Uncategorized சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!

சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!

2022 Aug 29

பெண்களே உஷார்

சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகையான சவால்களை எதிர்நோக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் கருத்துநிலை காணப்பட்டாலும் உண்மையில் தாம்  பெண்ணாக பிறந்த காரணத்தினால் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நிலைமை காணப்படுகின்றது.

முன்னைய காலங்களில் குறிப்பாகஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு பெண் என்பவள் சமையல் செய்பவளாகவும் குழந்தை வளர்ப்பவளாகவும் சமூகத்தின் கண்ணோட்டம் மேலோங்கியிருந்தது. அத்தனை தடைகளைகளையும் தகர்த்தெறிந்து ஆணுக்கு பெண் எந்த வகையிலும் சளைத்தவள் இல்லை என்று சாதித்து காட்டிய இன்றைய காலத்திலும் பெண்கள் தமக்கான உரிமைகளை தக்கவைத்து கொள்வதில் போராடுகின்றனர்.

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியில் விளைவாக உருவாகிய தொலைபேசி சமூகவலைத்தளங்களை இலகுவில் நுகர்வதற்கு வித்திட்டது. பால்நிலை வயது வேறுபாடின்றி எல்லோராலும் நுகரக்கூடிய நிலைமை இருப்பினும் ஒப்பீட்டு ரீதியில் பெண்களிற்கான சுதந்திரம் முழுமையாக கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே!

சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமக்கான வாழ்கைத்துணையினை தெரிவு செய்யும் நிலைமை தற்காலத்தில் நிலவி வருகின்றது. முகநூல் மோகம் தற்போது இளையோரிடத்தே ரெண்டிங்காக பரவி வருகிறது. தமக்கு அறிமுகமே இல்லாத நபர்களை நம்பி காதல்  என்னும் வலையில் விழுந்து தமது பெற்றோரையும் இழந்து வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து இறுதியில் தற்கொலைக்குச் செல்கின்றனர்.

ரேட்டிங் என்னும் பாழாப்போன வெளிநாட்டு கலாசார ஊடுருவலால்  பெரும்பாலான பெண்கள் தமது மானத்தை இழந்து நிர்க்கதியாகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால்  அப்பாவிப்பெண்களின் வாழ்க்கை சீரழிந்து மனஉழைச்சல் ஏற்படவும் வழிசமைக்கிறது .

உண்மைக்கும் போலிக்குமான வேறுபாட்டை விளங்கி கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பது வேதனையே. காதல் என்னும் பெயரில் தமது இச்சைகளை அடைந்து கொள்ள பெண்களின் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது கூட இன்று மலிந்து கிடக்கிறது.

எங்கெல்லாம் பெண்  இச்சைக்கு இணங்கா விடுகிறாளோ அங்கெல்லாம் அவளின் அந்தரங்கம் அம்பலமாக்கப் படுகிறது. காட்டுமிராண்டித்தனமான பழிவாங்குதலால்; அவமானம் தாங்க முடியாமல்  எத்தனையோ பெண்கள் தற்கொலை கூட செய்துள்ளார்கள் என்றால் நாம் இருப்பது மனித பூமியிலா என்கின்ற எண்ணமும் இழையோடத்தான் செய்கின்றது.

பெண்எனும் அடிப்படையில் ஊடகத்தில் பணிபுரியும் பிரமுகர்கள் பாடகர்கள் அரசியல் ஆளுமைகள் எனப் பலரும் இதற்கு விதிவிலக்கல்ல. சமூகவலைத்தளங்களில் பெண்கள் ஆபத்துக்களை தான் பெரிதும் எதிர்நோக்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையே.தமது விருப்பத்திற்கு புகைப்படங்களை பதிவிட முடியாத நிலைமையே பெரிதும் காணப்படுகின்றது
காம வெறிகொண்ட காடையர்கள் பெண்களின் புகைப்படங்களை  மோபிஃங் செய்து பலரின் வாழ்வினையே கேள்விக் குறியாக்கியுள்ளனர். சிலர் இதற்கு இலக்காகி தற்கொலை புரிந்திருப்பினும் பலர் இதுவும் கடந்து போகுமென வீறுநடை போடத்தான் செய்கிறார்கள்.

முகப்புத்தகப்பாவனை பெண்கள் தமக்கு ஓரளவு பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அது தொடர்பான சரியான அறிவு பெண்களிற்கு அவசியம் இருக்க வேண்டும். தனது திறைமைக்கான தளமாகவே பார்க்க வேண்டுமே தவிர முகம் தெரியாத நபர்களிடம் தேவையற்ற உரையாடல்களை முற்றாக தவிர்த்துக் கொள்வது கட்டாயமானது. தமது புகைப்படங்கள் காணொளிகளை மற்றவர்கள் திருடுவதை தவிர்த்து லொக்கினை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

சமூகவலைத்தளங்களை நுகரும் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.தமது தனிப்பட்ட விடயங்கள் புகைப்படங்களை பதிவிடும் போது அவற்றினை தெளிவாக கையாளும் அறிவு கட்டாயம் இருக்க வேண்டும். ‘வெளுத்தது எல்லாம் பால் இல்லை’ என்பதை முதலில் உணரவேண்டும்தம்மை சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்களல்ல கயவர்கள் வாழும் பூமியிது

ஒரு லைக்கிற்கு ஆசைப்பட்டு எதிர்கால வாழ்க்கையை தொலைக்காமல் விழிப்பாக இருக்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் சாதாரண பெண்களில் இருந்து அரசியலில் பிரமுகர்களைக் கூட பெண் எனும் அடிப்படையில் அவர்களின் நடத்தைகளை விமர்சித்து பொய்யை கூட நம்ப வைத்து உண்மையாக்கும் நிலையே உலகிலுள்ளது.

இதையும் எதிர்கொண்டு விதிவிலக்காக சில பெண்கள் தமது கருத்துக்ளை வெளியிடுகின்றனர்.இருப்பினும் அனேகமான பெண்கள் பின்வாங்கும் நிலைமையே அதிகம் காணப்படுகின்றது.ஆண்களை எதிர்த்து சமூகவலைத்தளங்களில் போராட முடியாது பெண்கள் முடங்கிக்கிடக்கின்றனர். பெண்களை வசைபாடுவது பகிடிகள் தவறான சித்தரிப்புகள் செய்வதற்கு சமூகவலைத்தளங்களில் பஞ்சமேயில்லை.

பெண்வர்க்கத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் இவர்களின் எண்ணம் அருவருப்பானது.  ஆசை காட்டி பெண்களின் ஒட்டுமொத்த வாழ்வினையும் சின்னாபின்னமாக்கும் ஆயுதமாக தற்போது சமூகவலைத்தளங்களை தாராளமாக பயன்படுத்தி தாம் நினைத்ததை இலகுவில் அடைந்து விடுகின்றனர்.

பெண்களின் உணர்வுகளில் மனரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர் என்பது யாரும் மறுக்கமுடியாது.   பெண்கள் பற்றிய கொச்சையான சொற்களை பயன்படுத்தி குளிர்காய்ந்து அதை இன்பமாக கொள்ளும் அருவருப்பான மனநிலையுடன் ஆண்கள் இருக்கின்றனர்.

உலகம் மிகவும் சுருங்கிவிட்டது விரல் நுனியில் தொலைபேசி ஊடாக சகல வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. தற்காலத்தில் பள்ளி செல்லும் மாணவன் தொடக்கம் பல்லுப்போன கிழவன் வரை சமூகவலைத்தளங்களின் பாவனை தவிர்க்க முடியாத ஒன்றாக வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளது.

என்பது யாராலும் மறுக்கமுடியாது. ஆசைக்கு வயதில்லையே.தமது ஆசைகளை சமூகவலைத்தளங்களில் நிறைவேற்ற பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். சமூகவலைத்தளங்களில் இத்தகைய பிற்போக்கான எண்ணத்துடன் பெண்களை மிரட்டி அச்சுறுத்தி பணம்பறித்து அவர்களின் அந்தரங்க விடயங்கள் கவர்ச்சியை வெளியிடும் ஆண்களின் செயல்கள் வெட்கப்பட வேண்டியவையே!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ராகிராம் ,ரிக்ரொக்கில் எந்தநேரமும் active வாக இருக்கும் பெண்களே இதற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். தமது திறமைகளை வெளிப்படுத்தி தமக்கான ஒரு அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அடித்தளமாக சமூக வலைத்தளங்களில் தங்கியுள்ள பெண்களிற்கு அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை hacking செய்து அவர்களிற்கு முட்டுக்கட்டை போட்டு அவர்களின் நடத்தைகளை பகிரங்கமாக கேவலப்படுத்தும் நிலைமை கண்டிக்கத்தக்கது.

இவ்வாறான நிலைமை மாற்றமடைய வேண்டும் இவர்களிற்கு தண்டனை வழங்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு என்னும் பெயரில் மனச்சாட்சியற்ற இழிவான செயல்களை செய்யும் இத்தகையோர் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள்.  பெண்களிற்கான பாதுகாப்பு என்பது பறிக்கப்படுவதோடு அவர்களின்  உரிமைகளும் ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்படுகின்றது.

யாரைத்தான்  நம்புவது? கூடவே இருந்து குழிபறிக்கும் குள்ளநரிக்கூட்டத்தில் சுதந்திரமாக நடமாடுவது என்பதே சவாலானது. தடைகளை தகர்த்தெறிந்து அவமானங்களை தாண்டிதான் ஒவ்வொரு பெண்ணும் வாழவேண்டிய நிலைமை. பெண்உரிமை என்பது வெறும் பேச்சளவில் மட்டும் தானா! பெண்கள் ஆண்களால் சீண்டப்படுவதற்கு முடிவே இல்லையா! யுகங்கள் கடந்தும் இது தொடரத்தான் போகிறதா.

பெண்ணவள் தன் பாதுகாப்பை அவளாக உறுதிப்படுத்தாவரை இதுவொரு முடிவற்ற தொடர்கதைதான்!!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php