உணவை  நாடி சுகர் பர்கர்

சுகர் பர்கர்

2021 Aug 7

முன்பிருந்தே கொழும்பில் இருந்து வரும் சுகர் பர்கர் உங்கள் நாவிற்கு விருந்தளிப்பதற்காக தற்போது பல புதிய விடயங்களை உள்ளடக்கி தமது மெனுவினை புதுப்பித்துள்ளது. இவர்களது இந்த புதிய மெனுவினை ஊபர் ஈட்ஸிலும் காணலாம். மௌன்ட், கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 05, கொழும்பு 06, கொழும்பு 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஊபர் ஈட்ஸினூடாக பெற்றுக் கொள்ள முடியும். சுகர் பர்கரினர் உணவு தயாரிப்பு என வரும் போது தரத்திற்கு முதலிடம் அளிக்கின்றனர். இவர்களது உணவின் அளவும் எதிர்ப்பார்ப்பதை விட அதிகமானதாகவே இருக்கிறது.

பான வகைகள்

வெனிலா – ரூபாய் 500

இந்த வெனிலா மில்க் ஷேக் நிஜமாகவே மிகவும் க்றீமியாகவும் மில்கியாகவும் இருந்தது. இதை குடிக்கும் போது உருகிய ஜஸ்கிறீமினை சுவைத்த அனுபவம் நினைவிற்கு வந்தது அதனால் இதில் ஐஸ்கிறீமும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

ஸ்ட்ரோபரி – ரூபாய் 500

இது மிகவும் இனிப்பாகவும் ப்ரூட்டியாகவும் இருந்தது. இதனை குடிக்கும் போது ஸ்ட்ரோபரி ஐஸ் கிறீம் குடிப்பது போல் இருந்தது. பர்கருடன் குடிப்பதற்கு இது ஒரு சிறந்த பான வகையாகும்.

டபுள் சொக்கலேட் – ரூபாய் 550

இந்த பானம் கண்டிப்பாக சிறியவர் பெரியவர் என அனைவருக்குமே பிடிக்கும் ஏனெனில் இந்த மில்க் ஷேக் மிகவும் க்றீமியாகவும் சொக்கலேட்டியாகவும் இருந்தது. இதன் இனிப்பு தன்னை ஒரு ஈற்றுணவை  (dessert) சாப்பிட்ட திருப்தியை தந்தது.

குக்கீஸ் மற்றும் க்றீம் – ரூபாய் 500

இது மற்றைய பானங்களை விட திக்கானதாக இருந்தது. இதில் நிறைய குக்கீஸ் சேர்த்து அரைக்கப்பட்டுள்ளது. இதனை குடிக்கும் போது க்ரன்சியான ஒரு சுவையையும் அனுபவிக்க முடியும்.

ஐஸ்ட் கோபி

ப்ளெக் – ரூபாய் 350

ஒரு ஸ்ட்ரோங்கான கோபி அல்லது ஒரு புத்துணர்ச்சியை பெற விரும்புபவர்களுக்கு இந்த பானம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காபி கோடை காலத்திற்கு சிறந்தது.

ட்ரெடிஷனல் – ரூபாய் 400

இந்த காபி சற்று அதிகமாக பால் சேர்க்கப்பட்டதாக இருந்தது. அதற்கென இது ஒன்றும் மோசமான ஐஸ் காபி கிடையாது ஆனால் மெனுவில் மற்றைய சிறப்பான தெரிவுகள் இருக்கும் போது இதற்காக ரூபாய் 400 செலவிட நான் விரும்பவில்லை.

மொச்சா – ரூபாய் 500

இந்த மொச்சா பானமானது டார்க் சொக்கலேட்டின் சுவையினை கொண்டுள்ளது. அதிகமாக காபி விரும்பாத அதே சமயம் மில்க்ஷேக் போன்ற இனிப்பான சுவையினை விரும்புபவர்களுக்கு இந்த பானம் சிறந்த தீர்வாக இருக்கும்.

வியட்னமிஸ் – ரூபாய் 500

இது இரண்டு லேயர் கொண்ட பானமான வியட்னமிஸ் ஒரு அற்புதமான சுவையினை கொண்டுள்ளது. இதன் மேற்பகுதியில் கன்டஸ்டன் மில்க்குடன் ஐஸ் ப்ளெக் காபி உள்ளது. இந்த ஐஸ் காபியானது ஒரு பாரம்பரிய ஐஸ் காபிக்கு ஒப்பானதாக இருந்தது.

சால்டட் கெரமில் – ரூபாய் 550

அனைத்து மில்க் ஷேக்களிலும் பார்க்க இது கெரமில்லுடன் ஒரு அருமையான இனிப்பினையும் மில்க்கியான சுவையினையும் கொண்டிருந்தது. சால்டட் கெரமில்லில் இனிப்பின் மிகையான தன்மை சற்று இல்லாதது போலிருந்தது.

Appetizers

உங்களது பர்கர் அல்லது ஹொட்டோக்குடன் மேலதிகமான தெரிவுகளினை சேர்த்து கொள்வதற்கான நான்கு தெரிவுகள் காணப்படுகின்றன.

ப்ரன்ச் ப்ரைஸ் – ரூபாய் 350 / பெரியது ரூபாய் 500

பொதுவாக நீங்கள் பர்கருடன் ப்ரைஸ்களை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த ப்ரைகள் சரியான பதத்தில் தயாரிக்கப்படுவதோடு தேவையான அளவு பரிமாறப்படுகின்றன.

கரட் ப்ரைஸ் – ரூபாய் 350 / பெரியது ரூபாய் 500

இது தனித்துவமான மற்றும் புதிய ஒன்றாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இதை நாங்கள் ஸ்வீட் பொட்டேட்டோ என நினைத்தோம். இது சைட் ப்ரைஸுக்கான ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். நாங்கள் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் சுவைத்து உண்டோம்.

ஜன்கில் ப்ரைஸ் (ஸ்வீட் பொட்டேட்டோ) – ரூபாய் 250 / பெரியது ரூபாய் 400

இது திக்காக வெட்டப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்த போதும் க்ரிஸ்ப்பியாக இருந்தது. இதில் ஒரு சிறிய பகுதியே ஒரு நல்ல ஸ்நெக்காக இருக்க போதுமானது. நன்றாக தயாரிக்கப்பட்டுருந்ததோடு இதன் உட்பகுதி மென்மையானதாக இருந்தது. இவை சூடாறிய பின்னும் நொந்து வளையாது அதே வடிவமைப்புடன் காணப்பட்டது.

ஒனியன் ரிங்ஸ் – ரூபாய் 350

போட்டிகளேதுமே இல்லாமல் அனைத்திலும் இது எங்களுக்கு விருப்பமானதெனும் இடத்தினை பிடித்தது. ஸ்வீட்டாகவும், க்ரன்ச்சியாகவும், தனித்துவமான சேர்வையும் என இந்த ஒனியன் ரிங்ஸ் முழுமையானதாகவும் சிறப்பான சுவையுடனும் இருந்தது. நாங்கள் இது வரை சுவைத்த ஒனியன் ரிங்ஸ் அதிகமாக சமைக்கப்பட்டதாகவும் அல்லது போதுமானளவு சமைக்கப்படாதவையாகவுமே இருந்துள்ளன ஆனால் இந்த ஒனியன் ரிங்ஸ் வெளியில் க்ரிப்ஸியாக இருந்ததோடு முழுமையான ஒன்றாக இருந்தது.

பிரதானமானவை

நாங்கள் இவர்களது பத்து பர்கர் வகைகளையும் இரண்டு ஹொட் டோக்குகளையும் முயற்சித்து ஒரு உணவின் சொர்க்கத்திற்கே சென்று வந்தோம். புதுப்பிக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிறந்த சேர்க்கைகள் என சுகர் பர்கர் அனைவருக்கும் ஏதோ ஒன்றை தன்னகத்தே வைத்துள்ளது.

ஸ்மோக்கி ப்ளுஸ் (மாட்டிறைச்சி) – ரூபாய் 900

இதில் இருந்த திக்கான மாட்டிறைச்சி பெட்டியானது சுவையாகவும் மீ்ட்டியாகவும் ஜீஸியாகவும் இருந்தது. இது ஸ்மோக்கி பர்பிக்யூ சாஸ் சேர்க்கப்பட்டதோடு பெக்கனால் டாப்பிங் செய்யப்பட்டிருந்தது. இத்தோடு தக்காளி, வெங்காயம் மற்றும் சலாதோடு மொறு மொறுப்பான தன்மையினை சேர்க்கக் கூடிய கூறுகளும் என முழுமைப்படுத்தப் பட்டிருந்தது. இது பர்பிக்யூவினை அதிகம் விரும்புபவர்களுக்கு உகந்த தேர்வாக இருக்கும்.

நியூ யோர்க்கர் – ரூபாய் 800

இதில் பெப்பரோனி, மொசரல்லா, சௌடிட் வெங்காயம், மரினரா சாஸ் மற்றும் காலான் என உள்ளடங்கிய தனித்துவமான ஒரு ப்ளேவராக இது இருந்தது. இந்த பர்கர் ஏதோ இதனுள் பிட்சா இருப்பது போன்ற உணர்வினை தந்தது. நான் இதில் மேலதிகமான மொசரல்லா மற்றம் மெரினா சேர்த்து சாஸுடன் சாப்பிட்டது நிஜமாகவே நன்றாக இருந்தது. நீங்கள் உங்கள் பர்கரில் காலான் இருப்பதை விரும்புவீர்களானால் இந்த பர்கர் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஒவ்வொரு கடியிலும் காலான் மற்றும் பெப்பரோனியோடு சேர்ந்த சௌட்டி வெங்காயம் சிறப்பான ஒரு அனுபவத்தை பெற்றுத் தரக் கூடியது.

க்ளப் ட்ரொபிகனா – ரூபாய் 900

இந்த க்ளப் ட்ரொபிகனா பர்கரினுள் க்ரில் செய்யப்பட்ட அன்னாசித் துண்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள் இதனை முயற்சிக்காது ஒதுக்கி விட வேண்டாம். க்ரில் செய்யப்பட்ட அன்னாசி பர்கரில் இனிப்பான தன்மையினை சேர்ப்பதோடு காரமான ஐயோலி சாஸுடன் சிறப்பாக சேர்கிறது. இதன் மேலே சேர்க்கப்பட்டிருந்த பெகோன் உப்பு தன்மையினை தருவதோடு இதிலிருந்த மாட்டிறைச்சி பெட்டியானது மென்மையானதாகவும் ஜீஸியானதாகவும் இருந்தது. இது ஒரு ட்ரொபிகல் சைட்டில் இருக்கின்ற உணர்வினை தருகிறது.

த க்ளாசிக் – ரூபாய் 650

இந்த பர்கரில் அனைத்தும் இருந்தது. இதன் சிக்கன் பெட்டியானது திக்காகவும் ஜீஸியாகவும் நல்ல ப்ளேவருடனும் இருந்தது. முழுமையான ஒரு சுவையினை தரக்கூடிய வகையில் வெளியே கெரமலைஸும் உள்ளே க்ரில் சுவையினை தரக்கூடிய பெட்டியும் என காணப்பட்டது. சார்கார்ட், கெர்கின்ஸ், கெட்சப் மற்றும் மஸ்டர்ட் ஆகியவற்றை கொண்டு டொப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகை கூறுகள் இனிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளது. மிகையான தன்மையில்லாதவாறு ப்ன்க் மற்றும் பொல்ட்னஸ் இந்த பர்கரில் உள்ளது.

மச்சோ நச்சோ – ரூபாய் 850

இந்த பர்கர் எங்களுடைய மனங்களை அவ்வளவாக கவரவில்லை. இதிலிருந்த நச்சோ டொப்பிங்ஸான சல்ஸா, ஒலிவ்ஸ், பிக்கில்ட் ஜலபெனோஸ், சீஸ் மற்றும் டொர்டில்லா சிப்ஸின் கொம்பினேஷன் அனைவருக்கும் பொருந்தாது. டொர்ட்டில்லா சிப்ஸ் தனியாக சுவைக்க சிறந்தது ஆனால் பர்கருடன் சுவைக்கும் போது அது ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது. இந்த பர்கரின் கொம்பினேஷன் எங்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. அனைவரும் சுவைக்க கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்ட சேர்வைகளுடன் வெகு விரைவில் மாற்றம் செய்வார்கள் என நம்புகிறோம்.

எக்ஸோடிக் லெம்ப் – ரூபாய் 1350

இதிலிருந்த லெம்ப் பெட்டியானது மற்றைய எல்லாவற்றையும் விட தனித்து நின்றது. இதிலிருந்த க்யூமின் மற்றும் கொரியன்டர் மற்றும் லெம்ப் அனைத்தும் சேர்ந்து மென்மையாகவும் ஜீஸியாகவும் இருந்தமை உண்மையான மெடிடெரனியன் உணர்வினை தந்தது. இதில் எதுவுமே மிகையாக இருக்கவில்லை. இதிலிருந்த பெட்டியானது 90% சதவீதம் லெம்புடன் சில வெங்காயம், கரட் மற்றும் மசாலா சேர்வைகள் என சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ட்ஸாட்ஸிக் எனப்படும் யோகர்ட் உடன் வெள்ளரிக்காய் மற்றும் ஹர்ப் சாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டமை கொண்டு டொப்பிங் செய்யப்பட்டமை இன்னும் பிரமாதமாக இருந்தது.

ஹிப்பி க்ரெப் – ரூபாய் 1100

இந்த பர்கரில் நண்டு கேக்கானது அதாவது நண்டு பெட்டியானது காரமான சேர்வைகளினால் டொப்பிங் செய்யப்பட்டு ப்ரஷ்ஷாகவும் டேங்கி ஸ்லௌவாகவும் என வித்தியாசமானதாக கேட்பதிற்கு இருந்தாலும் இதன் சுவை அற்புதமாக இருந்தது. நீங்கள் ஒரு கடலுணவு பிரியராக இருந்தால் கண்டிப்பாக இது ஒரு சிறந்த தேர்வாகவும். மற்றைய நண்டு பெட்டிகளானது 60% உருளைக்கிழங்கு மற்றும் பிற சேர்வைகளே காணப்படும் ஆனால் இங்கு உள்ள நண்டு பெட்டியானது முழுதும் நண்டின் தசைகளால் தயாரிக்கப்பட்டு சுவையாகவும் ஜீஸியாகவும் இருந்தது. அதே சமயம் வெளியில் க்ரிஸ்ப்பியாகவும் காணப்பட்டது. இதிலிருந்த கஜுன் சாஸ் அனைத்திலும் ஒரு வகையான ஸ்மோக்கினஸ் சேர்ப்பதோடு காரத்துடன் நன்றாக சேர்ந்தது. அதே சமயம் இந்த பர்கரில் புதிய தன்மையும் மேலதிகமான க்ரன்ச்சியான தன்மையும் சேர்த்தது.

வெஜி ஐ அம் – ரூபாய் 550

உண்மையில் சிறந்த ஒரு சைவ பர்கர் இது தான். இது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருந்தது. இதன் பெட்டியில் மரக்கறிகளின் கலவையினை காணக்கூடியதாக இருந்தது. நாட்டில் பொதுவாக காணப்படும் இந்திய உருளைக் கிழங்கு பெட்டி மற்றும் ஃபலஃபல் ஆகியவற்றிலிருந்து விலகி தனித்து நின்றது. இதில் ஸவீட்டான க்ரில்ட் வெங்காயம் மற்றும் புதிய தக்காளி, லட்யூஸ் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளமை பர்கரை புதியதாக காட்சிப்படுத்தியது.

ப்ரிஸ்க்கி பர்ட் – ரூபாய் 850

நாஷ்வில் சிக்கனை முன்னோடியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பர்கரிலுள்ள சிக்கள் உள்ளே ஜீஸியான தன்மையையும் பர்கரின் வெளியே மொறுமொறுப்பாகவும் இருந்தது. இதிலிருந்த ஸ்மோக்கியான சூடு உங்கள் நாவிற்கு பொருத்தமானதாக இருக்கும். இதிலுள்ள ஸ்ரிரச்சா மயோ காரத்தினையும் டேங்கியானது க்றீமியான தன்மையினையும் பர்கரில் சேர்க்கிறது. அத்தோடு புதிய லட்யூஸ் மற்றும் பிக்கிள்ஸ் பர்கரினை முழுமைப்படுத்துகிறது.

த பிக் டேடி – ரூபாய் 1250

இதன் பெயரிற்கு ஏற்றவாறே இந்த பர்கரும் இருந்தது. இது நிஜமாகவே அற்புதமானது. நீங்கள் அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் இது உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். எங்களுக்கு பரிமாறப்பட்டதில் ஒரு சிக்கன் பெட்டி மற்றும் மாட்டிறைச்சி பெட்டி இருந்தது. இதில் மற்றையவற்றில் உள்ளது போல் பிக்கிள், தக்காளி, லட்யூஸ் மற்றும் வெங்காயம் காணப்பட்டதோடு மேலதிகமாக பெகோன் மற்றும் பொறித்த முட்டையும் இருந்தது.

சுகர் டோக் – ரூபாய் 550

நகரத்திலுள்ள மற்றைய ஹொட் டோக்கிலிருந்து இந்த ஹொட் டோக் தனித்திருந்தது. சார்க்ராட் முதல் மஸ்டர்ட் வரை என அனைத்தும் சேர்ந்த ஒரு நல்ல ப்ளேவரை இந்த ஹொட் டோக் கொண்டிருந்தது. இது நிஜமாகவே பெரிதாகவும் முழுமையானதாகவும் இருந்ததோடு ஒவ்வொரு பைட்டிலும் சிறப்பான ஒரு சுவையினையும் திருப்தியினையும் உணர முடிந்தது.

மன்ஹடன் டோக் – ரூபாய் 550

இந்த ஹொட் டோக் சீஸ், மஸ்டர்ட், கெட்சப், கெரமலைஸ்ட் வெங்காயம் மற்றும் பிக்கிள்ஸ் என முழுமைப்படுத்தப் பட்டிருந்தது. இது பிரபலமான மன்ஹடன் ஸ்டைல் ஹொட் டோக்கின் மற்றைய ஒரு வர்ஷனாக பிரதிபலிக்கிறது. இதிலுள்ள இனிப்பான கெரமலைஸ்ட் வெங்காயம் மற்றும் கெட்சப் ஆகியன மஸ்டர் மற்றும் பிக்கிள்ஸுடன் இணைந்து சிறப்பான ஒரு சுவையினை பெலன்ஸ் செய்ய உதவுகிறது.

குறிப்பு : எக்ஸோடிக் லெம்பினை முயற்சியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php