அனைத்தையும் நாடி  இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?

இதனால தான் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கழிவறை உபயோகிக்க சொல்றாங்களா?

2023 Jun 7

வெள்ளைப்படுதல் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாக காணப்படினும், அதற்கான முறையான சிகிச்சையளிக்க தவறுகையில் பாரிய நோய்நிலைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பற்றிய சரியான புரிதல் இல்லமால் இருத்தலே, அவர்கள் வெள்ளைப்படுத்தலுக்கான சிகிச்சை பெறாமல் இருப்பதற்க்கான ஓர் காரணமாகும். இந்த பதிவினூடாக வெள்ளைப்படுதல் பற்றிய தேவையான தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

இயற்கையாகவே கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து பிறப்புறுப்பை பாதுகாக்க கூடிய அமிலத்தன்மையுடைய நிறமற்ற பிசுபிசுப்புத் தன்மையுடைய திரவம் பெண்களின் பிறப்புறுப்பிலுள்ள செல்களின் சுவர்களில் சுரக்கும். இந்த திரவம் நிறமற்ற தன்மையுடன் வழமையாக ஒரு குறிப்பிட்ட அளவில் வெளியாகுவது சாதாரணமாகும். ஆனால் பிறப்புறுப்பில் கிருமி அல்லது நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் போது இந்த திரவமானது வழமையை விட அதிகமாக சுரக்க தொடங்கும். இதில் வழமைக்கு மாறான துர்நாற்றம் வீசுவதோடு நிறமற்ற தன்மை மாற்றமடைந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் வெளியாகும். இது வெள்ளைபடுதலில் கவனிக்க வேண்டிய அசாதாரண நிலையாகும்.

வெள்ளைப்படுதலுக்கு பின் மறைந்துள்ள காரணங்கள் என்ன?

முன்னர் குறிப்பிட்டது போல வெள்ளைப்படுதலை சாதாரண நிலை மற்றும் அசாதாரண நிலை என பிரித்து நோக்க முடியும். இவ்விரு நிலைகளுக்குமான காரணங்களை ஆராய்வோம்.வெள்ளைப்படுதலின் சாதாரண நிலை இது மாதவிலக்கு ஆரம்பித்த காலம் தொட்டு பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் அதாவது சூலகத்திலிருந்து சூல் வெளியாகி கர்ப்பபையை வந்தடையும் காலப் பகுதி, பெண்கள் கருவுற்று இருக்கும் காலம்,உடலுறவில் ஈடுபடும் தருணங்கள்,வெள்ளைப்படுதலின் அசாதாரண நிலை,சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள்,அசுத்தமான உள்ளாடைகளை அணிதல் மற்றும் பிறப்புறுப்பை முறையாக சுத்தம் செய்யாதிருத்தல். போன்றன கிருமி தொற்றுக்கு பாதையிடுகின்றன.ஆண்கள் உபயோகிக்கும் கழிப்பறையை உபயோகித்தல் [Trichomonas vaginalis] என்ற கிருமிகள் ஆணுறுப்பில் காணப்படுகின்றன. ஆண்கள் உபயோகித்து ஒழுங்காக சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகளை பெண்கள் உபயோகிப்பதனால் கிருமி தொற்றுக்குள்ளாகி வெள்ளைப்படுதல் தீவிரமடைகிறது.மருந்துகளை உட்கொள்ளல் -ஆன்டி பையோட்டிக், கருத்தடை மருந்துகள் போன்றவற்றை நீண்ட காலம் உபயோகித்தல்.நோய்நிலைகளுக்கு ஆளாகுதல் – பால்வினை நோய்கள், புற்று நோய்கள், கிருமி தொற்றுக்கள்.

வெள்ளைப்படுதலுக்கு தீர்வு என்ன?

சாதாரண வெள்ளைப்படுத்தலுக்கு கற்றாழை சாறு, நெல்லிக்காய் சாறு, எலுமிச்சம்பழச்சாறு, தோடம்பழச்சாறு போன்றவற்றை பருகி வருவதன் மூலம் மாற்றம் காண முடியும்.அசாதாரண வெள்ளைபடுத்தலுக்கு வைத்திய நிபுணர் ஒருவரை நாடி முறையான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக அமையும்.பெண்கள் வெள்ளைப்படுதலை குறித்து ஒளிவுமறைவின்றி வைத்திய ஆலோசனை பெற முன்வர வேண்டும். இந்த பதிவினூடாக வெள்ளைப்படுதல் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறோம். நாங்கள் இந்த பதிவில் இணைக்க தவறிய வெள்ளைப்படுதல் பற்றிய தகவல்களையும் வெள்ளைப்படுதல் பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

– பவித்ரா ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php