மனிதர்களை நாடி 30 வருட கால யுத்தம் பற்றி முற்றிலும் வேறுபட்ட தமிழ் திரைப்படம் – Demons...

30 வருட கால யுத்தம் பற்றி முற்றிலும் வேறுபட்ட தமிழ் திரைப்படம் – Demons in Paradise

2021 Jul 20

ஜூட் ரட்ணம், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர். அவருடைய ஒரு தசாப்தகால முயற்சி, 2017ம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படமாக வெளிவந்தது. அதனுடன் சேர்த்து திரைப்பட பிரியர்களை இலங்கை பார் ஈர்க்கச் செய்ததென்பது குறிப்பிடத்தக்கது.

30 வருட கால யுத்தம், பலரால் பேசி புளித்துப் போன விடயமாக ஆகிவிட்டது. எனினும் போரின் பிற்பாடான சமாதானக் காலப்பகுதியிலேயே அதிகளவிலான கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் எனப்பலர் தங்களது கருத்துகளை வெளியிடத் தொடங்கினர். அவ்வாறானதொரு படைப்பாகவே ஜூட் ரட்ணம் அவர்களின் இத் திரைப்படம் திகழ்கின்றது. மேலும் விடுதலைப்புலிகளை விமர்சித்த முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையும் இவரையேச் சாறும்.

ஆசிய BBC வலையமைப்புக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ‘போர் முடிவை நோக்கி நகர்ந்த போது, புலிகள் (விடுதலைப்புலிகள்) இப் போரில் தோல்வி அடைய வேண்டும் என நான் விரும்பினேன். என் மக்கள் கொல்லப்பட்டாலும் இது ஒரு முடிவிற்கு வரவேண்டும் என நினைத்தேன்’ மேலும் கூறுகையில் ‘எமது (தமிழர்களின்) குறைகளை ஒப்புக்கொள்ளுதல் மூலமாக மட்டும் தான் நாம் இவற்றில் இருந்து விடுபடமுடியும். மாறாக அதனை மறுத்து, குற்றம் சாட்டுவதையே தொடர்ச்சியாகச் செய்வோமானால், நாம் மாறாமல் அதனையே பின்தொடர்வோம்’ எனக் கூறி இருந்தார்

1983ம் ஆண்டு நடைபெற்ற கொடூர கலவரத்தில் இருந்து தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வடக்கு நோக்கி ஐந்து வயது சிறுவனாகப் பயணித்த ஜூட் ரட்ணம், போர் முடிவைத்தொடர்ந்து புலிகளின் நினைவூட்டும் விடயங்களைத் திரட்டிக்கொடு அதே ரயிலில் தென் இலங்கையை நோக்கி பயணமாகி வந்த கலைஞர் என்றே பலரால் போற்றப்படுகிறார்.

ஆரம்பத்தில் ரட்ணம் அவர்கள், தனது திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமான கதை அம்சத்தை வைத்தே இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அதவே தற்போது தலைசிறந்த படைப்பாக உருவெடுத்துள்ளது என்பது பெருமை அழிக்கக்கூடிய விடயமாகும்.

‘தமிழ் கிளர்ச்சியாளர்களை நசுக்கிய ஆட்சியாளர்களைக் கொண்ட காலப்பகுதியில் (இத்திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டதால்) இது சற்று தந்திரமாக இருந்தது. அதிகாரிகளினால் கதைக்கான Script கேட்கப்பட்டதனால் ‘ரயில் தொடர்பான திரைக்கதை’ திசை திருப்பும் அம்சமாக அமைந்திருந்தது. கேட்டபோது தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்ற இரு காதலர்களை அடிப்படையாகக் கொண்ட எழுதப்பட்ட காதல் கதை எனச் சொல்ல இயலுமாக இருந்தது. மேலும் இடத்திற்கான அனுமதிப் பத்திரம் பெறல், போராளிகள் அவர்கள் போர் நடாத்திய இடத்திற்கே கொண்டு செல்லல் போன்ற நிலைமைகளில் அதிகாரிகளுக்கு அவ் இடங்களில் தான் காதலர்கள் சந்தித்தனர் எனக் கூற முடியுமாகவும் இருந்தது’

சிங்கள ஆட்சியாளர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிகழ்ந்த இரத்தக்களரி சூழ்நிலைகள் மற்றும் படுகொலைகள் 2009 ஆண்டு முடிவுற்றது. இதனைத்தொடர்ந்து புலிகள் செய்தவற்றைச் சரி என்றும் புனிதமானதும் எனப் போற்றப்பட்ட காலப்பகுதியில், அவர்களின் உண்மையான முகத்தைக் காட்ட வேண்டும் என்ற உத்வேகம் இவர் மத்தியில் வெகுவாக இருந்தது. மேலும் இது, தமிழர்களுக்கான விடுதலைப்போராட்டம் என ஆரம்பிக்கப்பட்டாலும் இறுதியில் தன்னையே அழித்த தீவிரவாத செயல் என மிக அழகாக இத்திரைப்படம் காட்டி இருந்தது.

இப் போரைப் பல நபர்கள் பல விதமான கோணங்களில் பார்த்தனர் என்பதே உண்மை. அதிலும் அதிகமானோர் விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களைப் பாதுகாக்க உருவான கேடயம் என்றே எண்ணினர். எனினும் ஜூட் ரட்ணம் அவர்கள், இது பாதுகாப்பதற்கு உருவானது அல்ல தன் இனத்தையே அழிவுப் பாதைக்கு ஈட்டிச்சென்ற பாதை என்ற தனது கருத்தில் ஆணித்தரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Demons in Paradise என்ற படைப்பு உலகளாவிய ரீதியில் போற்றப்பட்டாலும் அதற்கு எதிரான விமர்சனங்களும் அதே வடிவில் அரங்கேறியது. வெளிநாட்டவர்களுக்குப் பிழையான விம்பத்தைக் காட்ட முயன்றாரென விமர்சிக்கப்பட்டாலும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சமாதானம் ஆகிய பண்புகளை எடுத்துரைத்த திரைப்படமாகவே இலங்கை வரலாற்றில் போற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php