன்று வேறேதுவும் இல்லை. இலங்கையர்கள் ஒரு முறையாவது கொரியன் நாடகங்களை பார்க்க வேண்டும். நீங்கள் அதற்காக வருத்தப்பட வேண்டிய நிலை வராது”

சியோங் யூன் ஜோ. (தென் கொரியா)

“உண்மையான உலகிலிருந்து தப்பிக்க வைப்பவையாக கொரியன் நாடகங்கள் திகழ்கின்றன. உண்னமயான உலகிலிருந்து நாம் அனைவருமே ஒரு முறையாவது தப்பிக்க வேண்டும் என்பது கடவுளுக்கும் தெரியும்”

ஓவினி பி. (இலங்கை)

சரி இப்போது நீங்கள் ஏன் கொரியன் நாடகங்களை பார்க்க முயற்சிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்களிடம் உள்ளது. கொரியன் நாடகத்தின் மொழி மற்றும் நடிகர்களின் கண்களைப் பற்றி கேலி பேசி வாழ்பவர்களின் பேச்சினை எல்லாம் கேட்காது நீங்களாக ஒரு முறை முயற்சித்து பார்த்து முடிவெடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php