2021 Aug 12
கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன ஆயுதங்களோடு வேகமாக ஓடுதல், ஈட்டி ஏறிதல், மல்யுத்தம் செய்தல், தேர் ஓட்டுதல் பொருட்களுடன் நீண்ட தூரம் தாவிக் குதித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே அக்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. அவைகள் பிற்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் ஆகவும் மாற்றமடைந்தன.
கி. பி 425 ஆம் ஆண்டில் ஒலிம்பியா நகரில் நடத்தப்பட்ட பழங்காலத்து ஒலிம்பிக் பற்றி பார்க்கையில்; ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள் 5 நாட்கள் கொண்ட திருவிழாவாக காணப்பட்டன. அவற்றில் முதலாம் நாள்- சட்டதிட்டங்களை மதிக்கும் விழாவாகவும், இரண்டாம் நாள்- தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம், மல்யுத்தம் போன்ற நடைபெறும். மூன்றாம் நாள்- கடவுளை வழிபடுவதாகவும், நான்காம் நாள்- ஏனைய போட்டிகள் இடம்பெறுவதாகவும், ஐந்தாம் நாளான இறுதி நாளில் வெற்றிக் கொண்டாட்டமாகவும் இந்த போட்டிகள் நடைபெற்றன.
அக்காலத்தில் நடைபெற்ற போட்டிகளை பார்க்கையில் ;
- ஈட்டி எறியும் போட்டி
இப் போட்டியானது நீண்ட தூரம் வீசுவதற்கு ஏற்ப ஈட்டியில் தோல் கயிறு இணைக்கப்பட்டிருக்கும். மேலும் உலோக கூர்முனை இல்லாத ஈட்டிகள் பயன் படுத்தப்படும்.
- தட்டெரியும் போட்டி
கண்டறியும் போட்டியானது 6 கிலோ கிராம் எடையுள்ள கல் அல்லது இரும்பை தூக்கி எறிய வேண்டும். இப்போட்டி கையெரி ஆயுத திறனை சோதிக்கும் போட்டியாக அன்றைய காலத்தில் கருதப்பட்டது. மேலும் உடல் முழுக்க ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு வெள்ளை நிற மண்ணை பூசிக் கொண்டு தான் அக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அக்காலத்தில் ஆடைகள் எதுவும் அணிவது கிடையாது.
- 400 மீட்டர் ஓட்டப்பந்தயம்
போர்க்களத்தில் வேகமாக ஓடுபவர்களை அடையாளம் காணும் போட்டியாக இது அமைந்தது. போர் கேடயம், தலை கவசம், கால் கவசம் அணிந்து ஓட வேண்டும் என்பதே கட்டாயமாக அமைந்தது.
- நீளம் தாண்டுதல்
இப் போட்டியானது இரும்புப் பொருள் அல்லது கல்லோடு ஆகிய பாரமான பொருட்களை கொண்டு ஓடிச் சென்று நீளம் தாண்ட வேண்டும். இலைக்கு தொடுவதற்கு முன் கனமான பொருட்களை வீசிவிட வேண்டும். இப்போட்டியில் கனமான பொருட்கள் பயன்படுத்துவதற்கான காரணம் :கனமான பொருளைவைத்துகொண்டு நீளம் தாண்டுவதால் அதிக தூரம் தாண்டி முடியும் என்பதனால் ஆகும்.
- பாங்க்ரத்தான் போட்டி
இப் போட்டியானது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய இரண்டையும் கலந்து தற்காப்பு போட்டியாக நடத்தப்பட்டது.
6. குத்துச்சண்டை
இப்போட்டி கையில் துணிகளை கட்டிக்கொண்டு எதிராளியை தாக்குவதாக அமைந்தன.
- மல்யுத்தப் போட்டி
மல்யுத்தப் போட்டி எதிர் போட்டியாளரின் தோள்பட்டை அல்லது இடுப்பு தரையில் படும்படி ஆக்ரோஷமாக சண்டை இடுவதாக அமைந்தது.
- ஓட்டப் பந்தயம்
ஆரம்பகால ஓட்டப் பந்தயங்களில் 200 மீட்டர் 400 மீட்டர் 2,400 மீட்டர் என பலவகையான ஓட்டப்பந்தயம் ஆக நடாத்தப்பட்டன.
9. தேர் பந்தயம்
ஆபத்தான அதேசமயம் பிரபலமான பந்தயம் இது. பந்தயத்தில் தேர் ஓட்டிகள் வென்றாலும் பரிசு தேரின் உரிமையாளருக்கே வழங்கப்பட்டது.
இவ்வாறான போட்டிகளும் இவ்வாறான விதிமுறைகளுமே ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகளில் காணப்பட்டன. மேலும் நடுவர்களை பொறுத்த அளவில் போட்டிகளில் ஏமாற்றுக்காரர்கள் கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த முறையில் சவுக்கடி வழங்குவதற்காக சிறந்த பயிற்சிகளை பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள். இறுதியில் போட்டியில் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது போட்டி வெற்றி மகுடங்கள் ஆனதே வெற்றி பெற்றவருக்கு ஆலிவ் இலைகள் கிரீடமாக கௌரவமாகவும் அணியப்பட்டு அதனோடு பரிசும் வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்றவருக்கு பரிசாக 500 திர்ஹம் கிரேக்க பணமும் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்ற நபருக்கு மட்டுமே பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்பது விசேடமாக குறிப்பிட தக்கது. அதுமாத்திரமல்லாமல் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசானது அந்நாட்டில் ஒரு நபரின் 15வருட சம்பளத்திற்கு சமனானதாகும் கருதப்பட்டது.
இவ்வாறே ஆரம்பகால ஒலிம்பிக் போட்டிகள் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.