மனிதர்களை நாடி ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்

ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்

2021 Aug 12

ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த பாடகர் , எழுத்தாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியரும் கூட. இவர் கலைத்துறையில் தனக்கென்று தனியான ஒரு முக்கிய இடத்தினை வைத்துக் கொண்டவர். இவர் இலங்கையின் ஒவ்வொருவரினதும் மனதில் பதிந்த சிறந்த கலைத் துறையினர்.

டி . வி பிச்சையப்பாவின் மகனான இவர் 1962   ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20   ஆம் திகதி கொழும்பில்  பிறந்தார். இவர் தனது சிறு வயதிலே நாடகங்களில் பங்கு வகிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.  பின்பு 1975ஆம் ஆண்டு இவர் வானொலியின் “சிறுவர் மலர் ” நிகழ்ச்சியினூடாக சிறுவர் நாடகங்களில் பிரபல்யமானார். இதன் பின்பே கலைத் துறையை நோக்கி பிரவேசித்தார்.

இவர் பன்முக ஆற்றல் கொண்டவர் என்பதை எல்லோரும் அறிந்ததே. இவர் தனது வாழ் நாளில் ஓவியர், நடிகர், பாடகர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் போன்ற சிறந்த திறமைகளை இவரிடத்தில்  கொண்டிருந்ததால் இவர் “பல்கலைத் தென்றல்” என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். மேலும் இவருடைய பாடும் திறமையால் மக்களுடைய மனதைக் கவர்ந்தவர் ஆவர்.

இவர் முதலாவதாக ” உறவுகள்” என்ற நாடகத்தின் மூலமாகவே ஒரு நடிகராக உருவாகினார்.  பின்னர் இவர் நிறைய மேடை நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் பிரபல்யமானவை இயக்குனர் சுஹைர் அமீத் அவர்களின் “தோட்டத்து ராணி பலதீஸ் உம்மா லடீஸ்”, வீரமணியின் “ஊசியும் நூலும் ” போன்றவை இவர் நடித்த நாடகங்களில் மிகவும் பிரபல்யமானவை மற்றும் சிறந்தவைகளாகும்.

இவர் ஒரு கவிஞராக, பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் தந்த கவிதைகள் மிகவும் பிரபல்யமானவை. மேலும் நகைச்சுவை உணர்வு கொண்டு பேசுவதிலும் திறமையானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் சிங்களத் திரைப்படங்களிழும் நடித்திருக்கிறார். இவருடை பாடல்கள் மற்றும் கவிதைகள் சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே இருந்தன.

அதே போல் ஓவியம் வரைவதிலும் திறமைகொண்டவர்  இவர்.  நவீன ஓவியம் வரைவதில் கொழும்பு மாவட்டத்தில் அவர் முன்னோடியாகவே திகழ்ந்தார். எனவே இவருடைய நவீன ஓவியங்கள் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது.

இவ்வாறு கலைத்துறையில் முன்னணியில் நின்ற ஸ்ரீதர் பிச்சையப்பா  கிழக்கு மாகாண கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கண்ணை இழந்தார்.  பின்பு 2010   ஆம் ஆண்டு பெப்ரவரி 20   ஆம் திகதி இறையடி சேர்ந்தார். எனவே இவர் இல்லாவிடினும் இவருடைய பல்கலைத் திறமைகளைக் கொண்ட இவருடைய திறமைகள் இன்னும் மக்கள் மனதில் அழியாத நினைவாக இருந்து கொண்டு இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php